Day

December 9, 2016

ஆங்கிலம் ஒரு மொழியே ஒழிய அது அறிவல்ல!

  இன்று உலகளவில் பிரபல்யம் பெற்று சர்வதேச மொழியாக பெயர் பெற்று குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள மொழியை பற்றிய சிறு ஆராய்ச்சி… சீன 1,197,000,000, ஸ்பானிஷ் 414,000,000, ஆங்கிலம் 335,000,000. ஆராய்ந்ததில் தெரிந்தது ஆங்கிலம் உலகில் பேசப்படும் மொழிகளில் மூன்றாவது இடம் என்பது. உலகில் சுமார் 20% வீதமான மக்கள் பேசும் மொழி (சீன மொழியான) மென்டரின் ஆகும். இருப்பினும் ஏன் ஆங்கிலம் மட்டும் குறிப்பாக இலங்கை உள்ளிட்ட வளர்ந்து வரும்...
Read More

பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து நாடாளுமன்றில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆற்றிய நீண்ட உரை!

ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவைகளான உணவு¸ உடை¸ உரையுள் என்பவற்றில் மனிதனின் உரையுள் (வீடு) அவனது வாழும் உரிமையினை கட்டாயப்படுத்துகின்றது. ஆனால் ¸அவ் உரிமை தோட்ட மக்களின் வாழக்;கையில்; முழுமையாக கிடைத்து வருக்கின்றதா? என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது. 1816 காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த இவர்கள் தேயிலை¸ தென்னை¸ இறப்பர் செய்கையில் ஈடுப்பட்டனர். அக்காலப்பகுதியில் அனைத்து தோட்டங்களிலும் ¸லயக் காம்பிராக்களே காணப்பட்டன. இது 10 க்கு 12 அடி அறையும் விராந்தாவையும் கொண்டது. இதுவே...
Read More

யாழ் மக்களிடம் மன்னிப்பு கோரியது போன்று; பிரதமர் மலையக மக்களிடமும் மன்னிப்பு கோரவேண்டும் அனுரகுமார!

யாழ் நூலகம் தீவைத்து அழிக்கப்பட்டத்தற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மன்னிப்புகோரியதைப் போன்றே பெருந்தோட்டத்துறை மக்களின் இன்றைய நிலைக்காக, அவர்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும்என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றில் தெரிவித்தார். அதேபோன்று 180 வருடங்களுக்கு அதிமான காலமாக அந்த மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் பேரனர்த்தங்களுக்கு இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். நாடாமன்றத்தில் நேற்று நடைபெற்ற மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி...
Read More

டங்கள் பாலர் பாடசாலையில் ஒளி விழா!

டங்கள் பாலர் பாடசாலையின் ஒளிவிழா நிகழ்வு 07.12.2016 டங்கள் வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது மாணவர்களின் நடனக்கலை நிகழ்வுகள் இடம்பெறறதுடன்.   மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன நிகழ்வில் நோர்வுட் பொலிஸ் நிலைய அதிகாரிகள் தோட்ட அதிகாரிகள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர். நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இரமசந்திரன்.

அட்டன் ஆரியகம பாதையை திறந்து வைத்தார் ஆறுமுகன் தொண்டமான்!

அட்டன் நகரசபைக்குட்பட அரியக பிரதான பாதை செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது. பாதைதிறப்பு விழாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்சொயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய அறுமுகன் தொண்டமான் 09.12.2016 திறந்து வைத்தார். ஆறுமுகம் தொண்டமானின் 8 லட்சம் ரூபாய் நிதியொதீக்கீட்டில் புனரமைக்கப்பட்ட மேற்படி பாதை திறப்பு விழா நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் முத்துசிவலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர். நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்.

குடிநீர் இன்றி தோட்ட மக்கள் அவதி! (photos)

மலையக பிரதேசத்தில் தற்போது கடும் வெயில் காரணமாக பல தோட்டங்களை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் குடி நீரை பெற்றுகொள்ள முடியாமல் பல சிரமங்களை எதிர்நோக்குவருவதாக தெரியவருகின்றது . குறிப்பாக அக்கரப்பத்தனை கிளாஸ்கோ தோட்ட நெதஸ்டல் பிரிவில் வாழும் 150 குடும்பங்களை சேர்ந்த மக்கள் சுத்தமான குடி நீர் இல்லாமல் பெரும் சிரமங்களை சந்திப்பதாக இவர்கள் தெரிவிக்கின்றனர. இத்தோட்டத்தில் அதிகமான இடங்களில் ஊற்று நீர் இருக்கின்றபோதிலும் இம்மக்கள் சுத்தமான நீரை பருகமுடியாமல் சேற்று நீரை பருகவேண்டிய சூழ் நிலைக்கு...
Read More

லிந்துல்ல தங்கக்கலை தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

  லிந்துலை தங்ககலை தோட்டத்தில் உள்ள 500ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 09.12.2016 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். தோட்ட நிர்வாகம் தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்திற்கு அரை நாள் சம்பள வீதம் வழங்குவதாகவும், கடந்த காலங்களில் 18 கிலோவிற்கு குறைவாக கொழுந்து பறித்த போது முழு நாள் சம்பவம் வழங்கியதாகவும், கூட்டு ஒப்பந்தம் முடிந்த பின்பு குறைந்த கிலோ கொழுந்து பறிக்கும் போது முழு நாள் சம்பளம் வழங்க முடியாது எனவும் நிர்வாகம் அறிவித்ததையடுத்து இத்தோட்ட தொழிலாளர்கள் அதற்கு எதிர்ப்பு...
Read More
error: Content is protected !!