Day

August 17, 2016

ராஜஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்ட ஸ்ரீ இராஜ இராஜஸ்வரி அம்மனின் திருவுருவச் சிலை அட்டனில் பிரதிஷ்டை!

அட்டன் ரொத்தஸ் சிவன் ஆலயத்தில் ராஜஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்ட ஸ்ரீ இராஜ இராஜஸ்வரி அம்மனின் திருவுருவச் சிலை 17.08.2016 அன்று விசேட பூஜைகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் இடம்பெற்ற விசேட பூஜைகளில், பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், பிரமுகர்கள் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர். (க.கிஷாந்தன்)

சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி, மாவட்ட அமைப்பாளர்கள் 40 பேர் நியமனம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் 40 பேர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் இன்று முற்பகல் பதவிப் பிரமாணம்செய்துகொண்டனர். இந்த நிகழ்வு ஜனாபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. புதிய தொகுதி அமைப்பாளர்கள் 16 பேரும், மாவட்ட அமைப்பாளர்கள் 24 பேர்களும் ஜனாதிபதியிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக மற்றும் அமைச்சர் லக்ஷமன் யாபா அபேவர்தன ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

கட்டுக்கதைகளை நிறுத்துங்கள் – நா.முத்துக்குமாரின் சகோதரர் விளக்கம்!

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் குறித்து கடந்த சில நாட்களாகப் பல்வேறு செய்திகள் யூகங்கள் அடிப்படையில் வெளியாகிவருகின்றன. சிலர் அவரது மஞ்சள் காமாலை நோய்க்கு காரணம் விடமுடியாத பழக்கவழக்கங்கள் என்றனர். இன்னும் சிலர் அவர் தனது சிகிச்சைப் பணம் செலுத்த முடியாத நிலையில் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த யூகங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல் நா.முத்துக்குமாரின் சகோதரர் நா.ரமேஸ்குமார் கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- “ஆம் நண்பர்களே… அம்மா என்றழைக்கத் தெரியாத வயதில்...
Read More

அட்டன் செனனில் முன்பள்ளி மாணவர்களின் சிறுவர் சந்தை! (photos)

அட்டன் செனன் முன்பள்ளி ஆசிரியர் மாணவர்கள் இணைந்து நடத்தப்பட்ட சிறுவர் சந்தை நிகழ்வு இன்று இடம்பெற்றது. ஸ்ரீ கிருஸ்ணா முன்பள்ளி பொறுப்பாளர் பாத்திமா ரிமோசா தலைமையில் இடம்பெற்றது. மாணவர்களின் செயற்பாடுகள் தொடர்பான தேர்ச்சி அறிக்கையும் வழங்கபட்டது.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான வகுப்புக்கள், கருத்தரங்குகள் நடத்தத் தடை!

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் நடாத்தத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்தத் தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 21ம் திகதி தரம் ஐந்துக்கான புலமைப் பரிசில் பரீட்சை நடத்தப்பட உள்ளது. தேசிய பரீட்சைகள் நடத்தப்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாக தனியார் வகுப்புக்கள் கருத்தரங்குகள் உள்ளிட்டவற்றை தடுக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய இந்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடையை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பரீட்சைகள்...
Read More

நுவரெலியாவில் 18, 19 ஆம் திகதிகளில் விவசாய மற்றும் விலங்கு வளக் கண்காட்சி!

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் உணவு உற்பத்தி தேசிய வேலைதிட்டத்தின் ஊடாக மத்திய மாகாண விவசாய, சிறிய நீர்பாசன, விலங்கு உற்பத்தி மற்றும் அபிவிருத்தி கமநல அபிவிருத்தி, மீன்பிடி சுற்றாடல் விவகாரம், இந்துகலாசாரம், மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் ஏற்பாட்டில் ஆகஸ்ட் மாதம் 18ம்.19 ஆம் திகதிகளில் மத்திய மாகாணத்தின் முதல் தடவையாக மலையக விவசாய மற்றும் விலங்கு வளக் கண்காட்சி இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின்...
Read More
error: Content is protected !!