Home > கட்டுரை > பெண்பிள்ளைகள் மேலதிக பாதுகாப்பிற்கு உரிமையுடையவர்கள் என்பதை சமூகம் உணர வேண்டும்! (ஓக்கேடாபர் 11 சர்வதேச சிறுமியர் தினம் )

பெண்பிள்ளைகள் மேலதிக பாதுகாப்பிற்கு உரிமையுடையவர்கள் என்பதை சமூகம் உணர வேண்டும்! (ஓக்கேடாபர் 11 சர்வதேச சிறுமியர் தினம் )

 

அனைத்துலக சிறுவர் தினம் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படும் வேளையில் பெண்பிள்ளைகள் பாலியல் ரீதியான துஸ்பிரயோகங்களுக்கும், கல்வி, முன்னேறுவதற்கான வாய்ப்புக்;கள் ;ஆகியவற்றில் அதிகமான பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவதை கருத்தில் கொண்டு ஐ.நா சபை 2012 ஆண்டு முதல் ஒக்டோபர் மாதம் 11ம் திகதியை உலக பெண் பிள்ளைகள் தினமாக அல்லது சிறுமியர் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

மற்றைய துறைகளில் உள்ள பிள்ளைகளை விட பெருந்தோட்ட பகுதிகளில் அண்மைக்காலம் வரையில் பெண் ;பிள்ளைகளின் உரிமைகள் மிகமோசமான முறையில் மீறப்பட்டுவந்தன.
அவர்கள் மீது பல்வேறு உடல் ரீதியானதும் பாலியல் ரீதியானதுமான துஸ்பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. பெண்பிள்ளையே வெளியிடங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள்.

படிப்படியாக இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டாலும் இந்த நடைமுறை முற்றாக மாறிவிட்டது என்று சொல்ல முடியாத அளவுக்கு அவ்வப்போது பெண்பிள்ளைகள் வேலைக்கு அமர்த்தப்படுவது, பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தபடுவது தொடர்பான சம்பவங்கள் நடக்கின்றன.

குடும்பங்கள் பொருளாதார ரீதியான பாதிப்பு உள்ளாக்கப்படும் போது பெண்பிள்ளைகளின் கல்விக்கு முடிவு கட்டுதல், பெண்பிள்ளைகள் வயதுக்கு வரும் போது அவர்களின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அதிக காலம் பாடசாலை செல்வதில் இருந்து தடுத்தல், விளையாடும் உரிமையை மறுத்தல் என பல்வேறு வழிகளில் அவர்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது.

மேலும் பெருந்தோட்டப் பகுதிகளில் பாடசாலைகளில் கூட பெண் பிள்ளைகள் மீது பாலியல் ரீதியிலான துஸ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து வருகன்றன. ஒரு; சில ஆசிரியர்களின் கீழ்த்தரமான செயல்பாடுகளை வெளியில் சொல்ல முடியாத நிலையில் பல பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள.;

பெண்பிள்ளைகளுக்கு பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய பாடசாலைகளில் பெண் பிள்ளைகளை உடல் ரீதியாகவோ உளரீதியாகவோ பாதிப்பை ஏற்படும் ஆசிரியர்கள் எவ்வாறு பாடசாலைகளில் பணியாற்ற தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறாகள் என்ற கேள்வியை சமூகம் இன்னும் ஆணித்;தனமாக கேட்காமல் இருப்பது ஏன் புரியாத புதிராகவே இருக்கிறது.

இதைவிட தற்போது பெருந்தோட்டப்பகுதியில் பெருமளவான தாய்மார் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சென்றுள்ள நிலையில் அக்குடும்பங்களில் தந்தைமார் இதுவரை பொறுப்புகளை கவனித்த தாய்மார் இல்லாத நிலையில் தமக்கு மேலதிக பொறுப்பு உள்ளது என்பதை உணராமல் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதால் அக்குடும்பங்ளிலுள்ள பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கெல்லாம் காரணம் பெண ;பிள்ளைகளுக்கும் சமஉரிமை உண்டு என்பதையும் அவர்கள் மேலதிக பாதுகாப்பிற்கு உரிமையுடையவர்கள் என்பதை சமூகம் இன்னும் ஏற்றுக் கொள்ளாமையே காரணமாகும். இந்த விடயம் தொடர்பாக சமூகம் ஆக்கபூர்வமாக சிந்திக்கவேண்டும். பாடசாலையில் பெண் ஆசிரியைகள் பெண்பிள்ளைகளை பாதுகாக்கும் பொறுப்பு தமக்கு கட்டாயமாக உள்ளது என்பதை உணர்ந்து அதற்காக அணிதிரள வேண்டிய கட்டாய நிலை உள்ளது.
பாடசாலைகளில் பெண் ஆசிரியைகளே அதிகமாக உள்ள நிலையில் அவர்கள் இது விடயத்தில் விழிப்புடன் செய்படுவது ஒரு சமூக கடமையாகும்.

இந்த பின்னனியில் பெண்பிள்ளைகளை பாதுகபாப்பது ஒரு சமூகரீதியான பொறுப்பாகும் என்பதை வலியுறுத்தும் முகமாக“பெண்பிள்ளைகள் மேலதிகபாதுகாப்பிற்குஉரிமையுடையவர்கள்’;”என்ற தொணிப்பொருளில் பிரிடோ நிறுவனமும் பிரிடோ சிறுவர் கழகங்களும் இம்மாதம் முழுவதும ;பல்வேறு நிகழ்வுகளை நடத்தவுள்ளன.

இதே வேளையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுள்ள குடும்பங்களில் பெண்பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை தந்தைமாருக்கு அறிவுறுத்தவும், இக்குடும்பங்களில் உள்ள பெண்பிள்ளைகளை தங்கள் பாதுகாப்பை தாங்களே உறுதிப்படுத்திக்கொள்ள அவர்களை பயிற்றுவிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மலையக சமூகம் தமது சமூகத்திலுள்ள பெண் பிள்ளைகள் சம உரிமையுள்ளவர்களாக வாழும் சூழலை அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்தால் மட்டுமே அவர்களுக்கு எதிரான வன்முறைகளையும் துஸ்பிரயோகங்களை யும் தடுக்க முடியும்.

ஆக்கரப்பத்தனை நிருபர் புஸ்பராஜ்.

Leave a Reply

error: Content is protected !!