Home > கட்டுரை > பள்ளிப்பருவம் கற்றுத்தரும் தொழில்முறை கற்கை!

பள்ளிப்பருவம் கற்றுத்தரும் தொழில்முறை கற்கை!

நாம் கற்கும் அரச பாடசாலைகளிலூடான கல்வி திட்டமானது ஆங்கிலேயரது வழிகாட்டலின் கீழ் துவக்கிவிடப்பட்டு செயற்படுவது அனைவரும் அறிந்ததே.

பாடசாலைகளிலூடான கல்வி திட்டமானது கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழுவின் கீழ் 1836 ம் ஆண்டு இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழு (Colebrooke-Cameron Commission) என்பது பிரித்தானிய இலங்கையின் நிருவாகத்தை மதிப்பிடுவதற்கும், அந்நாட்டின் நிருவாகம், நிதி, பொருளாதாரம், மற்றும் நீதித்துறை ஆகிய…வற்றில் மெற்கொள்ளவேண்டிய சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்கவும், 1829 ஆம் ஆண்டில் பிரித்தானிய குடியேற்ற அலுவலகத்தினால் அமைக்கப்பட்ட ஒரு அரசு ஆணைக்குழுவாகும்.

CWW. கன்னங்கரா அவர்களது அயரா உழைப்பால் 1938ம் ஆண்டின் பின் இலவசமாக கல்வி போதிக்கப்பட்டாலும் கடந்த 180 வருடங்களாக கல்விதிட்டம் போதியளவு சீர்திருத்தம் பெற்றுள்ளதா ?, என்பது நடைமுறையில் கேள்விக்குறியே. காரணம் இளம்வயது முதலே இலவச கல்வியின் மூலம் உயர்தரம் வரை தேர்ச்சி பெற்ற பிரஜை என்ற ரீதியில் 19 வயதை எட்டும் பொழுது தொழில் ரீதியான எவ்வித அறிவும் , அனுபவமும் இல்லை.

அவ்வாறான நிலையில் நடுத்தர வர்க்க வகுப்பினை சேர்ந்த ஒரு குடிமகன் என்ற ரீதியில் வெளிநாட்டு தொழில்முறை கற்கை நெறிகளை தொடர்வதற்கான வளங்களும் கிடைக்கவில்லை.

இவ்வாறானதொரு இக்கட்டான சூழ்நிலையில் ஒரு சமூக அந்தஸ்து மிகு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்வதில் சற்று சிரமங்களை சந்திக்க நேர்ந்தது.

இவ்வாரானதொரு நிலைமையில் புலப்பட்ட ஞானம்தான் நமது 19 வருட பாடசாலைகளிலூடான கல்வி அடிப்படையில் கிறகித்தல் ஆற்றலை வளர்க்கும்முகமாக இருந்தாலும், நாம் நம் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்திகொள்ளும் தொழில்முறை அறிவு பாடசாலைகளிலூடான கல்வி திட்டத்தில் போதியளவு வளர்க்கப்படவில்லையே என்பது.

உண்மையில் இதன் வெளிப்பாடுதான் தமிழ் பேசும் சமூகத்தினரினது குறிப்பாக இளைஞர்களது, சாதாரண சமூக அங்கீகாரம் இல்லா தொழில்வாய்ப்புகளுக்கான தலைநகரை நோக்கிய இடம்பெயர்வு. உண்மையில் அரச அங்கீகாரமிகு தொழில்முறை கற்கை நெறிகளை தொடர்வதற்கான வாய்ப்புக்கள் குறிப்பிட்ட அளவு காணப்பட்டாலும், அதனை பின்பற்றி தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்வதில் பல பிரயோகரீதியான பின்னடைவுகள் இருப்பது யதார்த்தம். காரணம் சாதாரண போதியளவு வருமானம் இல்லாத குடும்ப பின்னணி, காலம், போட்டித்தன்மை, சுமை, வயது இவையெல்லாம் அரச அங்கீகாரமிகு தொழில்முறை கற்கை நெறிகளை பின்பற்றுவதில் தாக்கம் செலுத்தும் காரணிகள். எளிமையில் வெளிப்படுத்துவதாயின், 19 வயது எட்டியதும் பல்வேறு சுமைகளோடு சுமார் 5 – 6 வருடங்கள் அரச அங்கீகாரமிகு தொழில்முறை கற்கை நெறிகளை பின்பற்றி ஒரு சமூக அந்தஸ்து மிகு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொண்டு வாழ்வாதாரத்தை நிலைப்படுத்திகொள்ளும் அளவில் காலமும், வளமும், பொறுமையும் இல்லை என்பதே யதார்த்தம்.

இவ்வாறான துர்பாக்கிய நிலைமை எதிர்கால நடுத்தர மற்றும் வறுமை கோட்டின்கீழ் வாழும் சந்ததியினரது வாழ்க்கையில் வெறும் வயிற்று பிழைப்புக்கான இலட்சியங்களை துறந்த தலைநகரை நோக்கிய இடம்பெயர்வாக இருக்கும் என்பது மறுக்கமுடிய ஒன்றாகும்.

கல்வித்திட்டங்கள் தொழில்முறை அறிவு புகுத்தும் வண்ணம் சீர்திருத்தப்படல் வேண்டும்.

வா.கோபிசாந்த்

Leave a Reply

error: Content is protected !!