Day

December 13, 2016

நுவரெலியாவில் நடைபெற்ற வலது குறைந்த பிள்ளைகளுக்கான இலவச மருத்துவ முகாம்!

டீ பீல்ட் நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் தர்மேந்திரராஜ் ஏற்பாட்டில் ஐரோப்பியன் யூனியன் மற்றும் சயில்ட் பண்ட் ஸ்ரீலங்கா ஆகியன இணைந்து நுவரெலியா பிரதேச செயலகத்தினூடாக நடாத்தப்பட்ட வலது குறைந்த பிள்ளைகளுக்கான இலவச மருத்துவ முகாம் 8.12.2016 நுவரெலியா பரிசுத்த திருத்துவ கல்லூரியின் ஆரம்ப பிரிவு மண்டபத்தில் நடைப்பெற்றபோது நுவரெலியா மாவட்ட மேலதிக செயலாளர் மல்லிகா அமரசேகர,பிரதேச செயலாளர் போதிமான்ன,நுவரெலியா வலயக் கல்வி பணிப்பாளர் பியதாஸ,டீ பீல்ட் நிறுவனத்தின் நுவரெலியா காரியாலய தலைமை அதிகாரி நலீன் ஆகியோர்...
Read More

ஆசிரியர்கள் இடமாற்றம்!

மத்திய மாகாணத்திலிருந்து வேறு மாகாணங்களுக்கும், மாகாணத்தின் வலயங்களுக்கிடையிலும் இடமாற்றம் கோரிய ஆசிரியர்களுக்கு இடமாற்ற கடிதங்கள் தற்போது அனுப்பி வைக்கப்படுகின்றன என மலையக ஆசிரியர் முன்னணியின் பொதுச்செயலாளர் இரவீந்திரன் தெரிவித்துள்ளார். பாடசாலை விடுமுறைக்காலம் ஆகையால் கடிதங்கள் ஆசிரியர்களின் தனிப்பட்ட முகவரிக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. மேலும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட ஆசிரியர்களின் விபரங்கள் பாடசாலை விடுமுறை வழங்கிய தினத்திற்கு முன்னதாகவே பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனவே அவற்றைப்பெற்றுக்கொண்டு 20.12.2016 ஆந்திகதிக்கு முன்னதாக மேன்முறையீடு செய்யுமாறு அவர் வேண்டுகொள்விடுத்துள்ளார். கேதீஸ்

வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற ஐவரை 5 குழுக்களாக தேடும் பணியில் பொலிஸாரும், அதிரடை படையினரும்! (UPDATE)

மஸ்கெலியா எமில்டன் வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற ஐவரை பொலிஸாருடன் இணைந்து அதிரடைப் படையினரும் 5 குழுக்களாக பிரிந்து தொடர்ந்தும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 12.12.2016 அன்று திங்கட்கிழமை இரவு முதல் காணாமால் போன இவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர். லக்ஷபான வாழமலை தோட்ட முகாமையாளரின் உறவினர்கள் நால்வரும், இவர்களை வழிகாட்ட சென்ற லக்ஷபான எமில்டன் தோட்ட தொழிலாளி மா. கிருஷ்ணசாமி ஆக ஐவர் இவ்வாறு காணாமல்...
Read More

மடக்கும்புர மண்ணில் பிறந்த பெருமை பேசுபவர்கள் அந்த மண்ணுக்கு என்ன செய்தார்கள்? ராமேஸ்வரன் கேள்வி!

வட்டகொடை – மடக்கும்புர மண் என்பது அதிகமான தலைவர்களை உருவாக்கிய மண் பல அரசியல்வாதிகள் மடக்கும்புர மண்ணுக்கு பெருமை என்று கூறி வருகிறார்கள். அவர்கள் இந்த மண்ணுக்கு என்ன என்ன செய்துள்ளார்கள் என்பதினை முதலில் பார்த்து விட்டு தான் ஏனையவற்றை பேச வேண்டும் என மத்திய மாகாண விவசாய மீன்பிடி, தோட்ட உட்கடமைப்பு இந்து கலாசார அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார். விவசாய அமைச்சின் மூலம் தலவாக்கலை மடக்கும்புர பகுதியில் வசிக்கும் சுமார் 500 குடும்பங்களுக்கு மத்திய...
Read More

மஸ்கெலியாவில் வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற ஐவர் மாயம் – தேடும் பணி தீவிரம்!

  மஸ்கெலியா எமிட்ன் வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற ஐவர், 12.12.2016 அன்று திங்கட்கிழமை இரவு முதல் காணாமால் போயுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருடன் இணைந்து அதிரடைப் படையினரும் இவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினர். லக்ஷபான வாழமலை தோட்ட முகாமையாளரின் புதல்வர் உட்பட ஐவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இவர்கள், சிவனொளிபாத மலைக்கு சென்றுவிட்டு பின்னர், எமில்டன் காட்டுக்கு போயுள்ளதாக தெரியவருகிறது. 12.12.2016 அன்று இரவு முதல் இவர்களுடன் எவ்வித தொடர்புகளையும்...
Read More

தலைவர் பதவியில் இருந்து ஏ.பி.டி.வில்லியர்ஸ் விலகல்!

தென்னாபிரிக்க டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவர் பதவியில் இருந்து ஏ.பி.டி.வில்லியர்ஸ் விலகியுள்ளார். அத்துடன் அவர் இலங்கை அணியுடனான மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் இருந்தும் விலகியுள்ளார். காயம் காரணமாக அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஃபப் டு ப்ளசி அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க கிரிக்க சபை இதனை உறுதிப்படுத்தி உள்ளதோடு; ஃபப் டு ப்ளசியின் நியமனம் நிலையானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாரில் இலங்கையர்கள் அடிமைகளாக! புதிய சட்டம் இன்று முதல் அமுலுக்கு!

கட்டாரில் உலக கிண்ண காற்பந்தாட்டத் தொடருக்கான மைதான நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்னும் அடிமைகளாக நடத்தப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. போதிய வேதனம் வழங்கப்படாமல், நேரக் கட்டுப்பாடின்றி இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடுமையாக அங்கு வேலை வாங்கப்படுவதாக முன்னரே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்நிலை தொடர்ந்தால் 2022ம் ஆண்டு அங்கு உலக கிண்ண தொடர் நடத்துவது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தொழிலாளர்களின் சுதந்திரம் மற்றும்...
Read More

சீனி உற்பத்தி சிக்கல் நிலையை எதிர்கொண்டுள்ளதால் சீனியின் விலையில் மற்றம்!

நாட்டின் சீனி உற்பத்தி சிக்கல் நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் சீனியின் விலை அதிகரிக்கலாம் எனவும் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. இதேவேளை கொக்ஹேய்ன் கடத்தல் காரணமாக பிரேசிலில் இருந்து சீனி இறக்குமதி செய்வதை நிறுத்தி அந்த சந்தர்ப்பத்தை இந்தியாவிற்கும் தாய்லாந்திற்கும் வழங்கவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டிற்கு வருடாந்தம் 480,000 ஆயிரம் மெற்றிக்தொன் சீனி தேவைப்படுகின்றது. உள்நாட்டு சீனி உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளமையால் இதில் 90 வீதமான பகுதி வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றது. அதன்படி மாதாந்தம் 40,000 மெற்றிக்தொன்...
Read More

அதிவேக நெடுஞ்சாலை கட்டணங்களில் மாற்றம்! வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம்!

இரவு 9 மணியில் இருந்து காலை 5 மணி வரையில் அதிவேக நெடுஞ்சாலைகளின் கட்டணங்களை குறைப்பதற்கான திட்டம் அடுத்த மாதம் 1ம் திகதி முதல் அமுலாக்கப்படவுள்ளது. வரவு செலவுத்திட்டத்தில் இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. இதன்படி இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியாராச்சி தெரிவித்துள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் ஆரம்பம்! (படங்கள்)

2017ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான இன்று(13) ஆரம்பமாகியது. சிவனொளிபாதம் (சிங்களவர்கள் சிறிபாத என்றும் அழைப்பர்) கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது. மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு கௌதம புத்தரின் காலடி சுவடாக பௌத்தர்களால் கருதப்படுகிறது. இந்து சமயங்களின் நம்பிக்கைகளின்படி சிவனின் காலடி சுவடாக கருதப்படுவதோடு இஸ்லாமியர்கள் இதை (பாவா ஆதம் மலை) ஆதாமின்...
Read More
error: Content is protected !!