Day

October 16, 2016

காலத்தின் தேவையை உணர்ந்து எம் உரிமைகளை வென்றெடுப்பது அவசியம் – சமூக ஆய்வாளர் ஏ.ஆர்.நந்தகுமார்!

ஒரு நாட்டில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுபான்மை என்ற நிலையில் மலையக மக்கள் தங்களுடைய அரசியல் சமூக பொருளாதார கலாசார இருப்பை நிலைநிறுத்திக்கொள்ளவது அச் சமூகத்தின் கடப்பாடாகும், கிட்டத்தட்ட 2 சகாப்தங்களாக எம் சமூகத்தின் மீதான அடக்குமுறைகள் பாரபட்சங்கள் மற்றும் தேசிய அபிவிருத்தில் ஓரங்கட்டப்பட்டுள்ளமை இன்றும் முழுவதுமாக குறைந்ததாக கூறுவதற்கில்லை அது ஏதோ ஓர் வடிவத்தில் தொடர்ந்த வண்ணம் இருப்பது கண்கூடு. ஆனால் எம் உரிமைகளை வென்றெடுக்க இருந்த தடைகளை களைவது கடந்த காலங்களில் கடினமாக இருந்திருந்தாலும் ஆங்காங்கே...
Read More

தோட்டங்களை நடத்த முடியாவிட்டால் பிரித்து கொடு” அல்லது அரசிடம் கொடு” பெ . பிரதீபன்!

ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்கவேண்டும் என அரசாங்கமும் தொழிற்சங்கமும் வழியுருத்திவருகின்ற நிலையில் முதலாளிமார் சம்மேளனம் அதை மறுத்து வருகின்றது தோட்ட நிர்வாகத்தை நடத்த முடியாவிட்டால் தோட்ட நிலங்களை தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் இல்லையெனீல் தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் நுவரெலிய மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார். அட்டனில் 16 இன்று நடைபெற்ற ஊடகசந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார் தொழிலாளர்களின் சம்பள போராட்டமானது தற்போது அரசியல் போராட்டமாக மாற்றம் பெற்று வருகின்ற...
Read More

ஆயிரம் ரூபா சம்பளத்துக்கு எனது அமைச்சுதான் தடை என்றால் அதை துறக்கவும் தயங்க மாட்டேன்; அமைச்சர் திகா!

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கையான ஆயிரம் ரூபாய்க்கு எனது அமைச்சு பதவி தடை என்றால் அதை உறுதி செய்யட்டும் மக்களுக்காக அமைச்சு பதவியை திறக்க நான் தயாராக உள்ளேன் என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் சூளுரை விடுத்தார். அட்டன் போடைஸ் தோட்டத்தில் கொணக்கலை பிரிவில் சிறுவர் பராமரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, 16.10.2016 அன்று, அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்...
Read More

அட்டன் போடைஸ் தோட்டத்தில் சிறுவர் நிலையத்துக்கான அடிக்கல் !

உலக வங்கியின் 96 கோடியே 20 இலட்சம் ரூபாய் நிதி ஓதுக்கீட்டில் மலையக பிரதேசங்களில் 148 சிறுவர் பராமரிப்பு நிலையங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம், மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை, கேகாலை, காலி, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் 24 சிறுவர் பராமரிப்பு நிலையங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுனக்கப்பட்டு வருகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சென்.கூம்ஸ், ஹூட்வில், கிரேட்வேஸ்டன் மவுன்ட்வேர்டனன், அல்டன், போடைஸ் மற்றும்...
Read More

ஜனாதிபதிக்கு இந்தியாவில் மகத்தான வரவேற்பு !

பிராந்திய அமைப்புக்களின் ஒத்துழைப்பில் புதியதோர் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் BRICS-BIMSTEC மாநாட்டின் சமாந்தர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவுக்கு விஜயம்மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று (15) இரவு UL 171 விமானமூடாக பெங்களுர் விமான நிலையத்தினை சென்றடைந்தார். அங்கிருந்து விசேட விமானம் ஊடாக கோவாகடற்படை மத்திய நிலையத்தை வந்தடைந்த ஜனாதிபதி அவர்கள் செங்கம்பள மரியாதை அணிவகுப்புடன் உற்சாகமாக வரவேற்கப்பட்டார். இந்த வரவேற்பு நிகழ்வில் இந்திய அரசின் சார்பாக வெளிவிவகார இராஜாங்கஅமைச்சர் எம்.ஜே.அக்பர்,...
Read More

மலையகத்துக்கு வந்தார் ஐநாவின் பிரதிநிதி ரீட்டா ஐசக் !

இலங்கைக்கு வந்திருக்கும் ஜக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை உரிமை சம்பந்தமான சிறப்பு அறிக்கையாளர் கலாநிதி ரீட்டா அவர்கள் மலையகத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்க் கொண்டார் இதன் போது சமூக சேவையாளர்கள்¸ புத்திஜீவிகளுடனான சந்திப்பும் நடைபெற்றது. இங்கு மலையக சிறுபான்மை சமூகம் எதிர் நோக்கும் உரிமைகள் தொடர்பான பிரச்சனைகள் ஜக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை உரிமை சம்பந்தமான சிறப்பு அறிக்கையாளர் கலாநிதி ரீட்டா அவர்களிடம் விளக்கம் அளிக்கபட்டது. தொடர்ந்து இவரும் இவரின் குழுவினரும் தெல்தோட்டடை லிட்டில்வெலி தோட்ட மக்களை...
Read More

சிறு தேயிலை தோட்ட உற்பத்தியாளர்களே கைக்கொடுக்கின்றனர்; அமைச்சர் நவீன் !

சிறுதேயிலை தோட்டங்கள் காரணமாகவே இலங்கையில் தேயிலை உற்பத்தியை தடையின்றி கொண்டு செல்லக் கூடியதாக உள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார். சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு உரம் வழங்கும் நிகழ்வு கினிகத்தேனையில் இன்று சனிக்கிழமை முற்பகல் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டில் 73 வீதமான சிறுதேயிலை தோட்டங்களிலிருந்து போதியளவு உற்பத்தி கிடைக்கப்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார் அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், இலங்கையில் பல்வேறு பாகங்களிலும் உள்ள விவசாயிகளுக்கு...
Read More

தெல்தோட்டடையில் எரிமலை மக்கள் அச்சத்தில் ! (photos)

தெல்தோட்ட பிரதேசத்தில் தொடர்ந்து 10 நாட்களாக தெல்தோட்ட போபிட்டடிய பாதையில் முஸ்லிம் கொலனி எனும் இடத்தில் நீரேந்து பிரதேசம் ஒன்றில் நிலத்தற்கு கீழ் இருந்து தொடர்ந்து 10 நாட்களாக புகை வருகின்றது. இதை பார்வை இடுவதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக செல்லும்   அதேவேளை   இது எரிமலையாக இருக்குமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர். இது வரைக்கும் இது தொடர்பான எந்தவிதமான ஆய்வுகளையே அல்லது இதற்கான காரணம் என்ன என்று கண்டு பிடிக்கவில்லை. மக்கள் தான் கொத்து கொத்தாக...
Read More

பிரபல சிங்கள நடிகை விபத்தில் பலி!

இலங்கை பிரபல இளம் நடிகையான கவிஷா அயேஷானி இன்று அதிகாலை வாகன விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிகழ்வு ஒன்றிக்கு சென்று மீண்டும் திரும்பும் போது வழியில் அவரது கார் நுகேகொடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றுடன் மோதி விபத்துள்ளாகியுள்ளது . குறித்த காரினை அவரே ஓட்டிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவரின் சடலம் கலுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோடியை சந்தித்தார் ஜனாதிபதி !

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று மாலை இந்தியா சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று காலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினார். இன்று காலை ஆரம்பமான பிராந்திய அமைப்புகளின் ஒத்துழைப்பில் புதியதோர் தோற்றைத்தக் குறிக்கும் வகையில் நடைபெறும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டிற்கு முன்னரே இரு தலைவர்களும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இலங்கை – இந்திய இரு தரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் புதிய முன்னெடுப்புகள் உள்ளிட்ட தெற்காசிய வலய விவகாரங்கள் தொடர்பில் இச் சந்திப்பின்...
Read More
error: Content is protected !!