Day

October 19, 2016

மலையக பகுதிகளில் கடத்தப்பட்ட மலைக்குருவி கூடுகள் தீக்கரையாக்கப்பட்டன !

மலையக பகுதி குகை மற்றும் கற்பாறை இடுக்குகளில் இருந்த மலைக்குருவிகளின் கூடுகளை சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிடிபட்ட ஆயிரக்கணக்கான மலைக்குருவி கூடுகள் மற்றும் மயில் தோகைகளை என மாதம்பிட்டி பொது மயானத்தில் திக்கரையாக்கப்பட்டது . மலைக்குருவி கூடுகளில் மலைக்குருவிகள் தமது உமிழ் நீரின் துணையோடு காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது , இந்த உமிழ் நீர் பசையாகி இருக்கும்போது இந்த கூடுகளை அபகரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன, இந்த உமிழில் ஹொங்கோங் ,...
Read More

இரத்தினபுரி மாவட்டத்தில் 10 தோட்டங்களுக்கு கூரைத்தகடுகள் வழங்கிவைப்பு !

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் பணிப்புக்கு அமைய இரத்தினபுரி மாவட்டத்தில் 10 தோட்டங்களை சேர்ந்த பெருந்தோட்ட மக்களுக்கு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஓதுக்கீட்டில் 3.8 மில்லியன் பெறுமதியான கூரைத் தகடுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு (15-10-2016) அன்று இரத்தினபுரி பெருந்தோட்;ட மனிதவள அபிவிருத்தி நிதிய அலுவலகத்தில் இடம்பெற்றது. மேலும் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் வேண்டுகோளின்;...
Read More

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு டிசம்பர் வரை விளக்கமறியல் !

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராகிய போது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது போலியான ஆவணங்களை வெளியிட்டமை மற்றும் 3 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவரிடம் விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொகவந்தலாவையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் படுகாயம் !

பொகவந்தலாவ  பாரதிபுரம்   பகுதியில் கட்டிடம் ஒன்று சரிந்து விழுந்ததில் ஒருவா் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா கிழங்கன் மாவட்ட வைத்தியசாலையில்   சேர்க்கப்பட்டுள்ளதாக   பொகவந்தலாவ பொலிஸாா் தெரிவித்தனர்   . இந்த சம்பவம் நேற்றுமாலை நான்கு மணி அளவில் இடம் பெற்றதாக    தெரிவிக்கப்படுகிறது. பொகவந்தலாவ பாரதிபுற பகுதியில் அமைக்கபட்டுள்ள 40உயரம் கொண்ட கட்டிடமே இவ்வாறு சரிந்து விழுந்துள்ளதாக   தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடத்தில் பெய்த கடும்   கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு   ஏற்பட்டிருந்த போது. குறித்த கட்டிட...
Read More

நிலுவை சம்பளத்தை வழங்குமாறு தலவாக்கலை – மஸ்கெலியா – மற்றும் பொகவந்தலாவ பகுதிகளில் ஆர்ப்பாட்டம் !

18 மாத நிலுவை பணத்தை  முதலாளிமார் சம்மேளனம் வழங்கவேண்டும் என கோரி மலையகத்தில் பல  பகுதிகளில்  தொழிலாளர்கள் வீதிகளை மறித்தும் ஆலயங்களில் தேங்காய் உடைத்து 19.10.2016 இன்றும்  ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர் . கடந்த வருடம் மார்ச் 31 ம் திகதியுடன் நிறைவடைந்த கூட்டு உடன்படிக்கையானது 18 மாதங்களாக பல சுற்றுகள் பேச்சுவார்த்தை நடைபெற்று நேற்று 18.10.2016 முதலளிமார் சம்மேளனமும் கூட்டு உடன்படிக்கை தொழிற்சங்கங்களும் கைச்சாத்திட்டது. 2016 தொடக்கம் 2018 வரையிலான காலத்திற்கு ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையில் அடிப்படைசம்பளம் 500...
Read More

பழைய சாரதி அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்ய தீர்மானம்!

பழைய சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் சாரதிகளுக்கு தரவுகள் அடங்கிய நவீன ஸ்மார்ட் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு வாகன போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது பாவனையில் சுமார் 11 இலட்சம் பழைய சாரதி அனுமதிப்பத்திரங்கள் காணப்படுவதாக வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜயத் சந்திரசிறி தெரிவித்துள்ளார். குறித்த இந்த சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்து புதிய ஸ்மார்ட் சாரதி அனுமதிப்பத்திரம் விரைவில் வழங்கப்படுவதாகவும், புதிய சாரதி அனுமதிப்பத்திரத்தினை பெறுவதற்கு மருத்துவ பரிசோதனை அறிக்கை அவசியம் என்றும்...
Read More

வீதிகளில் கையேந்தும் யாசகர்களுக்கு இனி சிறைவாசம் ; பொலிசார் எச்சரிக்கை!

கொழும்பின் பல பிரதேசங்களில் வீதி சமிஞ்சை விளக்குகள் உள்ள பகுதிகளில் யாசகம் செய்பவர்களை கைது செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதாக சாரதிகளால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸாரால் மேற்குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சாரதிகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களை தடுப்பதற்கும், வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவதும் இது சிறந்த நடவடிக்கை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு கைது செய்யப்படுபவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக யாசகர்களை பொலிஸார் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு முன் விளக்குகளை எரிய விடுமாறு கோரிக்கை!

அதிவேக வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் தமது வாகனத்தின் முன் விளக்குகளை (headlights) எரிய விடுமாறும் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலையால் நிலவும் பனிமூட்டமே இதற்குக் காரணம் என பெருந்தெருக்கள் அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரியில் பாரதி விழாவும் ஆய்வரங்கமும்!

அட்டன் கல்வி வலயம் மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரியின் வருடாந்த பாரதி விழாவும் ஆய்வரங்கமும் எதிர்வரும் 20, 21ம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. கல்லூரியின் அதிபர் பீ.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் 20 ம் திகதி வியாழக்கிழமை புதிய பரிமாணமாக 2017 ம் ஆண்டு கா.போ.த. உயர்தர கலைப்பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் பல்கலைகழக போராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் ஆய்வாளர்களின் பங்குபற்றலுடன் மலையகத்தின் சமகால இலக்கியம், சமூக அரசியல், பண்பாடு எனும் தொனிப்பொருளில் ஆய்வரங்கமும், கல்லூரியின் பிரதான மண்டபத்தில் காலை...
Read More

பொகவந்தலாவயில் சிதறு தேங்காய் உடைத்து தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ.730 சம்பளம் நியாயமானது அல்ல என கோரி கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தொழிலாற்சங்கங்களுக்கு எதிராக பொகவந்தலாவ கொட்டியாகலை தேயிலை தொழிற்சாலையில் உள்ள ரோத முனி ஆலயத்திற்கு முன்னால் கொட்டியாகலை தோட்ட தொழிலாளர்கள் சிதறு தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 08மணி முதல் 09 மணி வரை பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இடம் பெற்றது. நாங்கள் கடந்த முதலாம் திகதி முதல் நேற்றுவரை தொழிலுக்கு செல்லாமல் நியாயமான...
Read More
error: Content is protected !!