Home > கட்டுரை > காலத்தின் தேவையை உணர்ந்து எம் உரிமைகளை வென்றெடுப்பது அவசியம் – சமூக ஆய்வாளர் ஏ.ஆர்.நந்தகுமார்!

காலத்தின் தேவையை உணர்ந்து எம் உரிமைகளை வென்றெடுப்பது அவசியம் – சமூக ஆய்வாளர் ஏ.ஆர்.நந்தகுமார்!

ஒரு நாட்டில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுபான்மை என்ற நிலையில் மலையக மக்கள் தங்களுடைய அரசியல் சமூக பொருளாதார கலாசார இருப்பை நிலைநிறுத்திக்கொள்ளவது அச் சமூகத்தின் கடப்பாடாகும், கிட்டத்தட்ட 2 சகாப்தங்களாக எம் சமூகத்தின் மீதான அடக்குமுறைகள் பாரபட்சங்கள் மற்றும் தேசிய அபிவிருத்தில் ஓரங்கட்டப்பட்டுள்ளமை இன்றும் முழுவதுமாக குறைந்ததாக கூறுவதற்கில்லை அது ஏதோ ஓர் வடிவத்தில் தொடர்ந்த வண்ணம் இருப்பது கண்கூடு.

ஆனால் எம் உரிமைகளை வென்றெடுக்க இருந்த தடைகளை களைவது கடந்த காலங்களில் கடினமாக இருந்திருந்தாலும் ஆங்காங்கே போராட்டங்களும் எதிர்ப்புக்களும் எம் சமூகத்தின் இருப்பை ஓரளவு தக்கவைப்பதற்கு உதவின  ஆனால் தற்போது எம் சமூகம் அரசியலில் ஓர் வலுவான நிலையில் இருப்பது, அறிவார்ந்த ஓர் சமூகமாக பரிமாணம் பெறுவது மற்றும் செயல்துடிப்புள்ள ஓர் சமூகமாக மாறிவருகின்ற சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி ஒரு நாட்டின் பிரஜைகள் என்ற நிலையிலும் பாதிக்கப்பட்ட மற்றும் இழந்த ஓர் சமூகம் என்ற நிலையில் எமக்கு கிடைக்க வேண்டிய எம் உரிமைகளை உடைமைகளை வெற்றெடுக்க வியூகம் வகுப்பது காலத்தின் தேவையாக உள்ளது.
தற்போதைய நிலைமையில் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக நாட்டின் நாலாபக்கங்களிலும் இருந்து கிளர்தெழுகின்ற போராட்டங்கள் எம் சமூகத்தின் பொருளாதார இருப்புக்கு ஓர் அச்சாணியாகும். வடக்கு கிழக்கின்; பேரவலங்கள் சர்வதேசம் வரை எதிரொலித்து நீதி நியாயம் என்பவற்றுக்கு அடித்தாளத்தை இட்டது போல எம்மக்களின் பேரவலங்களுக்கும் நீதி நியாயம் கிடைத்தல் அவசியம். வடக்கு கிழக்கிற்கு வெளியே நடைபெற்ற இனக்கலவரங்கள் மற்றும் போராட்டங்களில் உயிர்நீத்த மற்றும் பாதிக்கபட்ட் தமிழ் பேசும் மக்கள் நீதி கிடைத்தல் பொறிமுறையில் மறந்துபோனது நினைவுகூற வேண்டிய ஒன்று.
சம்பள விவகாரம் ஒரு பக்கம் சூடுபிடிக்க மறுபக்கம் புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம், நல்லிணக்க செயன்முறைகள், எல்லை மீள்நிர்ணயம், தேர்தல் மறுசீரமைப்பு மற்றும் வரவுசெலவு திட்டம் என பல திட்டங்கள் நிறைவுக்கு வந்திருக்கின்றன. புதிய அரசியல் யாப்பு எம் மக்களின் இருப்பை உரிமையை உறுதிபடுத்தியிருக்கின்றதா? அடையாளம், அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பேரளிப்பு, காணி மற்றும் வீட்டுரிமை, உள்ளுராட்சி மற்றும் நிர்வாக கட்டமைப்புக்கள், மொழி உரிமைகள், பொது மக்கள் பாதுகாப்பு, சுயாதீன ஆணைக்குழுக்கள் போன்ற பல விடயஙகளில்; நாங்கள் எந்தளவு உள்வாங்கப்பட்டிருக்கின்றோம், சிறுபான்மை இனங்களின் உரிமைகளை பாதுகாக்கும் வண்ணம் அரசிலமைப்பு சீரமைக்கபட்டுள்ளதா என்ற தெளிவு எம்மில் எத்தனை பேருக்கு உண்டு என்பதை கருத்தில் கொள்வது காலத்தின் அவசியமாகும்.
அதே போல நல்லிணக்க பொறிமுறையில் எம்மக்களுக்கான நிதி நியாயம் என்ன? காவுகொள்ளப்பட்ட உயிர்கள் பாதிக்கபட்டவர்கள் சொத்துக்களை இழந்தவர்கள் மற்றும் அரசின் கொள்கை சட்டங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் என்ன என்பது பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது.

அதுமட்டுமல்லாது உள்ளுராட்சி தேர்தலுக்கான எல்லை மீள்நிர்ணயத்தில் எம் மக்களின் விகிதாசாரத்திற்கேற்ப அரசியல் பிரதிநிதித்துவம் உறுபடுத்தப்பட்டுள்ளதா? தேர்தல் மறுசீரமைப்பு கலப்பு தேர்தல் முறைமையை விதந்துரை செய்துள்ளது. பொதுவாக விகிதாசார முறைத் தேர்தலே சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்தும் தேர்தல் முறையாகும் ஆகவே அறிமுகம் செய்யப்பட்ட கலப்பு தேர்தல் முறை எந்தளவிற்கு எம் மக்களின் விகிதாசாரத்திற்கேற்ப அரசியல் பிரதிநிதித்துவம் உறுதிபடுத்தும் என்ற பல்வேறு விடயங்களில் நாங்கள் முனைப்போடு இருந்தாலே எம்மக்களின் எதிர்கால் அரசியல் சமூக பொருளாதார கலாசார உரிமைகளை வென்றெடுக்க முடியும்.
ஐக்கிய நாடுகளின் சிறுபான்மையின விவகாரங்களுக்கான அறிக்கையாளர் ரீட்டா ஐசக் தலைமையிலான குழுவினர் இலங்கை வந்திருக்கின்ற நிலைமையில் அக்குழு எதிர்வரும் 20ஆம் திகதி வரை சிறுபான்மையினரின் பிரச்சினைகள் குறித்து நேரடியாக தகவல்களை பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

ரீட்டா ஐசக் தலைமையிலான குழுவினர் வடக்கு, வடமத்திய, ம‌த்திய‌ மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சென்று நிலைமைகளை ஆராயவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ரீட்டா ஐசக் தலைமையிலான குழுவினர் அரசாங்க முக்கியஸ்தர்கள், அதிகாரிகள், தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் உள்ளிட்ட பல தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர். அத்துடன், ரீட்டா ஐசக் தலைமையிலான குழுவினர் தமது இலங்கை விஜயம் தொடர்பிலான அறிக்கையை எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வில் சமர்பிக்கவுள்ளது.

unnamed-11
இத்தருணத்தை எம் சமூகம் செவ்வனே பயன்படுத்தி எம் மக்களின் சகல பிரச்சினைகனைளயும் தடைகளையும் சர்வதேச சமூகத்திற்கு தெரியப்படுத்தல் அவசியம். பான் கீன் மூனின் வருகையை விடவும் பன்மடங்கு பயனை தரக்கூடிய ரீட்டா ஐசக் அவர்களின் வருகையை மலையக சமூகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மலையகத்தில் சில சிவில் அமைப்புக்கiளையும் அரசியல் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நீங்கள் யாரேனும் ரீட்டா ஐசக் தலைமையிலான குழுவினருக்கு சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கூறவிரும்பினால் பின்வரும் அiழெசவைலளைளரநளளூழாஉhச.ழசப மின்அஞ்சலுக்கு உங்கள் கருத்துக்கள் அல்லது ஆவணங்களை அனுப்பிவைக்கவும்.
அடுத்த ஐ.நா அமர்வுகளில் மலையக மக்களின் பிரச்சினைகள் வலுவாக எதிரொலிக்க மற்றும் அரசு எம் மக்களுக்கு நீதியையும் தியாயத்தையும் வழங்க ஓர் சமூக உணர்வுள்ளவராக உங்கள் பங்களிப்புக்களை வழங்குங்கள்.
அத்துடன் தேசிய அபிவிருத்தி மற்றும் திட்ட முன்னெடுப்புக்களில் எம் சமூகத்தினரின் உரிமைகள் பாதுகாக்கக்பட வேண்டிய முன்னெடுப்புக்களை செய்ய வேண்டியது அறிவார்ந்த மற்றும் செயல்துடிப்புள்ள ஓர் சமூகமாக பரிமாணம் பெறும் ஓர் சமூகத்தின் கடமை மற்றும் பொறுப்பாகும்.

Leave a Reply

error: Content is protected !!