Day

October 21, 2016

தீபாவளி முற்பணம் கோரி லிந்துல்லயில் கவனயீர்ப்பு !

தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தீபாவளி முற்பணத்தை தோட்ட அதிகாரி வழங்க மறுத்ததையடுத்து 21.10.2016 அன்று லிந்துலை டிலிகுற்றி தோட்ட தொழிலாளர்கள் உடனடியாக தீபாவளி முற்பணத்தை வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 21.10.2016 அன்று மதியம் 2 மணித்தியாலயங்கள் குறித்த தோட்டத்தில் சுமார் 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஏனைய பிரதேசத்தில் உள்ள தோட்டங்களில் தீபாவளி முற்பணம் வழங்கியிருக்கின்ற போதிலும் இத் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. 21.10.2016 அன்று காலை தோட்ட தொழிற்சங்க...
Read More

நோர்வூட்டில் இன்றும் தொழிலாளர் ஆர்ப்பாட்டம் !

பெருந்தோட்ட மக்களின் ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்குமாறும் அத்தோடு 18 மாதங்களுக்கான நிலுவை பணத்தை பெற்றுத்தருமாறு கோரி நோர்வூட் சென் ஜொண்டிலரி தோட்ட மக்கள் பொகவந்தலாவ பிரதான விதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . நாள் ஒன்றுக்கு ஆறுமுகன் தொண்டமான் அறிவித்தவாறு 1000ருபா சம்பளத்தினையும் பெற்று தரவேண்டுமெனவும் வாரத்திற்கு ஆறு நாள் வேலை நாட்களாக வழங்கபடவேண்டுமென அவர்கள் கோரிக்கையை முன் வைத்தனர் . இதேவேளை தொழிற்சங்களுக்கு அறவிடப்படும் சந்தா பணத்தை நிறுத்த போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்...
Read More

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்கள் ரீட்டா ஐசாக் சந்திப்பு !

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் சிறுபான்மையினருக்கான விசேட அறிக்கையாளர்  ரீட்டா  ஐசாக் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகளுடனான விசேட சந்;திப்பில் கலந்து கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின்; தலைவர் மனோ கணேசன் அவர்களையும், உப தலைவர் வீ.இராதாகிருஷ்ணன் அவர்களையும், செயளாலர் ஏ.லோரன்ஸ் அவர்களையும், மேல் மாகாண சபை உறுப்பினர்களான சண்.குகவரதன், கே.டி.குருசாமி அவர்கள் உட்பட பிரதிநிதிகளையும்  படங்களில் காணலாம்.  

மலையக தமிழர்கள் புறந்தள்ளப்பட்டுள்ளனர்; ஐநாவின் பிரதிநிதி ரீட்டா ஐசாக்!

இலங்கையில் வாழும் மலையகத் தோட்டத் தொழிலாளர் சமூகம் ஒட்டுமொத்தமாக புறந்தள்ளப்பட்டு, மிகவும் மோசமாக வாழ்ந்துவருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிபான்மையின சமூகங்களின் உரிமைகளுக்கான பிரதிநிதி ரீட்டா ஐசாக் நாடியா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு கடந்த 10 ஆம் திகதி விஜயம் செய்த ஐ.நா அதிகாரி தனது விஜயத்தின் இறுதி நாளான நேற்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்தத் தகவலைத் தெரிவித்தார். பிரித்தானியர்களால் இறப்பர் மற்றும் தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் பொருட்டு இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட மலையகத்...
Read More

பொகவந்தலாவையில் இசை நிகழ்வில்; மதுபோதையில் கோஷ்டி மோதல் இருவர் காயம்!

பொகவந்தலாவ பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது மது போதையில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவா் மற்றொருவரை கடித்ததில்   முகத்தில்    பலத்த காயங்களுடன் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளாா். மற்றொருவா்   சிறு   காயங்களுடன் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸாா் மேலும் தெரிவித்தனா். காயங்களுக்குள்ளான இருவரும் பொகவந்தலாவ குயினா தோட்டத்தைச் சோ்ந்தவா்கள் என தெரிவிக்கபடுகிறது. சம்பவம் தொடா்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸாா் மேற்கொண்டு வருகின்றனா். பொகவந்தலாவ நிருபா் எஸ்.சதீஸ்

குப்பைகள் குறித்து சுற்றுநிரூபம் விரைவில்!

அரச நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் தரம் பிரித்து வெளியேற்றுவது தொடர்பான சுற்றுநிரூபம் வெளியிடப்படவுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி முதல் குறித்த இந்த சுற்றுநிரூபம் நடைமுறைக்கு வரவுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார். வகைப்படுத்தப்படாத குப்பைகள் உள்ளூராட்சி சபைகளால் ஏற்றுகொள்ளப்படாத புதிய நடைமுறை தொடர்பில் தெளிவூட்டும் நிகழ்வு நேற்று(20) உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சில் இடம்பெற்றது. இதன் போது அவர் மேற்குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார். இதற்கிடையில், பெருந்தெருக்கள் அருகில் குப்பைகளை வீசுபவர்களுக்கு எதிராக, பொதுக்களுக்கு...
Read More

இலங்கை கிரிக்கெட் நிறுவன ஒப்பந்தத்தில் கையெழுத்திட 17 வீரர்கள் இணக்கம்!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட 17 வீரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். அணித் தலைவர் மெத்தியூஸ், தினேஸ் சந்திமால், ரங்கன ஹேரத், குஷல் ஜனித் பெரேரா மற்றும் லஹிரு திரிமன்ன உள்ளிட்ட வீரர்களே இவ்வாறு இணக்கம் தெரிவித்துள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. முன்னதாக குறித்த ஒப்பந்தத்தில் அணியின் வீரர்களுக்கு வழங்கப்பட்ட சில சலுகைகள் குறைக்கப்பட்டிருந்ததாகவும் மேலும் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை தமிழ் மொழி தின விருது வழங்கல் விழா : 23ம் திகதி ஜனாதிபதி தலைமையில்

வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையில் ஜனாதிபதி தலைமையில் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் அகில இலங்கை தமிழ் மொழித் தின விருது வழங்கல் விழா எதிர்வரும் 23.10.2016 அன்று கண்டி தர்மராஜ கல்லூரி மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கல்வி அமைச்சி மேற்கொண்டுள்ளது. தேசிய ரீதியில் நடைபெற்ற தமிழ் மொழித்தினத்தை முன்னிட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்படவுள்ளது. அன்றைய தினம் காலை 8.00 மணிக்கு பாடசாலை மாணவர்கள் பங்குபற்றும்...
Read More

கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் வாசிப்பு திறன் மேம்படுத்தல் பாசறை!

மத்திய மாகாண சபையின் கலாச்சார அலுவல்கள் திணைக்களம் மத்திய மாகாணத்தில் உள்ள கஷ்ட பிரதேச பாடசாலை சிறுவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்துல் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டம் கடந்தவாரம் நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட கிரேட்வெஸ்டன் தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதன் போது தரம் 8 முதல் தரம் 10 வரையான மாணவர்களுக்கு வாசிப்பு திறனை மேம்படுத்தும் பயிற்சி பாசறை நடாத்தப்பட்டது. இங்கு மாணவரின் வாசிப்பு, இரசணை, புத்தாக்கம், மனிதாபிமானம் போன்ற பல விடயங்கள் விருத்தி செய்யும் வகையில்...
Read More
error: Content is protected !!