Home > Top News > தேயிலை உற்பத்தி பின்தங்கி வருவது நாட்டின் அடையாளத்தை இழக்கும்!

தேயிலை உற்பத்தி பின்தங்கி வருவது நாட்டின் அடையாளத்தை இழக்கும்!

இலங்கை நாட்டில் குறிப்பாக இன்று சுமார் 05 வருடங்களாக பெரும்பாலும் மலையக மக்கள் தம் உழைப்பு சுரண்டப்படுவதாகவும் அதற்கான ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் போராடுவது யாவரும் அறிந்ததே.

இருப்பினும் இவ்விடயம் தொடர்பான உண்மை நிலவரம் இது வெறும் குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தினரது பொருளாதாரம் சார்ந்த ஒரு விடயம் இல்லை. இது உண்மையில் இலங்கை நாட்டின் எதிர்கால நிலையான அபிவிருத்தியை சார்ந்தது என்பது யாவரும் அறிந்தும் அலட்சியப்படுத்தும் ஒரு பேரழிவு ஆகும்.

பொருளாதார ரீதியாக இலங்கை உலக அளவில் பேசப்பட்டு வர முக்கிய காரணமாக இருந்தது தேயிலை உற்பத்தியும் அதன் தரமும் என்பது மறுக்க முடியா சான்று. இலங்கை பொருளாதார வளர்ச்சியில் இயற்கை கனியவளங்களின் அகழ்வு, இறப்பர் உற்பத்தி, சுற்றுலாதுறை ஆகியனவும் பங்களித்தாலும் தேயிலை உற்பத்தியே பிரதானமானதும் நிலையானதும் ஆகும்.
இன்று வணிக ரீதியாக தேயிலை உற்பத்தி பின்தங்கி வருவது நம் எதிர்கால நாட்டின் அடையாள இழப்பும் தேயிலை உற்பத்தியை வாழ்வாதாரமாக கொள்ளும் மக்களின் வாழ்கை தரத்தில் வீழ்ச்சியையும் ஏற்படுத்தும்.

இன்றைய அவர்களது போராட்டம் பலரது பார்வையில் போராட்டமாக மட்டுமே தெரிகிறது. ஆனால், இது உண்மையில் தேயிலை உற்பத்தி திறன் குறைந்ததாலும் , சர்வதேச சந்தையில் கேள்வி குறைந்ததாலும், வணிகர்களின் இலாபம் குறைந்ததாலும் , அரசியலின் சரியான முகாமைத்துவம் இல்லாததாலும் ஏற்பட்ட எதிரான தாக்கமேயாகும்.

உற்பத்தித்திறன் குறைவடையும் பொழுது வினைத்திறனும் குறைவடையும். இது அதன் துணை காரணிகளிலும் தாக்கத்தையேற்படுத்தும். ஆகவேதான் ஊதியம் குறைவாக வழங்கப்படுகிறது. சரியான முகாமைத்துவமும் , அரசியல் வாதிகளின் செயற்திரனுமே உண்மையில் ஊதிய உயர்வுக்கான தீர்வையும் இலங்கையினது அடையாளத்தையும் பாதுகாக்க வழிவகுக்கும்.

இன்னும் தாமதம் இலங்கையின் வெளிநாட்டு கடன் தொகையில் அதிகரிப்பே.

சிந்திப்போம் செயற்படுவோம்…..

ஆண்டும் உற்பத்தியும் (metric tonnes)
2010 – 331.4

2011 – 327.5

2012 – 328.4

2013 – 340.2

வி. கோபிநாத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!