Day

October 4, 2016

ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்!

தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வழங்குமாறு வலியுறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் நாளை மறுதினம் 6 ஆம் திகதி தலவாக்கலை நகரில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் அறிவித்துள்ளார். கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார். இலங்கையின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை தொடர்ந்து வழக்கிவரும் இறப்பர் மற்றும் தேயிலை ஆகிய...
Read More

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா சென்றடைந்தார்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்கும் முகமாக, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றடைந்த பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கான இந்தியத் தூதர் வை.கே. சின்ஹாவினால் வரவேற்கப்பட்டனர். நாளை காலை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதுடன், இந்தியா பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இடையிலும் இருதரப்புப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. இதேவேளை,...
Read More

புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டன!

இம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமை பரீசில் பரிட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன. www.doenets.lk என்ற இணையத்தள முகவரியில் பெறுபேறுகளை பார்வையிட முடியும். இதேவேளை Exam <இடைவௌி> சுட்டெண்” என்றவாறு டைப் செய்து 7777 என்ற இலக்கத்துக்கு அனுப்புவதன் மூலம் அலைபேசி ஊடாக பரீட்சை பெறுபேறுகளை தெரிந்துகொள்ள முடியும். தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 2907 பரீட்சை மத்திய நிலையங்களில் 840926 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாவலப்பிட்டி இம்புல்பிட்டியவிலும் தொழிலாளர் போராட்டம்!

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை கோரி 9ஆவது நாளான இன்றும் கறுப்பு கொடியை ஏந்தியவாறு தமக்கு 1000ரூபா சம்பளத்தை தருமாரு நாவலப்பிட்டி இம்புல்பிட்டி தோட்டத்தை சேர்ந்த மக்கள் இன்று எதிர்ப்பினை வெளியிட்டனர் . இந்த வகையில் மலையகத்தில் நாவலப்பிட்டி இம்புல்ப்பிட்டி தோட்ட தொழிலாளர்கள் கல்லாரு லோட் டிவிசன் மீனாச்சி மலை மேக்கனக்கு கிரின்வுட் ஐந்து தோட்டங்களை சேர்ந்த     தொழிலாளர்கள்   குறித்த தோட்டத்தில் கறுப்பு கொடிகளையும், பதாதைகளையும் ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பி நாவலப்பிட்டியை நோக்கி சென்று நாவலப்பிட்டி...
Read More

மல்லியப்பு சந்தியில் ஸ்ரீதரன் தலைமையில் தொழிலாளர் தேசிய சங்கம் கவனயீர்ப்பு போராட்டம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்குமாறு கோரி தொழிலாளர் தேசிய தேசிய அமைப்பாளரும் மாகாணசபை உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தலைமையிலான அச்சங்கத்தின் ஆதரவாளர்களுடன் அட்டன் மல்லியப்பு சந்தியில்   கவனயீர்ப்பு   போராட்டம்   இன்று ஆரம்பிக்கப்பட்டது . பெருந்தோட்ட தொழிலாளா்களுக்கு 1000ம்ருபா சம்பளம் வழங்குமாறு கோரி   முதலாளிமாா் சம்மேளனத்திற்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட உள்ள தொழிற்சங்கங்களுக்கும் எதிா்ப்பினை   தெரிவித்து   அட்டன் மல்லியப்பு சந்தியில் தொழிலாளா் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபை  உறுப்பினருமான  சோ.ஸ்ரீதரன் மற்றும் தொழிலாளா்...
Read More

நுவரெலியா நகர வீதியில் மண்டையோடுகள் வர்த்தகர்கள் அதிர்ச்சி; பொலிஸார் விசாரணை !

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா பிரதான நகரத்தில் உள்ள கடைகளுக்கு முன்பாக மனித மண்டை ஓடுகள் இன்று 04 ம் திகதி காலை 09 மணியளவில் பொலிஸார் மீட்டுள்ளனர். வழமையைபோல வியாபாரிகள் தங்களின் வியாபார நடவடிக்கைகளை நேற்றைய தினம்( 03 ம் திகதி) இரவு 09 மணியளவில் முடித்துவிட்டு கடைகளை மூடிய பின்னர் வீடுகளுக்கு சென்றுள்ளனர். இந்த மண்டையோடுகளுடன் சிங்களத்தில் மலையக தொட்டது தொழிலாளர் விதிகளை மறித்து போராடுவது தொடர்பான எதிர்ப்பு கடிதமொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது . இன்று...
Read More

கொய்யா மரம் முறிந்து விழுந்து பலியான மெராய தமிழ் மகா வித்தியாலய மாணவன் !

(இரண்டாம் இணைப்பு படங்களுடன் ) பாடசாலை மாணவன் ஒருவன் கொய்யா பழம் பறிக்க சென்று உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை சென்ரெகுலஸ் தோட்டத்தில் 03.10.2016 அன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேற்படி சிறுவன் கொய்யா பழத்தை பறிக்க மரத்தில் ஏறியபோது கொய்யா மரம் சரிந்து விழுந்ததில் குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சிறுவன் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பிரதேசவாசிகளின் உதவியோடு சிறுவனை...
Read More

தொழிலாளர் தொடர்ந்து போராடுவதா இல்லையா? நாளை இறுதி பேச்சில் முடிவு தெரியும் ?

இன்று பெருந்தோட்ட முதலாளிமார்களுடன் இடம்பெற்ற பேச்சுக்கள் எவ்வித இணக்கப்பாடும் இன்றி முடிவுற்றதாகவும் நாளை இறுதி பேச்சுக்களில் இறுதியான முடிவு எட்டப்படலாம் என தோட்ட தொழிற்சங்க வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது . தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பிலான கூட்டொப்பந்த பேச்சுவார்த்தை, இன்று நண்பகல் 12.30 மணியளவில் கொழும்பு நாரஹேன்பிட்டியுள்ள, தொழில் அமைச்சில் தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தலைமையில் நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையில் முதலாளிமார் சம்மேளனம் மற்றும் பிரதான தொழிற்சங்கங்கள்   பங்கு பற்றின .  

சுய நலனா தொழிலாளார் நலனா? தீர்க்கமான முடிவுக்கு வாருங்கள் தொழிற்சங்கங்களிடம் பிரிடோ கோரிக்கை !

கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் அளித்த வாக்குறுதிகள் நிறைவேறாமல் தாமதாகி வருகையில் தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கியிருக்கிறார்கள். தொழிலாளரின் இந்த நடவடிக்கை அவர்கள் பொறுமை இழந்து தொழிற்சங்கங்கள் மீது நம்பிக்கை வைக்க முடியாது என கருதும் நிலை தோன்றியுள்ளது. தலைமைத்துவம் இல்லாமல் சுயமாக இவ்வாறான போராட்டங்களில் மக்கள் ஈடுபடுவதையும் தமக்கு நியாயமன சம்பளம் கிடைப்பதை தொழிற்சங்கங்கள் உறுதிசெய்யாவிட்டால் தொழிற்சங்க சந்தாவை நிறுத்தப்போவதாகவும் தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது ஒரு ஆபத்தான நிலையாகும். தொழிலாளர்களின் ஒரே பலமாகவும் சக்தியாகவும்...
Read More

பாகுபலி 2: அம்மாடியோவ்.. ராணாவா இது?

ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி தேசிய விருது பெற்ற ‘பாகுபலி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகின்றது. இந்நிலையில், அத்திரைப்படத்தில், பல்வாள்தேவன் கதாப்பாத்திரத்தில் நடித்த ராணா டகுபதி, பாகுபலி 2-ம் பாகத்திற்காக இன்னும் பிரம்மாண்டமான உடற்கட்டைக் கொண்டு வர கடும் முயற்சி செய்து வருகின்றார். அதில் ஒரு மாதிரிக்காக இன்று தனது பேஸ்புக்கில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் ராணா. அதைப் பார்த்த பலரும் ஆச்சரியமடைந்து வருகின்றனர். அவ்வளவு பிரம்மாண்டமான அளவில் அவரது உடற்கட்டு காணப்படுகின்றது. இதனிடையே,...
Read More
error: Content is protected !!