Home > கட்டுரை > ஊதியம் இன்றி அடிமைப்படுத்தப்படும் இலங்கையர்கள் : அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

ஊதியம் இன்றி அடிமைப்படுத்தப்படும் இலங்கையர்கள் : அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணிபுரிந்து வரும் இலங்கையர்கள் சிலரின் வேலை காலம் முடிவடைந்துள்ள போதும் வேலை வழங்குனர்கள் மீண்டும் வேலை காலத்தை புதுப்பிக்காமல் கொடுப்பனவுகள் வழங்காமல் அடிமைப்படுத்தப்படுவதாக தொம்சன் ரொய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி மிகவும் கவலைக்குரியதே காரணம் தன்நலம் கருதாது குடும்பம் மேலோங்க
வேண்டும் எனும் சிறந்த நோக்கத்திற்காக இரவு பகலென்று இல்லாது சகல கஷ்டங்களையும்
தாங்கிக்கொண்டு என்னவேலையாக இருந்தாலும் பரவாயில்லை உழைத்தே ஆகவேண்டும் எனும்
போராட்டத்துடன் வாழும் இவ்வுழைப்பாளர்களின் நிலை கேள்விக்குறியே ?

உண்மையில் இந்த விடயம் வெறும் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை சார்ந்ததல்ல இதுவும்
நாட்டின் பொருளாதார நிலைமையை எடுத்துக்காட்டும் ஒரு எடுகோள் . காரணம் ( Brain
Draining) அறிவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறல் இதன் தாக்கம் உள்நாட்டில்
சிறந்த மனித வளங்கள் பயன்படுத்தப்படாமல் வெளிநாடுகளுக்கு தாரைவார்த்து
கொடுப்பதே. சிறந்த ஊழியர் வளம் இருந்தும் அவர்கள் முழுமையாகவும்
வினைத்திறனாகவும் பயன்பதுத்தப்படாமையால் உள்நாட்டின் உற்பத்தி, விவசாயம்
மற்றும் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சி பின்னடைவை
சந்திக்கும்.

இவ்வாறானதோரு நிலைமை இரண்டு தசாப்தங்களுக்கு முன் இருந்ததாக கூறமுடியாது காரணம்
அன்றைய காலகட்டத்தில் இலங்கையின் பொருளாதாரம் தன்னிறைவு பொருளாதாரத்தை
நோக்கியதான நகர்வாக இருந்தது. விவசாயம், பெருந்தோட்ட பயிர்ச்செய்கை , ஆடை
உற்பத்தி, என சகல துறைகளும் வளர்ச்சியை நோக்கியதாக இருந்தது ஆனால்,  படிப்படியாக பாதக அரசியல் மற்றும் முகாமைதத்துவ நிலைமைகளால் இவை வீழ்ச்சி கண்டுவிட்டன. இன்றும் 50 ஆண்டுகளுக்கு முன் பயிரிடப்பட்ட பயனிழந்த தேயிலை கன்றுகளும் இறப்பர் மரங்களும், தராதரம் பாதித்துவிடுமோ என விவசாயம் மற்றும் கைத்தொழில்களில் நாட்டமின்மையும் அதனை மேட்கொள்பவர்களுக்கான சரியான அங்கீகாரம்
கிடைக்காமையும் இவ்வாறு பலதரப்பட்ட காரணிகள் உள்நாட்டு சிறப்பு மனித வளங்களின்
இடம்பெயர்வுக்கு வழிவகுக்கின்றன.

வெறும் அரசியல் காரணியை மட்டும் குறைகூறுவது சரியா என்றால் ? சரி என்றுதான்
கூறவேண்டும் . காரணம் அரசியல் சாணக்கியர்களின் சுய லாபம் மற்றும் அரச
துறையினரது பணத்தின் மீதான மோகமும்தான் இவ்வாறானதொரு துர்பாக்கிய நிலைமை
உருவெடுக்க வழிவகுத்தது என்றால் மறுக்கமுடியாது.  காரணம் செல்வந்தர்கள், செல்வம் தேடுபவர்களை (ஏழைகளை) முடக்குவதே சமூக இயல்பு.

சரியான சட்ட திட்டங்கள் அமுலில் இருந்தபோதிலும் பணத்தின் முன்னால் சட்ட
திட்டங்கள் வெறும் புத்தக பதிவுகளே.

உழைப்பையும் , நேர்மையையும் மட்டுமே நம்பி வாழும் அன்பு தோழர்களுக்கு இந்த
கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.

எப்போதும் உங்கள் மனதிற்கு உண்மையாய் இருங்கள் , காலம் ஒரு நாள் பணம் வெறும்
காகிதமே என உணர்த்தும் காலம் வெகு சீக்கிரம்.

வா.கோபிசாந்த்

Leave a Reply

error: Content is protected !!