Day

September 27, 2016

பதில் பிரதம நீதியரசராக நீதிபதி பிரியசாத் சத்தியப்பிரமாணம்!

உச்ச நீதிமன்ற நீதிபதி பிரியசாத் டெப் பதில் பிரதம நீதியரசராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இன்று(27) காலை ஜனாதிபதி காரியாலயத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி செயலாளர் பி.பீ. அபேகோன் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் வீரர் ரமித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து!

கொழும்பு, கறுவாத்தோட்டம் பகுதியில், கடந்த வியாழன்(22) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் ரமித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக பறிமுதல் செய்யுமாறு போக்குவரத்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச தகவல் அறியும் மாநாடு ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்!

சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச மாநாடு நாளை(28) கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சுடன் இணைந்து அரசாங்க தகவல் திணைக்களம் இதனை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் குறித்த இந்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது. இதில் 200ற்கும் மேற்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். நாளையும் நாளை மறுதினமும் இந்த மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காவிரி விவகாரத்தில் மீண்டும் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு!

பெங்களூர் – காவிரியில் இருந்து தமிழகத்துக்கு மேலும் 2 நாட்களுக்கு 6,000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் படி கர்நாடக அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது. அதேபோல், கர்நாடகாவின் மனுத்தாக்கலை எதிர்த்து தமிழகமும் மனுத்தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாடலாசிரியர் அண்ணாமலை காலமானார்!

பிரபல பாடலாசிரியர் அண்ணாமலை நெஞ்சுவலி காரணமாக இன்று மாலை சென்னையில் காலமானார். நடிகர் விஜயின் ‘வேலாயுதம்’, ‘கோலிசோடா’, அண்மையில் வெளியான விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் பாடல் எழுதியவர் பாடலாசிரியர் அண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது.

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் புதைகுழி!

படுகொலை செய்யப்பட்டு, பொரளை கனத்தை மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள, சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலம், ஐந்தரை வருடங்களின் பின்னர், இன்று 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தோண்டியெடுக்கப்பட்டது. அன்னாருடைய சடலம், புதைக்கப்பட்டிருந்த புதை குழியைப் படங்களில் காணலாம்.

அட்டன் கேப்ரியல் மகளிர் பாடசாலையில் தெள்ளுப்பூச்சி; இரண்டு தினங்களுக்கு கல்வி நடவடிக்கைகள் ஒத்தி வைப்பு

  அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட புனித கெப்ரியல் மகளிர் வித்தியாலயத்தில் தெள்ளு பூச்சி கடியால் 260 மாணவிகளில் சில மாணவிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக அட்டன் வலய கல்வி பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். குறித்த மகளிர் வித்தியாலயத்தில் தரம் 1 ஏ.பீ, தரம் 2 ஏ.பீ மற்றும் தரம் 5 ஏ.பீ ஆகிய வகுப்புகளை சேர்ந்த மாணவிகள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை இவ்வித்தியாலயத்தில் கல்வி பயிலும் க.பொ.த உயர் தர கலை பிரிவு மாணவிகள் கற்கும் வகுப்பிலும்...
Read More

பொகவந்தலாவ நகருக்குள் மலசலகூட கழிவு நீர் பிரதேச சபை கவனிக்குமா?

பொகவந்தலாவ நகரபகுதில் சுகாதார சீா் கேடு நிலவுதாக பொதுமக்கள் உள்ளிட்ட பாடசாலை  மாணவா்கள் குற்றம்சுமத்துகின்றனா்.  அம்பகமுவ பிரதேச சபைக்கு சபைக்கு உட்பட்ட பொகவந்தலா நகரில் உள்ள மலசல கூடம் நிரம்பி வழிந்து பிரதான வீதிக்குள் புகுந்துள்ளது இதனால் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர் . இவ்விடயம் குறித்து அம்பகமுவ பிரதேசசபை மற்றும் பொகவந்தலாவ பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பாிசோதகருக்கு அறிவித்து எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளபடவில்லையென பொகவந்தலாவ நகா்புறமக்கள் மேலும்   தெரிவித்தனர்  . இந்த விடயம் தொடா்பில் சம்பந்தபட்ட...
Read More

மலையக கல்வி அபிவிருத்திற்காக திரண்டு எழுந்த புஸ்ஸல்லாவ கல்வி சமூகம் ! (photos)

  தற்போது மலையத்தில் கல்வி புரட்சி ஏற்பட்டுள்ளது என்றால் மிகையாகது. காரணம் படித்த   சமூகம்   அதிகரித்து வருகின்றமையும் கற்றவர்களும் மலையகத்தில் இருந்து உயர் நிலைக்கு உள்வாங்கபட்டவர்களும் அரசியல் ரீதியாக கல்வி அமைச்சுக்களை பெற்றவர்களும் மலையகத்திற்கு முறையாக சேவை செய்வதாகும். அந்த  வகைளில் மலையத்தில் இருந்து கொழுப்பு போன்ற இடங்களுக்கு சென்று வர்த்தகத்தில் உயர் நிலை அடைந்தவர் மலையக கல்வி வளர்ச்சிகக்கு பல்வேறுபட்ட உதவிகளை பல்வேறு அமைப்புகளின் ஊடாக சேவை செய்து வருகின்றனர். அந்த வகையில் புஸ்ஸல்லாவ...
Read More

நானுஓயாவில் உலக சுற்றுலா தினம் !

2016 உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு 27.09.2016 நானுஓயா   வாகன   சாரதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வைபவம் ஒன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் முன்னால் நுவரெலியா நகர முதல்வர் மஹிந்த தொடம்பெகமகே, நுவரெலியா பொலிஸ் அதிகாரி ஜி. விமலதாஸ, நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த, உதவி பொலிஸ் அதிகாரி அபேசிங்க, நானுஓயா புகையிரத பொறுப்பதிகாரி திலங்க வெலிகம மற்றும் சாரதிகள் சங்க உறுப்பினர்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கலந்துகொண்டனர். 1885 மே மாதம் 21ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட...
Read More
error: Content is protected !!