Day

October 18, 2016

மீண்டுமொரு தொழிலாளர்களுக்கெதிரான துரோக ஒப்பந்தம் ; மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன்

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் முதலாளிமார் சம்மேளனத்துடன் இணைந்து கூட்டொப்பந்த தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்குப் பாரிய துரோகத்தினை மேற்கொண்டுள்ளன. இந்தத் துரோக ஒப்பந்தத்தை வன்மையாக எதிர்ப்பதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார். கூட்டொப்பந்தம் தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில் : கடந்த 18 மாதங்களாக 1000 ரூபாய் சம்பளம் கிடைக்குமொன்று தோட்டத் தொழிலாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்தச்சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக நாம் பல்வேறு பட்ட அழுத்தங்களை மேற்கொண்டோம். தொழிலாளர்கள் முன்னெடுத்த போராட்டங்களுக்கும் பக்கபலமாக...
Read More

சம்பள உயர்வு திருப்தியில்லை மலையக மக்கள் முன்னணி !

கூட்டு ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு திருப்திகரமானதாக இல்லை என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான லோரன்ஸ் தெரிவித்தார்.   தோட்டத்தொழிலாளர்களுக்கு நாட்சம்பளமாக 730 ரூபா வழங்கும் வகையில் இன்று கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நாட்டின் பல இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவந்தன. தொழிலாளர்களும் களத்தில் இறங்கி போராடினார்கள். எனவே, அந்தப்...
Read More

தோட்டங்கள் துப்பரவாக இருந்தால் மட்டுமே தொழிலாளர் மலை ஏறுவர்; ஆறுமுகன் எச்சரிக்கை !

தோட்டங்கள் துப்பரவாக இருந்தால் மாத்திரமே தொழிலாளர்கள் மலையேறுவார்கள். இதை வலியுறுத்தி கூட்டு ஒப்பந்தத்தில் சரத்தொன்று உட்புகுத்தப்பட்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்தாவிட்டால் கம்பனிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். கூட்டு ஒப்பந்தப் பேச்சு முடிவடைந்தப் பின்னர், இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு:- 1000 ரூபா சம்பள உயர்வுதான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இலக்காக இருந்தது. ஆனால், 730 ரூபாவுக்கே கம்பனிகள் இறங்கிவந்தன. எனவே, மாற்றுவழி...
Read More

தொழிலாளரின் சம்பள பேச்சு முடிவுக்கு வந்தது; ரூ 730 மற்றும் 300 நாள் வேலை !

18 மாதங்களின் பின்னர் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது, இந்த ஒப்பந்தத்தின் படி 730 ரூபா சம்பளமும் 300 நாட்கள் வேலை என்ற உடன்பாட்டுடன் முடிவு காணப்பட்டுள்ளது , எனினும் இந்த 18 மாத நிலுவை சம்பளத்தை வழங்குவது தொடர்பில் எவ்வித இறுதி முடிவும் எட்டப்படவில்லை . இதொகா, லங்கா ஜாதிக தொழிலாளர் சங்கம் மற்றும் கூட்டுக்கமிட்டி போன்ற தொழிற்சங்களை சேர்ந்த தலைவர்கள் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர், இந்த ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு...
Read More

கொ்க்கஸ்வோல்ட் வித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு !

2016ம் ஆண்டு வெளியான   புலமை பரிசில் பரீட்சையில்  பொகவந்தலாவ கொ்க்கஸ்வோல்ட் இல 02  தமிழ்  வித்தியாலயத்தில் சித்தியடைந்த மாணவா்களுக்கு பெற்றோா்களின் ஏற்பாட்டில் கெளரவிப்பு விழா 17.10.2016  திங்கள் கிழமை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது சித்தியடைந்த மாணவா்களுக்கும் 100  கும் மேல் புள்ளிகளை பெற்ற மாணவா்களுக்கும் சான்றுதல்களும் பதக்கங்களும் வழங்கி கெளரவிக்கபட்டனா். இந் நிகழ்வின் போது பாடசாலையின் அதிபா் என்.அருளாநந்தன்,  முன்னால் ஏ.செல்வராஐ்.மற்றும் பலர் கலநது கொண்டதோடு வகுப்பு ஆசிரியை சாந்தருபினிக்கு பெற்றோா்களால் பொன்னாடை போற்றி...
Read More

இலங்கை தேயிலை சபையின் கிளை அலுவலகம் ஸ்கிராப் தோட்டத்தில் !

இலங்கை தேயிலை சபையின் நுவரெலியா பிராந்திய காரியாலயத்திற்க்கான அடிக்கல்லை நேற்று (17-10-2016) திங்கட்கிழமை பெருந்தோட்ட கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் நவீன் திஸாநாயக்க நுவரெலியா ஸ்கிராப் தோட்டத்தில் நாட்டி வைத்தார். அங்கு நடைபெற்றவைபவங்களையும் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம். டீ. சந்ரு

லண்டனில் உயிரிழந்த, ஆதில் பாக்கிர் மாக்காரின் மரணத்தில் எவ்வித சந்தேகமுமில்லை!

லண்டனில் உயிரிழந்த, ஆதில் பாக்கிர் மாக்காரின் மரணத்தில் எவ்வித சந்தேகமுமில்லை என ஸ்கொட்லாந் யாட் பொலிஸார் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் மகனும் சட்டத்தரணியுமான ஆதில் பாக்கீர் மாக்கார்(25), லண்டனில் கடந்த புதனன்று(12) காலமானார். இவர், பொருளாதாரம் மற்றும் அரசியல் விஞ்ஞானத்துக்கான லண்டன் பல்கலைக்கழகத்தில் ஒப்பாய்வு அரசியற்றுறையில் முதுமானிக் கற்கைகளை மேற்கொண்டு வந்த நிலையிலேயே காலமாகியுள்ளார். சுகயீனம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த அவர்,...
Read More

அணித் தலைமைப் பதவி லஹிரு திரிமன்னவிற்கு!

மேற்கிந்திய தீவுகள் ஏ அணியுடன் இடம்பெறவுள்ள மூன்றாவதும் இறுதியுமான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியின் இலங்கை ஏ அணியின் தலைமைப் பதவி லஹிரு திரிமன்னவிற்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த இந்தப் போட்டித் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அணித் தலைவராக செயற்பட்ட திமுத் கருணாரட்ன இந்த போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் , நிரோஷன் திக்வெல்ல , விமுக்தி பெரேரா , பிரபாத் ஜயசூரிய மற்றும் லஹிரு குமார ஆகியோரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்....
Read More

ஆயிரம் ரூபாய் கோரி டிக்கோயாவில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

ரூ.730 சம்பளவுயர்வு போதாது, ஆயிரம் ரூபாய் சம்பளம் வேண்டும் என கோரி டிக்கோயாவில் இன்று(18.10.2016) காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளவுயர்வு பேச்சுவார்த்தையின் பின், இன்று முதலாளாளிமார் சம்மேளனமும் கூட்டு உடன்படிக்கை தொழிற்சங்கங்களும் 730 ரூபாய் அடிப்படை சம்பளத்திற்கு கைச்சாத்திடவுள்ள நிலையில், டிக்கோயா தரவலை பிரதேச 7 தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தரவளையிலிருந்து ஊர்வலமாக டிக்கோயா நகரின் கலனிவெளி கம்பனியின் காரியாலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட காலமாக இழுபரி நிலையிலிருந்த சம்பள...
Read More
error: Content is protected !!