Day

December 6, 2016

தேயிலை உற்பத்தி பின்தங்கி வருவது நாட்டின் அடையாளத்தை இழக்கும்!

இலங்கை நாட்டில் குறிப்பாக இன்று சுமார் 05 வருடங்களாக பெரும்பாலும் மலையக மக்கள் தம் உழைப்பு சுரண்டப்படுவதாகவும் அதற்கான ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் போராடுவது யாவரும் அறிந்ததே. இருப்பினும் இவ்விடயம் தொடர்பான உண்மை நிலவரம் இது வெறும் குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தினரது பொருளாதாரம் சார்ந்த ஒரு விடயம் இல்லை. இது உண்மையில் இலங்கை நாட்டின் எதிர்கால நிலையான அபிவிருத்தியை சார்ந்தது என்பது யாவரும் அறிந்தும் அலட்சியப்படுத்தும் ஒரு பேரழிவு ஆகும். பொருளாதார ரீதியாக இலங்கை உலக அளவில்...
Read More

ஆணாதிக்க சமூகத்தில் பெண் ஆளுமையை நிலை நிறுத்தியவர் ஜெயல்லிதா; சபையில் திலகர் எம்பி அஞ்சலி!

ஆணாதிக்க சமூகத்தில் தனது ஆளுமையினால் தமிழகத்தின் முதலமைச்சராக உயர்ந்த பெண் தலைமைத்துவமான முன்னாள் தமிழகமுதல்வர் ஜெயல்லிதா அம்மையாருக்கு மலையக மக்கள் சார்பாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாகவும் தமது அஞ்சலியைசெலுத்துவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் சபையில் தனதுஅஞ்சலியைப் பதிவு செய்துள்ளார். இந்து சமய விவகாரம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்கான வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில்கலந்து கொண்டு உரையாற்றுவதற்கு முன்பதாக மறைந்த முன்னாள் தமிழக முதல்வருக்கு மேற்படி...
Read More

இந்திய வம்சாவழி சார்பாக செந்தில் தொண்டமான் மற்றும் ராமேஸ்வரன் தமிழக முதல்வருக்கு அஞ்சலி!

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அன்னாரின் இறுதி அஞ்சலி செலுத்தும் முகமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் பணிப்புரைக்கு அமைய ஊவா மாகாண பதில் முதலமைச்சர் செந்தில் தொண்டமான் மத்திய மாகாண அமைச்சர் ராமேஸ்வரன் ஆகியோர் இந்திய வம்சாவளி தமிழர்கள் சார்பில் கலந்துக்கொண்டு தமது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்திருந்தனர். ஜனாதிபதி கௌரவ. மைத்திரிபால சிறிசேன அவர்களின் இரங்கள் செய்தியுடன் இ.தொ.கா வின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தமிழகம் நோக்கி...
Read More

லிந்துல்ல நாகசேனை தோட்ட மக்கள் அம்மாவுக்கு அஞ்சலி!

மறைந்த தமிழ் நாட்டு முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு இந்தியா வம்சாவளி மலையக தமிழர்கள் சார்பில் லிநதுலை நாகசேனை தோட்ட பொதுமக்கள் கண்ணீர் செழுத்தியதுடன் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பம்பரக்கல நிருபர் பாலேந்திரன்.

கொத்மலை நீரேந்தில் மரணித்தவர் புஸ்ஸல்லாவை மேல்போர்ட் தோட்டத்தை சேர்ந்தவர்!

புஸ்ஸல்லாவ மெல்போட் தோட்டத்தில் இருந்து கொத்மலை நீர்தேக்கத்திற்கு நேற்று (05) குளிக்க சென்ற 09 பேரில் இருவர் நீர் தேக்கத்தில் மூழ்கியுள்ளனர். இதில் ஒருவர் காபாற்றபட்ட நிலையில் ஒருவர் உயிர் இழந்துள்ளார். இவர் திருமணமான ஒரு பிள்ளையின் தந்தையாவார். ஆறுமுகம் யோகேந்திரன் வயது 26 ஆன இவர் கொழுப்பில் தொழில் புரிந்து வந்துள்ளார். சடலம் கடற்படையின் உதவியுடன் மீட்க்கபட்டு கம்பளை வைத்தியசாலையில் வைக்கபட்டு பிரேத பரிசோதனை யின் பின் உரவினர்களிடம் இன்று (06) கையளி;க்கபட்டுள்ளது. மேலதிக விசாணைகளை...
Read More

அட்டன் மற்றும் நோர்வூட் பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் சோதனை பலருக்கு எதிராக வழக்கு!

பல்வேறு குறைபாடுகளை உடைய வர்த்தக நிலையங்கள் 15 க்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளதாக நுவரெலிய மாவட்ட விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர் அட்டன் மற்றும் நோர்வுட் நகரிலுள்ள வர்த்தகநிலையங்கள் 06.12.2016 விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகளின் திடீர் சோதனையின்போது போதே மேற்படி குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. காலாவதியான பொருட்களை வைத்திருந்தமை அதிகவிலைக்கு பொருட்கள் விற்பனை செய்தமை மற்றும் பொருட்களின் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமை போன்ற குற்றங்களையுடைய வர்த்தக நிலையங்களே இவ்வாறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவனொளிபாதமலை பருவகாலத்தைமுன்னிட்டு சகல பகுதிகளிலும் உள்ள வர்த்தக...
Read More

அம்மாவின் மறைவு உலக தமிழர்களுக்கு பேரிழப்பு; அமைச்சர் திகா இரங்கல்!

உலக அரசியலில் பெண் தலைமைத்துவத்திற்கு தனி சிறப்பு சேர்த்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் இழப்பு தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமின் மறைவினையடுத்து அவர் விடுத்திக்கும் இரங்கல் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்திய அரசியலில் குறிப்பாக தமிழக அரசியலில் சினிமாவின் செல்வாக்கு அதிகமாகும்....
Read More

தாயாரை இழந்து நிற்கும் பிள்ளைகள்; இதொகா பொது செயலாளர் ஆறுமுகன் இரங்கல்!

தாயாரை இழந்து நிற்கும் பிள்ளைகள்தமிழக போராளி புரட்சித் தலைவியின் மறைவு இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களுக்குப் பேரிழப்பாகும் என தனது இரங்கல் செய்தியில் இ.தொ.கா பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தமிழக வரலாற்றில் நீண்டதொரு இடைவெளியை ஏற்படுத்தியுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களுக்கிடையேயும் குறிப்பாக மலையக மக்களிடையேயும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இ.தொ.கா பொதுச் செயலாளரும், நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் விடுத்துள்ள தமது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்....
Read More

“ தமிழ் நாட்டின் அஞ்ஞா நெஞ்சம் சரிந்து விட்டது” அமைச்சர் ராதா இரங்கல்!

இந்தியா தமிழ் நாட்டின் முதல்வரும் அதிமுக வின் தலைவியுமான செல்வி ஜெயலலிதா அவர்கள் இறந்த செய்தி கேட்டு நான் ஒரு கனம் அதிர்ந்து போனேன். இந்தியாவில் இருந்த பெண் தலைவிகளில் இந்திராகாந்தி அம்மையாரின் இறப்பிற்கு பின்னர் அவரை ஒத்த அஞ்ஞா நெஞ்சம் கொண்ட பெண் தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களின் இறப்பு இந்தியாவிற்கும் ஏன் இந்த உலகிற்கும் ஒர் பேர் இழப்பாதும். குறிப்பாக தமிழ் மக்களுக்கு ஒரு பாரிய இழப்பாகும். தமிழ் அஞ்ஞா நெஞ்சம் கொண்டு தமிழ்...
Read More

அம்மாவின் மறைவுக்கு மலையகத்தில் அஞ்சலி!

  தமிழ் நாட்டு முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் மறைவைக்கு, மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். மலையகத்தின் தோட்டப்பகுதிகளிலுள்ள ஆலயங்களிலும், பொது இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அட்டன், கொட்டகலை, மஸ்கெலியா, பொகவந்தலாவ, நோர்வூட், தலவாக்கலை, அக்கரப்பத்தனை, டயகம போன்ற பகுதிகளிலும் மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. அக்கரப்பத்தனை எல்பியன் மற்றும் பெரிய நாகவத்தை போன்ற தோட்டங்களில் வெள்ளைக்கொடி பறக்கவிட்டு மெழுகுவர்த்தி வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடதக்கது. இதன்போது தோட்ட பொது மக்கள், பாடசாலை மாணவர்கள்...
Read More
error: Content is protected !!