Day

December 7, 2016

ஊர்காவற்துறை கொலை வழக்கு; மூவருக்கு இரட்டை மரண தண்டனை!

யாழ் – ஊர்காவற்துறை நாரந்தனைப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட மூன்று எதிரிகளுக்கும் இரட்டை மரணதண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குறித்த வழக்கு தொடர்பான விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி மா. இளஞ்செழியன் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளார். எதிரிகள் மூவருக்கும் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐவருக்கும் தலா...
Read More

அம்பகமுவ கோரளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

அம்பகமுவ கோரளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (105) அம்பகமுவ பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. பிரதேச செயலாளர் தலைமையில் ஆரம்பமான இக்குழு கூட்டத்தை ஒருங்கிணைந்த தலைவர்களான கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்¸ பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ ஆகியோர் தலைமை தாங்கினர். இதன்போது அம்பகமுவ பிரதேசத்திற்குட்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள்¸ பொலிஸ் அதிகாரிகள்¸ ஊடகவியலாளர்கள்¸ மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.   பா.திருஞானம்

எந்த ஒரு சமூகத்தினுடைய வரலாறும் திரிபுபடுத்தப்படவோ அல்லது புறக்கணிக்கப்படவோ கூடாது!

தமிழ் மொழி மூல வரலாற்று பாடத்திட்டத்தில் தமிழர் தொடர்பான வரலாறு புறக்கணிக்கப்பட்டிருப்பது தொடர்பில் விசேட குழு ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் மூலமாக வெளியிடப்படுகின்ற பாடநூல்களில் (தரம் 6¸7¸8¸9¸10) வரலாற்று பாடத்திட்டத்தில் தமிழர் தொடர்பான வரலாறு திட்டமிடப்பட்டு புறக்கனிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றை முன்வைத்திருந்தார். அதற்கு அமைய அவரின் வேண்டுகோளுக்கு இணங்க கலந்துரையாடல் கூட்டம் ஒன்று கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்...
Read More

அக்கரப்பத்தனை கிளாஸ்க்கோ தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

அக்கரப்பத்தனை கிளாஸ்கோ தோட்டத்தினை சேர்ந்த 150 ற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று 07 ம் திகதி காலை 09 மணிமுதல் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை 04 ம் திகதி தோட்ட தொழிற்சாலையில் பணிப்புரியும் உத்தியோகஸ்தர்கள் மத்தியில் தொழிற்சாலையில் வைத்து முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த உத்தியோகஸ்தர்கள் இன்று 07 தி கதி வழமைப்போல் தொழிலுக்கு வந்தபோதிலும் தோட்ட அதிகாரியால் தொழிற்சாலையை திறப்பதற்கு அனுமதி வழங்கவில்லை இதேவேளை தோட்ட தொழிலாளர்கள் பறிக்கும் தேயிலை...
Read More

பண்டா ஆச்சே நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!

பண்டா ஆச்சே – இந்தோனிசியாவின் சுமத்ரா தீவைச் சேர்ந்த ஆச்சே பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட 6.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் அப்பகுதியில் கட்டிடங்கள் பல சரிந்து, சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இஸ்லாமியர்கள் அதிகமுள்ள அப்பகுதியில், அதிகாலையில் பெரும்பாலானோர் மசூதிக்கு தொழுகைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில் இப்பேரிடர் நிகழ்ந்துள்ளது.

கருணா அம்மானுக்கு பிணை!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண சிறப்புத் தளபதியாக இருந்த நிலையில் அந்த அமைப்பிலிருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட கருணா அம்மான் என்ற அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகிய நிலையில் பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அரசுக்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் நிதிமோசடிப் பிரிவினால் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் விநாயகமூர்த்தி...
Read More

யாழ். பொது நூலக எரிப்புக்கு மன்னிப்புக் கோரினார் ரணில்!

1981ம் ஆண்டில் ஐதேக அரசாங்கம் பதவியில் இருந்த போது யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்டமைக்காக மன்னிப்பு கோருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்காக மன்னிப்பு கோருமாறு கூட்டு எதிர்க்கட்சியினரிடமும் அவர் கோரியுள்ளார். 1981ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த போது யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதாகவும் இது பிழையானது எனவும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் ரணில் தெரிவித்தார். உங்களது அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளுக்காக நீங்களும் மன்னிப்பு கோர...
Read More

“விதுரங் சபா” கலாச்சார நிகழ்வு!

இலங்கையில் காணப்படும் தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரிய பயிலுனர்ளிடையே கலை கலாச்சராங்கள் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் இவர்களின் ஊடாக எதிர்காலத்தில் மாணவர்களிடத்தில் தமிழ், சிங்களம், முஸ்லிம், கிருஸ்த்தவ பேதமின்றி இனங்களிடையே நல்லிணக்த்தை ஏற்படுத்தும் முகமாக கொழும்பு தாமரை தடாகத்தில் “விதுரங் சபா” கலைச்சரா நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கல்வி அமைச்சர்அகிலவிராஜ் காரியவசம் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இரதாகிருஸ்ணன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துக் கொண்டார்கள். இதன் போது இலங்கைளில் காணப்படும் அனைத்து தேசிய கல்வியற் கல்லூரி...
Read More

பண்டா ஆச்சேவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி!

பண்டா ஆச்சே – இந்தோனிசியாவின் வடக்குப் பதியான ஆச்சேவில், இன்று புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. “இந்த நிலநடுக்கம் மிகவும் சக்தி வாய்ந்ததாக உணரப்பட்டதோடு, கட்டிடங்கள் சரிந்ததால் அப்பகுதியில் வசிப்பவர்கள் அதிர்ச்சியில் வீட்டை விட்டு வெளியேறினர்” என்று தகவல்கள் கூறுகின்றன. இதுவரையிலான நிலவரப்படி இப்பேரிடரில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் பலர் கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

சோ இராமசாமி காலமானார்!

சென்னை – தமிழ்த் திரையுலகில் நடிகர், நாடகாசிரியர், பத்திரிக்கை ஆசிரியர், எழுத்தாளர், அரசியல் ஆலோசகர், வழக்கறிஞர், எனப் பன்முகத் திறமை கொண்ட சோ இராமசாமி மாரடைப்பால் காலமானார். இவர் அண்மைய சில நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
error: Content is protected !!