Home > கட்டுரை > ஆங்கிலம் ஒரு மொழியே ஒழிய அது அறிவல்ல!

ஆங்கிலம் ஒரு மொழியே ஒழிய அது அறிவல்ல!

 

இன்று உலகளவில் பிரபல்யம் பெற்று சர்வதேச மொழியாக பெயர் பெற்று குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள மொழியை பற்றிய சிறு ஆராய்ச்சி…

சீன 1,197,000,000, ஸ்பானிஷ் 414,000,000, ஆங்கிலம் 335,000,000. ஆராய்ந்ததில் தெரிந்தது ஆங்கிலம் உலகில் பேசப்படும் மொழிகளில் மூன்றாவது இடம் என்பது.

உலகில் சுமார் 20% வீதமான மக்கள் பேசும் மொழி (சீன மொழியான) மென்டரின் ஆகும். இருப்பினும் ஏன் ஆங்கிலம் மட்டும் குறிப்பாக இலங்கை உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளிலும் சரி வளர்ந்த நாடுகளிலும் சரி மிகவும் பிரபல்யம் அடைந்த பரவலாக பேசப்படுகிற மொழியாக உருவெடுத்தது.

இந்த ஆராச்சியின் இறுதியில் நான் உணர்ந்த உண்மை, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் பல ஆங்கிலேயரின் காலனித்துவத்திற்குட்பட்டிருந்தது. அவ்வாறு இருந்த நாடுகள் தம் மொழி , கலாச்சாரம், மற்றும் தனித்துவம் இவற்றை கடந்து ஆங்கிலேயரது மொழி , கலாச்சாரம், மற்றும் பழக்கவழக்கங்களுடன் கலப்படம் செய்து கொண்டன.

உண்மையில் சுதந்திரம் பெற்ற போதும் இன்னும் அவர்களது மொழி , கலாச்சாரம், மற்றும் பழக்கவழக்கங்களுக்கு பழக்கபடுத்தி நம்மில் இன்னும் ஆதிக்கம் செலுத்தும் ஆளுமை , சாதுர்யம், சாமர்த்தியம் அவர்களுக்கு கைவந்த கலைதான்.

உண்மையில் ஒரு புறம் கவலையாக இருந்தாலும் மறுபுறம் இது ஒருவிதத்தில் பயனுள்ளதுதான். ஆனால் மொழியை மொழியாக பார்க்கும் பார்வை நம்மவர்க்கு இல்லை . ஆங்கிலம் வெறுமனே ஒரு மொழியாக இல்லாமல் இங்கு அறிவாக, தராதரமாக , அந்தஸ்தாக
பாவிக்கப்படுவதே வருத்தம்.

இதையும் விட வருந்தத்தக்கது நம் தாய் மொழி தமிழ் கூட ஆங்கிலத்துடன் கலப்படம் ஆகிவிட்டதே என்பதுதான்.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று கூறிய பாரதியின் கூற்று.

வா.கோபிசாந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!