Day

November 21, 2016

ஜேவிபி கிளர்ச்சியின்போது அபகரிக்கப்பட்ட அடையாள அட்டைகள்; அம்பலாந்தோட்டையில்!

ஜேவிபி  கிளர்ச்சியின்போது  பொது மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட அடையாள அட்டைகள் ஒரு தொகுதி அம்பலாந்தோட்டை பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1987 காலப்பபகுதியில் ஜேவிபியின் கிளர்ச்சியின்போது  ஜேவிபியின் “தேசபிரேமி என்ற அமைப்பால் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும்   பொது மக்களிடமிருந்து  அடையாள அட்டைகள் அபகரிக்கப்பட்டு அவை அழிக்கப்பட்டன அவற்றின் சொச்சம் இங்கு கிடைக்க கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   1,050 அடையாள அட்டைகள் இன்று, திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளன. அம்பலாந்தோட்டை பெமினியன்வில, நுகசெவன பிரதேசத்தில் கட்டுமானப் பணிக்காக மண் அகழ்ந்துக் கொண்டிருந்த...
Read More

நுவரெலியாவில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் செயலமர்வு!

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஊடாக நுவரெலியா பிரதேச இளைஞர் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த ‘HOPE 2016’ என்ற இளைஞர் செயலமர்வின் இறுதி நாள் நிகழ்வு கொட்டக்கலை கேம்பிரிஜ் கல்லூரியில் இடம்பெற்றது.   இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் மக்கள் தொடர்பு அதிகாரி பழனி விஜயகுமார் ‘பொதுசன மற்றும் ஊடக தொடர்பு’ என்ற தலைப்பில் விரிவுரை செய்ததுடன் பங்குபற்றிய இளைஞர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

லிந்துல்லயில் பொலிஸ் தினத்தை முன்னிட்டு சமூக சேவையாளர்களுக்கு விருது வழங்கல்!

150வது பொலிஸ் தின கொண்டாட்டம் லிந்துல அகரகந்த பெசிபன் மைதானத்தில் 20.11.2016 நடைபெற்றது. இந்நிகழ்வு அக்கரகந்த பெஸிபன் பொலிஸ் சிவில் பாதுகாப்பு அமைப்பு,அதிரடி நற்பணி மன்றம் ஏற்பாட்டு குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் லிந்துல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,உதவி பொறுப்பதிகாரி,ஏனைய பொலிஸ் அதிகாரிகள்,கிராம அதிகாரி,பாடசாலை அதிபர்,சமய குருக்கள்,ஆசிரியர்கள்,அரசநிறுவன உத்தியோகத்தர்கள்,வர்த்தகர்கள்,பெற்றோர்கள் மாணவர்கள்,பொதுமக்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதன் போது லிந்துல பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் ,சிறந்த சமூக சேவை ஆற்றியவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.  இவ்விருதுகள் 50பேர்க்கு வழங்கப்பட்டது....
Read More

லிந்துல்ல பேஹராம் தோட்டத்தில், கடையை உடைத்து திருடிய சிறுவர்கள்; நீதிமன்றில்!

லிந்துலை, பம்பரக்கலை பேஹராம் தோட்டத்தில், பலசரக்குக் கடை ஒன்றை உடைத்து, பொருட்களை திருடிய இரண்டு சிறுவர்கள் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி தோட்டத்தில் உள்ள பலசரக்கு கடை உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்ட விடயமா தொடர்பாக கைது செய்யப்பட இந்த சிறுவர்கள் நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேற்படி வழக்கை விசாரித்த நீதிபதி ருவந்திக்க சில்வா இரண்டு சிறுவர்களையும் எதிர்வரும் 28ஆம் திகதிவரை சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். இந்த திருட்டு...
Read More

தலவாக்கலை தேயிலை ஆராச்சி நிலைய சேவையாளர் உரிமம் ரத்து செய்வதை; ஆறுமுகன் எதிர்ப்பு!

தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலைய பொது சேவையாளர்களின் நியமனம் இரத்து செய்யப்படக் கூடாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் அரசாங்க பொது நிர்வாக சுற்றறிக்கையின் படி பொது சேவையாளர்களாக பிரகடனப்படுத்தப்பட்டு 40 தொழிலாளர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையில் பொது சேவையாளர்களாக நியமனம் வழங்கப்பட்டவர்கள் மாதச் சம்பளம் பெறுவதற்கும் ஏனைய அரச சலுகைகளை பெறுவதற்கும் தகுதியுடைவர்கள். எனினும் அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையில் பொது சேவையாளர் நியமனம்...
Read More

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு ரூ 25 ஆயிரம்வரை அபராதம்!

வாகன சாரதிகளுக்கு எதிரான ஆறு வகையான குற்றச்சாட்டுக்களுக்கான அபராதத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்படி, போதையில் வாகனம் செலுத்துதல், சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், பாதுகாப்பற்ற வகையில் ரயில் கடவைகளை கடத்தல், காப்புறுதி ஆவணங்கள் இல்லாமை மற்றும் அதிக வேகத்துடன் வாகனம் செலுத்துதல் மற்றும் இடதுபக்கத்தால் வாகனத்தை முந்துதல் போன்ற ஆறு வகையான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, நிதி...
Read More

லிந்துலை, மன்ராசி, டயகம வைத்தியசாலை அசமந்த போக்கு குறித்து அபிவிருத்தி குழு கூட்டத்தில் முறையீடு!

நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்டு காணப்படும் லிந்துலை, மன்ராசி மற்றும் டயகம பிரதேச வைத்தியசாலைகளின் செயற்திறனின்மை மற்றும் ஊழியர்களின் அசமந்த போக்குகள் குறித்து நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்ட மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் மக்கள் தொடர்பு அதிகாரி பழனி விஜயகுமார் இது தொடர்பில் கோரிக்கை...
Read More

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற புஸ்ஸல்லாவை மேல்போர்ட் பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு!

கம்பளை கல்வி வலையத்திற்கு உட்பட்ட புஸ்ஸல்லாவ மெல்போட் தோட்ட தமிழ் வித்தியாலயத்தில் இம்முறை புலமை பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வித்தியாலத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு மத்திய மாகாண உதவி கல்வி செயலாளர் திருமதி ஏ.ஆர்.சத்தியேந்திரா¸ கம்பளை கல்வி வலைய கல்வி பனிப்பாளர் ஜீ.ஜீ.ஆனந்த பிரேமசிரி¸ கோட்ட கல்வி பணிப்பாளர் திருமதி எம்.துஷ்யந்தி உட்பட அயற் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்துக் கொண்டார்கள். நிகழ்வில் மாணவர்களுக்கான கௌரவிப்பு மற்றும் பரிசில்கள் நடைபெற்றதோடு கலை...
Read More

மாணவர்களை இழிவுப்படுத்தும் பஸ் நடத்துனர்; நோர்வூட் மாணவர்கள் குற்றச்சாட்டு!

பரீட்சை எழுதிவிட்டு வந்த மாணவர்களை அவமரியாதைக்கு உட்படுத்திய பஸ் நடத்துனர் தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த 17ஆம் திகதியன்று அட்டனில் இருந்து பலாங்கொடை நோக்கி சென்ற பஸ்ஸில் (பஸ் இலக்கம் 9939) நோர்வூட் பாடசாலையில் உயர்தரம் கற்கும் மாணவர்கள் தமது முதலாம் தவணைக்குரிய இரண்டாவது பரீட்சையை முடித்து கொண்டு பொகவந்தலாவைக்கு செல்ல முற்பட்ட வேளையில் மேற்படி பஸ்ஸின் நடத்துனர் மிகவும் கீழ்த்தரமாக மாணவர்களிடம் நடந்து கொண்டதாக மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மாதாந்த பருவ சீட்டு வைத்திருக்கும் மாணவர்களை...
Read More

இன்றும் பரீட்சை தாமதம்; மத்திய மாகாண கல்வித்துறையின் அசமந்த போக்கு !

மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் தற்போது மூன்றாம் தவணை பரீட்சைகள் நடத்தப்பட்டு வருகின்றன. வருடந்தோறும் தரம் 9, 10, 11 ஆகிய வகுப்புகளுக்கே இப்ப ரீட்சை கள் நடத்தப்படுவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் இப் பரீட்சையில் ஏதாவது குளறுபடிகள் நடந்த வண்ணமே இருக்கின்றன. அதே போன்றே இவ்வருடமும் பரீட்சை ஆரம்பித்த தினத்திலிருந்து இன்று வரை ஏதாவதொரு பிரச்சினை ஏற்பட்டு கொண்டு இருப்பதாக பாடசாலை நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் சில வருமாறு: 1. தரம் 11 இற்கான ஓரிரு...
Read More
error: Content is protected !!