Day

November 13, 2016

பாகிஸ்தான் பள்ளிவாசல் குண்டுவெடிப்பில் 52 பேர் பலி!

குவெட்டா – பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்திலுள்ள ஒரு சுஃபி பள்ளி வாசலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலுசிஸ்தான் மாநிலத்தில் அண்மைய சில மாதங்களாக சன்னி மற்றும் ஷியா முஸ்லீம் பிரிவினரிடையே பிரிவினை வாத மோதல்கள் பெருகி வருகின்றன. பலுசிஸ்தான் மாநிலத் தலைநகர் குவெட்டாவிலிருந்து தென் பகுதியில் 750 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும், சுஃபி மதகுரு ஷா நுரானி பள்ளி வாசலில் இந்த...
Read More

நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை!

வெல்லிங்டன் – நியூசிலாந்தின் தென் தீவை உலுக்கியுள்ள 7.8 புள்ளிகள் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்நாட்டின் பொது தற்காப்புத் துறை சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. நியூசிலாந்தின் கிழக்குக் கடற்கரையை நோக்கி சுனாமி அலைகள் எந்த நேரத்திலும் தாக்கக் கூடும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நாட்டின் உட்புறங்களுக்கு அல்லது உயர்ந்த இடங்களுக்கு சென்று விட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். 2011-ஆம் ஆண்டில் நிலநடுக்கத்தால் கடுமையாக சேதமடைந்த கிரிஸ்ட்சர்ச் நகரிலிருந்து வடகிழக்கு நோக்கி 50 கிலோமீட்டர்...
Read More

தேசிய நீரிழிவு தின விழிப்புணர்வு; ஜனாதிபதி தலைமையில் !

“நலமான நாளுக்காக இன்றே பணியை தொடங்குவோம்” எனும் தொனிப்பொருளில் தேசிய நீரிழிவு தின நடைபவனி இன்று (13) முற்பகல் ஜனாதிபதி தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமானது. குறித்த நடைபவனி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் முடிவடைந்தது. அனைவருக்கும் முன்மாதிரியான இந்த நிகழ்ச்சியை பாராட்டிய ஜனாதிபதி, ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குவதற்கு அனைவரினதும் அர்ப்பணிப்பும் அக்கறையும் மிகவும் முக்கியமானதென்பதை சுட்டிக்காட்டினார். தேசிய நீரிழிவு தினத்தோடு இணைந்ததாக நடைபெற்ற அகில இலங்கை சித்திரப் போட்டியில் வெற்றிபெற்றோரின் சித்திரங்கள்...
Read More

மனைவி உட்பட இரண்டு பிள்ளைகளையும் குத்திக் கொலை செய்த கணவன்; கிண்ணியாவில் சம்பவம்!

திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (13) காலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 8 வயது மற்றும் 10 வயதுடைய பெண் குழந்தைகயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப தகராறு காரணமாகவே இந்த கொலை இடம் பெற்றுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை, குடும்ப தகராறு இந்த கொலைகளுக்கு...
Read More

ஈரோஸ் ஜனநாயக முன்னணி வவுனியாவில் கூடியது; மலையக பிரதிநிதிகளும் பங்கேற்பு !

ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கான கூட்டமொன்று வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள அமைப்பின் இணைப்பு செயலகத்தில் செயற்பாட்டாளர் துஸ்யந்தன் அவர்களின் ஏற்பாட்டில் பொதுச்செயலாளர் இராஜேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றன. இந் நிகழ்வில் ஈரோஸ் அமைப்பின் வடக்கு,கிழக்கு மற்றும் மலையக பிராந்தியங்களை சேர்ந்த பெருமளவிலான செயற்பாட்டாளர் கலந்துக்கொண்டார்கள். மேற்படி சந்திப்பின் ஊடாக அரசியல்ரீதியாக முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

சமூகம் உதவினால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றவர்களும் அவர்கள் குடும்பங்கள் மட்டுமல்ல சமூகமும் நன்மை பெறும்!

இந்தியாவிலிருந்து இந்த நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு நூற்றாண்டு காலமாக உழைத்த பெருந்தோட்ட மக்கள் பிரஜா உரிமை மறுக்கப்பட்டு நாடற்றவர்களாகி 1970 ஆண்டுகளில் புனர்வாழ்வு என்ற பெயரில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார்கள். ஒவ்வொரு புதன்,வெள்ளிக் கிழமைகளிலும் மலைநாட்டுப் பகுதியிலுள்ள புகையிரத நிலையங்களிருந்து புனர்வாழ்வு பெற்று மக்கள் புறப்பட்ட போது அவர்களினதும் அவர்களை வழியனுப்ப வந்த உறவினர்களினதும் கண்ணீரும் அழுகுரலும் புகையிர நிலையங்களை மட்டுமல்ல அந்ததந்த நகரங்களையும் மரணவீடுகள் போன்ற ஒரு காட்சியையே உருவாக்கின. அதனை இப்போதும் மறக்க முடியாது....
Read More
error: Content is protected !!