Day

August 22, 2016

அட்டன் டன்பாரில் பல நிலங்கள் மாத்தளை வியாபாரிக்கு சொந்தமாக உள்ளது; ஸ்ரீதரன் காட்டம்!

நுவரெலியா மாவட்டத்தில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுக்குச் சொந்தமான காணிகளை வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாதென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார். 22.08.2016  நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் கருத்துரைத்த போது : தோட்டத் தொழிலாளர்களுக்கு காணிமறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகள் வழங்கக்கூடாதென்று இங்கு பேசப்பட்டது. இதற்கு எனது எதிர்ப்பை தெரிவிக்கின்றேன்.’ ஏழைத்...
Read More

நுவரெலிய மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்; இதொகா உட்பட கூட்டணி எம்பிக்கள் பங்கேற்பு!

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் ராதாகிருஸ்ணன், இதொகா தலைவர் முத்து சிவலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான், மாகாண அமைச்சர் ராமேஸ்வரன், அமைச்சர் நவீன் திசாநாயக்க மாகாணசபை உறுப்பினர்களான ஸ்ரீதரன் ராஜாராம்   உட்பட   பலர் கலந்து கொண்டனர்.   டி.சந்ரு.

அட்டனில் குப்பைகளை கொட்டுவதற்கு உரிய இடம் அமைச்சர் நவீன் உறுதி!

அட்டன் நகரசபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு உரிய இடம் ஒதுக்கப்படாத காரணத்தால் மக்கள் குடியிருப்புக்கு அண்மித்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் மக்கள் அசௌகரியத்தை நோக்கினர் மேற்படி விடயம் தொடர்பாக அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் கவனத்துக்கு கொண்டு வரபட்டது. மேற்படி விடயத்தை ஆராய்ந்த அமைச்சர் உடனடியாக உரிய இடம் ஒன்றை பெற்றுத்தருவதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். மு. இராமசந்திரன்.

குடிகாரர்களின் அட்டகாசம்; கிளர்ந்தெழுந்தனர் புரூன்ஸ்வீக் தோட்ட மக்கள்!

    மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புரோன்ஸ் வீக் சின்னதோட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களும் பொதுமக்களும் தோட்ட பகுதிகளில் சில குழுவினர் மது அருந்திவிட்டு திருவிழாக்களின்போதும் ஏனைய விசேட நிகழ்வுகளின்போதும் குழப்பம் விளைவிக்கின்றமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மஸ்கெலியா – புரோன்ஸ்வீக் சின்னதோட்டத்தில் கோவில் திருவிழாக்களோ வேறு எந்த விழாக்களோ பொதுமக்களால் நடாத்த முடியவில்லை. அங்கு இருக்கின்ற ஒரு குழுவினர் இவ்விழாக்களின்போது மது அருந்திவிட்டு குழப்பம் விளைவிக்கின்றனர். அத்தோட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற...
Read More

தரையில் கிடப்பது எனது மகன் அல்ல, எனது இதயம். ஒரு பேஸ்புக் பதிவால் நாட்டையே உலுக்கிய பெண்!

இந்தியாவிலுள்ள புனேவை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அந்த நாட்டையே உலுக்கியுள்ளார். சுவாதி சிதால்கர் என்ற பெண், தனது பேஸ்புக் பக்கத்தில் தான் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதையும், தனது நாற்காலிக்கு பின்னால், தரையில் தனது குட்டி மகன் படுத்து பால் புட்டியை வாயில் வைத்திருப்பதை போன்ற புகைப்படத்தை தனது முகநூலில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, தரையில் கிடப்பது எனது மகன் அல்ல, எனது இதயம். அவனுக்கு உடல்நிலை சரியில்லாத...
Read More

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் பிணையில் விடுதலை!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றின் ரூபா 125 மில்லியன் பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான குற்றச்சாட்டிலேயே நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் கடந்த 15ஆம் திகதி நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையிலேயே இன்று கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே நாமல் ராஜபக்ஷ உட்பட மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

மக்கள் நலன் கருதி கடவுச்சீட்டுத் திணைக்களம் இடமாறுகிறது!

மக்கள் நலன் கருதி, வினைத்திறனுடன் கூடிய செயற்பாட்டினை முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு, குடிவரவு – குடியகழ்வுத் திணைக்களம், பத்தரமுல்ல, ‘சுஹுருபாய’ புதிய கட்டத்தொகுதிக்கு, எதிர்வரும் 29ஆம் திகதியிலிருந்து இடமாற்றப்படவுள்ளது. ஆகையால், கொழும்பு -10, ஆனந்த ராஜகருணா மாவத்தை இல: 41 இல், அமைந்துள்ள பிரதான காரியாலம் மற்றும் கண்டி, மாத்தறை, வவுனியா ஆகிய பிரதேச காரியாலயங்கள், எதிர்வரும் 26ஆம் திகதியிலிருந்து மூடப்படும். வெளிநாட்டுப் பயண அனுமதிப்பத்திரத்திற்கான சாதாரண சேவை, விசா விநியோகம், கடவுச்சீட்டைப் புதுப்பித்தல் மற்றும் குடியுரிமைச்...
Read More

இந்தியா செல்வோருக்கு விசா இலவசம்! ; இந்திய அரசு

இந்தியாவிற்கு புனித யாத்திரைகளை மேற்கொள்ளும் இலங்கை யாத்திரை செல்வொருக்கான விசா இலவசமாக வழங்குவதற்கு இந்திய அரசு தீர்மானித்துள்ளதாக இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகர் ஆர்.கே. சிங்கா தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பிரதி இந்தியத்தூதுவர் ஆரிநாதம் பாக்சீ மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முதலாவது செயலாளர் ஈசா ஸ்ரீவாத்வச ஆகியோரின்ஏற்பாட்டில் அண்மையில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே உயர்ஸ்தானிகர் ஆர்.கே.சிங்கா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்மூலம் இலங்கை மற்றும் ஏனைய நாடுகளுக்கு இந்தியா மீதான நல்லெண்ணத்தை உருவாக்க உள்ளதாகவும், இந்தியாவின் சுற்றுலா...
Read More

பாக்கு சார்ந்த உற்பத்தி பொருட்கள் இறக்குமதிக்கு தடை!

பாக்கு சார்ந்த உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்குமாறுகோரி அமைச்சரவை பத்திரம் ஒன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். தொற்றா நோய்களை கட்டுபடுத்துவதற்கு புகையிலை மற்றும் பாக்கு பாவனையை தடை செய்வதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். இதனால் பாக்கு சார்ந்த பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு எதிர்காலத்தில் தடைவிதிக்கப்படும் எனவும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாமலின் விசாரணைப் பட்டியலில் அனார்கலி மற்றும் ரோஸியின் மகன்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல சிங்கள நடிகையுமான அனார்கலி ஆகர்ஷா மற்றும் முன்னாள் அமைச்சரான ரோசி சேனாநாயக்கவின் மகன் திஸக்யா மாயா சேனாநாயக்க குறித்து நிதி மோசடி விசாரணை பிரிவு அவதானம் செலுத்தியுள்ளது. 2013ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக விசாரணை பிரிவின் உட்தரப்பு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. முன்னாள் கண்காணிப்பு உறுப்பினரான சஜித் வாஸ் குணவர்தனவின் பொறுப்பின் கீழ் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு...
Read More
error: Content is protected !!