Day

September 18, 2016

தினேஷ் சந்திமாலுக்கு அவசர சத்திரசிகிச்சை!

இலங்கை கிரிக்கெட் வீரர் தினேஷ் சந்திமாலுக்கு அவசர சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று(17) மெர்க்கன்டைல் கிரிக்கெட் போட்டியின் போது உபாதைக்கு உள்ளாகியமையினால் அவசராமக தனியார் வைத்தியசாலை ஒன்றில் குறித்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மேலும் தெரியவருகிறது. அவரது வலக்கையின் விரலிலேயே குறித்த உபாதை ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சிபிஐ விசாரணையில்லாமல் ராம்குமார் உடலைப் பெறமாட்டோம் – தந்தை பரமசிவம் அறிவிப்பு!

சென்னை – சிறையில் தற்கொலை புரிந்து கொண்டதாகக் கூறப்படும் சுவாதி கொலை வழக்குக் குற்றவாளி ராம்குமாரின் உடல் தற்போது சென்னை இராயப் பேட்டை பொது மருத்துவமனையில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. அவரது உடலைப் பார்க்க அனுமதி வேண்டும் என ராம்குமாரின் வழக்கறிஞர்கள் மருத்துவமனையில் இன்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையைச் சுற்றி சாலை மறியல்களும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் ராம்குமாரின் தந்தை பரமசிவம், ராம்குமார் நல்ல மன நிலையில் இருந்ததாகவும் தனது மகன் சிறைச்சாலையில் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்....
Read More

ராம்குமார் தற்கொலை : தொடரும் மர்மங்கள்!

இன்று ஞாயிற்றுக்கிழமை புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சுவாதி கொலை வழக்கு குற்றவாளி ராம்குமார் மரணம் தொடர்பில் பல கேள்விகளும், மர்மங்களும் எழுந்துள்ளன. அவரது தந்தை பரமசிவம் ராம்குமார் சிறையில் கொலை செய்யப்பட்டதாக தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ராம்குமார் மரணம் தொடர்பில் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய நேரப்படி இன்று மாலை 4.45 மணியளவில் ராம்குமார், மின்கம்பியைக் கடித்து தற்கொலை முயற்சிக்கு...
Read More

அமெரிக்கா பயணமானார் ஜனாதிபதி!

ஐக்கிய நாடுகள் சபையின் 71ஆவது பொதுச்சபை கூட்டத் தொடரில் கலந்துகொண்டு, 21ஆம் திகதி உரையாற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா (நியூயோர்க்) நோக்கி பயணமானார்.

தலவாக்கலை மடக்கும்புற தேயிலைத் தோட்டத்தில் அட்டை கடியால் தொழிலாளர்கள் அவதி! (Photos)

தலவாக்கலை மடக்கும்புற தோட்ட நடுப்பிரிவில் அட்டை கடியால், பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக இத்தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். தேயிலை மலைகளில் தொழிலாளர்கள் தொழில் செய்யும் போது தமது உடலில் அட்டை கடிப்பதால் உடம்பில் பல நோய்கள் ஏற்பட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு அட்டைக்கடித்த இடங்களில் உள்ள காயங்கள் குணமாக வில்லை இதன் காரனமாக பல தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டு இருப்பதால் தொடர்ச்சியாக தொழில் செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமது தொழிலை மேற்கொள்ளும் போது அட்டை கடிக்கின்ற இதேவேளை, இரத்தம்...
Read More

அட்டன் லெதண்டியூர் புனித பாத்திமா அன்னை ஆலயம் திறப்புவிழா! (photos)

அட்டன் லெதண்டியூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தை கண்டி மறை மாவட்ட ஆயர் மேதகு ஜோசப் வியானி  பெர்ணாண்டோ அண்டகை அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. 18.09.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெற்ற இந் நிகழ்வில்   அட்டன் திருச்சிலுவை ஆலயம் பங்கு தந்தை அரூட்பனி லெஸ்லி  பெரேரா  உதவி பங்குதந்தை அருட்பனி சவேரியர் உட்பட லெதண்டியூர் இறைமக்கள் மற்றும்  பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர் நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்.

புஸ்ஸல்லாவை பதற்ற நிலை சம்பவ இடத்துக்கு சென்ற அமைச்சர் திகா மற்றும் வேலுகுமார்! (படங்கள் இணைப்பு)

புஸ்ஸலாவை தோட்ட இளைஞனின் மரணம் தொடர்பில் ஆவேசமுற்ற மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். மேற்படி மரணம் தொடர்பாக கேள்வியுற்ற அமைச்சர் திகாம்பரம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகியோர் புஸ்ஸலாவை பொலிஸ் நிலையத்துக்கு சென்று சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர் இதன் போது எடுக்கப்பட்ட படங்களை கீழே காணலாம். பா. திருஞானம்.

எங்கள் சொந்தங்கள் கொல்லப்படுவதை அனுமதிக்க முடியாது; புஸ்ஸலாவையில் அமைச்சர் திகா!

நோர்வூட் பகுதியில் நடைபெற்ற நிகழ்வை புறக்கணித்தவிட்டு நானும், வேலுகுமாரும் இங்கு ஓடிவந்தோம். எங்கள் சொந்தங்கள் சாகடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபருடன் நான் பேசினேன். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். தற்கொலையென பொலிஸார் சொல்கின்றனர். ஆனால், அடித்தே கொலைசெய்யப்பட்டார் என மக்கள் கூறுகின்றனர். உண்மையை மூடிமறைக்கமுடியாது. பிரதேச பரிசோதனை அறிக்கை வந்ததும் வேலையை காட்டுவோம். குற்றவாளிகள் ஒளியமுடியாது; தாஜிதீன் வழக்கை சிறந்த உதாரணமாக எடுக்கலாம். சட்டத்தையும், ஒழுங்கையும் மீறும் வகையில் இளைஞர்கள் செயற்படக்கூடாது....
Read More

அட்டன் மல்லியப்பு பகுதியில் பயணித்த கார் வீதியை விட்டு விலகி விபத்து!

அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கார் ஒன்று விபத்துக்குளாகியுள்ளது. நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி வந்த கார் அட்டன் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மல்லியப்பு பகுதியில்   18.09.2016 மதியம் 1 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. மழை காரணமாக வீதி அதிக வழுக்களாக இருந்தபோதும் அதிக வேகம் இந்த விபத்துக்கு காரணம் என பொலிசார் தெரிவித்தனர். மண் மேட்டில் மோதி மேற்படி கார் பலத்த சேதமுற்றபோதும் இதில் பயணித்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது! நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்.

புஸ்ஸலாவை பொலிஸ் நிலையத்தில் மரணித்த தோட்ட இளைஞனின் மரணத்தில் சந்தேகம்!

புஸ்ஸலாவை பொலிஸ் நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படும் ரொத்சைல்ட் தோட்டத்தை சேர்ந்த இளைஞனின் மரணத்தில் பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். புஸ்ஸலாவை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக அவர்கள் கோஷமிட்டு நீதி கோரியுள்ளனர், அந்த இளைஞனின் மரணம் தற்கொலை இல்லை என அவர்கள் அங்கு தெரிவித்துள்ளனர். புஸ்ஸலாவை நுவரெலிய பிரதான பாதையை மறித்து பொது மக்கள் மறியல் போராட்டம் செய்தனர் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேற்படி இளைஞனின் மரணத்தை அடுத்து இரண்டு பொலிசார் கடமையில் இருந்து இடை...
Read More
error: Content is protected !!