Day

August 15, 2016

இனவாதத்துக்கு எதிரான பேரணியில் “சிங்கலே குழப்பம்!

இனவாதத்துக்கு எதிரான சமாதான பேரணியை முன்னெடுத்த அமைப்புக்கு எதிராக “சிங்கலே அமைப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது இதனால் பௌத்தாலோக மாவத்தையில் பதற்ற நிலை உருவானது. இன்று மாலை 4.30 மணியளவில் இந்த குழப்பநிலை ஏற்பட்டது. இனவாதத்துக்கு எதிரான இந்த பேரணியில் “சிங்கலே அல்ல மனுசலே” சிங்கரத்தமல்ல மனிதரத்தம் என எழுதபட்ட பதாதைகள் ஏந்தி சென்றமைக்கு எதிராகவே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சிங்கலே அமைப்பினர் நடத்தினர் என தெரிவிக்கப்பட்டது.

ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் வீழ்ந்த பிரான்ஸ் நாட்டு இளம்பெண்; பரிதாப மரணம்!

வெல்லவாய ராவணா எல்ல நீர் வீழ்ச்சியில் தவறி விழுந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பரிதாபமாக மரணமானார். இன்று திங்கட்கிழமை(15) 2.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பிரான்ஸ் பிரஜையான மரினா சூசி (22 வயது) என்ற பெண்ணே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். சடலம், பண்டாரவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. தனது கணவனுடன் சுற்றுலா வந்த இவர் ராவணா எல்ல நீர் வீழ்ச்சியை படம்பிடித்துக் கொண்டிருந்தபோதே இந்த எதிர்பாராத விபத்து நிகழ்ந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை...
Read More

நுவரெலியாவில் வீதியில் வீழ்ந்து கிடந்தவர் பரிதாப மரணம்; அவரை காப்பாற்ற முயற்சித்த இளைஞர்கள்!

கவனிப்பாரற்று வீதியில் விழுந்து கிடந்த  ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்த வெளிமாவட்ட இளைஞர்கள்.இது தொடர்பாக தெரியவருகையில் நுவரெலியா நகரில் 13-8-2016 சனிக்கிழமை மாலை நகரின் வீதியோரத்தில் தவறி விழுந்து கிடந்த  ஒருவரை பொதுமக்கள் எவரும் கவனிக்கவில்லை. அவருக்கு உதவுவதற்கு எவரும் முன்வரவில்லை. வெளி மாவட்டமான மீரிகம நாவல பிரதேசத்திலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா வந்திருந்த இளைஞர் குழுவினர் முதியவர் வீதியில் விழுந்து கிடந்ததை கண்டு அவரை உடனடியாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தனர்.அனுமதிக்கப்பட்ட   உயிரிழந்துள்ளதாக அவரை பரிசோதித்த வைத்தியவர்கள்...
Read More

பொருளாதார மையத்தை வவுனியா தேக்கவத்தையில் அமைப்பதற்கு ஏகமனதாக தீர்மானம்!

வவுனியாவுக்கான பொருளாதார மையத்தை வவுனியா தேக்கவத்தையில் அமைப்பதற்கு ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா அரசாங்க அதிபர் எம்.பி.ஆர்.புஷ்பகுமார தலைமையில் கிராமியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன், கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், வடமாகாண முதலமைச்சரின் செயலாளர் வி.கேதீஸ்வரன் ஆகியோர் தலைமையில் வவுனியா அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், குறித்த இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் வவுனியா விவசாய சங்கப் பிரதிநிதிகளும், வவுனியா மாவட்டத்தை தளமாகக் கொண்ட மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்று, தத்தமது...
Read More

யோஷித்தவின் மேலும் 572.8 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் அரசுடமை!

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால், கால்டன் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக உரிமை கோர முடியாத மேலும் 572.8 மில்லியன் ரூபா சொத்துக்கள் இருப்பதை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். ஒளிப்பரப்பு உபகரணங்களுடன் கூடிய 80 மில்லியன் ரூபா பெறுமதியான நடமாடும் ஒளிப்பரப்பு ட்ரக் வாகனம், லங்கா ஒரிக்ஸ் லீசிங் நிறுவனத்தின் இலக்கம் 2200060234 என்ற கணக்கில் இருக்கும் 6 மில்லியன் ரூபா பணம், ஹம்பாந்தோட்டை சிறிபோபுர கிராமத்தில் இருக்கும் 4.8 மில்லியன் ரூபா...
Read More

சிகரட் வெற்வரியை 90 வீதத்தால் அதிகரிக்கவும்! ; இளைஞர்கள் கோரிக்கை (Photos)

அரசாங்கம் மதுபாவணை மற்றும் சிகரட் வெற்வரியை 90 வீதமாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மதுசாரம் மற்றும் புகைத்தல் விளம்பரங்களை அம்பலப்படுத்தும் இளைஞர் அணியினரின் ஏற்பாட்டில் போதைப்பொருள் எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வுடன் கூடிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று நோர்வூட் பொயிஸ்டன் தோட்டத்தில் 15-8-2016 திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மது ஒழிப்பு தொடர்பிலான வீதி நாடகங்களும் இடம்பெற்றன. இதில் பெரும்பாலான இளைஞர் யுவதிகள் கலந்துக்கொண்டனர். சுகாதார அமைச்சரும் கௌரவ ஜனாதிபதி அவர்களும் சிகரட் கம்பனிகளிடமிருந்து 100 க்கு 90...
Read More

உடனடி கலந்துறையாடல்! அதிரடி முடிவு! ; அமைச்சர் இராதாகிருஸ்ணன்

க.பொ.த உயர்தர பரீட்சையில் வெளிமாவட்டங்களில் இருந்து மாணவர்கள் குறைந்த வெட்டுப்புள்ளி அடிப்படையில் பல்கலைகழகத்திற்கு புள்ளிகளை பெரும் நோக்கில் நுவரெலியா மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் பரீட்சைக்கு தோற்றியுள்ளமை காரணமாக எழுந்துள்ள பிரச்சனைக்கும் எதிர்காலத்தில் இதற்கு முற்று புள்ளி வைக்கும் நோக்கில் பரீட்சை திணைக்களத்தின் பிரதம ஆனையாளர் நாயகம் புஸ்பகுமார கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்கள், அமைச்சரின் செயளாலர்கள் உடனான கலந்துறையாடல் ஒன்று கல்வி அமைச்சில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் கலந்துறையாடிமைக்கு இனங்க மேற்படி பிரச்சனை குறித்து முறைபாடுகள்...
Read More

புஸ்ஸல்லாவ மெல்போட் தோட்ட கருமாரியம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழா! (Photos)

புஸ்ஸல்லாவ மெல்போட் தோட்ட கருமாரியம்மன் ஆலய வருடாந்த ஆடி மாத ஆடி வேல் திருவிழா ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ க.மகேஸ்வர குருக்கள் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பால்குட பவனி, வசந்த மண்டப பூஜை, சுவாமி வெளிவீதி வலம் வருதல், பறவைக்காவடி, பக்தர்களுக்கான பிரசாதம் வழங்கல் என்பன நடைபெற்றன. இந்நிகழ்வுகளில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். பா.திருஞானம்

நாமல் ராஜபக்ஸ மீண்டும் கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவினரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார் நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமான நிறுவனம் ஊடாக முறைகேடாக கிடைத்த பணத்தில் ஹேலோகோப் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்தமை சம்பந்தமாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைகளுக்காக நாமல் ராஜபக்ச இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேதனை பெருவெளியில் நம்மை தள்ளிவிட்டு நேற்று காலை பத்து மணிக்கு பறந்துபோன நா.முத்துக்குமார் தனது மகன் ஆதவன் நாகராஜனுக்கு எழுதிய கடிதம்!

“அன்புள்ள மகனுக்கு அப்பா எழுதுவது இது நான் உனக்கு எழுதும்முதல் கடிதம். இதைப்படித்துப்புரிந்து கொள்ளும் வயதில் நீ இல்லை. மொழியின் விரல் பிடித்து நடக்கப்பழகிக்கொண்டு இருக்கிறாய்…. வயதின் பேராற்றாங்கரை உன்னையும் வாலிபத்தில் நிறுத்தும். சிறகு முளைத்த தேவதைகள் உன் கனவுகளை ஆசீ்ர்வாதிப்பார்கள். பெண் உடல் புதிராகும். என்தகப்பன் என்னிடமிருந்து ஒளித்து வைத்த ரகசியங்கள் அடங்கிய பெட்டியின் சாவியை நான் தேட முற்பட்டதைபோல நீயும் தேடத் தொடங்குவாய். பத்திரமாகவும் பக்குவமாகவும் இருக்க வேண்டிய பருவம் அது. உனக்கு த்...
Read More
error: Content is protected !!