Day

December 19, 2016

பொகவந்தலாவ கொ்க்கஸ்வோல்ட் முன்பள்ளிபாடசாலையின் பரிசளிப்பு விழா!

பொகவந்தலாவ கொ்க்கஸ்வோல்ட் மத்திபிரிவில் உள்ள முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா ஆசிரியா் ஸ்ரீமதி புரஸ்பவதி தலைமையில் 17.12.2016 சனிகிழமை இடம்பெற்றது . இந் நிகழ்வில் முன்பள்ளியை முடித்து கொண்டு அரசபாடசாலைக்கு செல்லும் மாணவா்களை கெளரவிக்கும் நிகழ்வு இடம் பெற்றதோடு மாணவா்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றதோடு இந் நிகழ்விற்க்கு பிரதம அதிதியாக தோட்ட உதவி முகாமையாளா் வெளிகள உத்தியோகத்தா்கள் ஆகியோா் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டமாணவா்களுக்கு பரீசில்கள் வழங்கி வைத்தமையும் குறிப்பிடதக்கது. பொகவந்தலாவ நிருபர். எஸ்.சதீஸ்.

இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் பொகவந்தலாவ மற்றும் அட்டன் நோர்வூட் பகுதியில் மோசடி; கமலதாசன் பணிப்பாளருக்கு முறைப்பாடு!

கௌரவ எரந்த வெளியங்கே தலைவர் பணிப்பாளர் நாயகம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தலைமை காரியாலயம் கொழும்பு கௌரவ பணிப்பாளர் நாயகம் தலைவர் அவர்களுக்கு ! நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் இடம்பெற்ற முறைக்கேடு தொடர்பாக நுவரெலியா மஸ்கெலியா தேர்தல் தொகுதி கௌரவ பிரதமர் அவர்களின் நேரடி வழிகாட்டலில் தங்களின் தொலைநோக்கு சிந்தனையில் இளைஞர் யுவதிகளுக்கான பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமைக்கு முதன்கண் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். இளைஞர்களுக்கான இளைஞர் பாராளுமன்றம் என்பது புதிய அரசியல்...
Read More

தடைப்பட்டிருந்த டிக்கோயா பாடசாலை நிர்மானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன!

கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணனின் ஆலோசனைக்கேற்ப டிக்கோயா தமிழ் வித்தியாலயத்தை நுண்கலை பாடசாலையாக அபிவிருத்தி செய்வதற்காக நான்கு கோடியே 75 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்திருந்த போதும் கட்டிடங்கள் அமைப்பதற்கான உரிய இடம் ஒதுக்கீடு செய்யப்படாத காரணத்தினால் நிர்மாணப்பணிகள் காலதாமதமானதைத் தொடர்ந்து ஒதுக்கப்பட்ட நிதி வேறொருபாடசாலைக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாடசாலை சமூகம் இவ்விடயம் தொடர்பாக மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரனின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். இதன் பின்பு இவ்விடயம் தொடர்பாக கல்வி இராஜாங்க அமைச்சர்;...
Read More

தமிழுக்கு முன்னுரிமை கொடுத்த சிங்கள அரச உத்தியோகஸ்தர்கள்!

கம்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 100 அரச உத்தியோகஸ்த்தர்களுக்கு 12 நாட்கள் இரண்டாம் மொழியான தமிழ்மொழி பயிற்சிநெறி ஒன்றினை தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் நடாத்தியது. அரச ஊழியர்களிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடாத்தபட்ட இந்த பாடநெறியின் (முடிவு) இறுதி நாள் ஒரு தழிழ் காலாச்சார நிகழ்வாக கம்பளை பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போது அரச சிங்கள உத்தியோகஸ்த்தர்கள் தமிழ் கலாச்சரா நிகழ்வுகளை மேடையேற்றினர். இந்த நிகழ்வுகள் ஏனையோருக்கு...
Read More

குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி எட்டு பெண்கள் தெல்தொட்ட வைத்தியசாலையில்!

இன்று (19) காலை கலஹா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெல்தொட்ட கிரேட்வெளி தோட்டதில் இலக்கம் 08 மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண்கள் மீது குளவி தாக்கியதால் 08 பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகி தெல்தொட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இவர்களில் 03 பேரை மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்க் கொண்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மரம் ஒன்றில் இருந்த குளவி கூடு ஒன்றினை கழுகு ஒன்று தாக்கியதால் குளவி கூடு கலைந்துள்ளதாக தெரிய...
Read More

32 வருடங்களுக்குப் பின்னர் யாழில் இருந்து இந்தியாவிற்கு கப்பல் செல்ல அனுமதி!

வடக்கிலிருந்து இந்தியாவிற்கு 32 வருடங்களின் பின்னர் பயணிகள் கப்பலுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் இரண்டாம் திகதி முதல் ஜனவரி மாதம் 12ஆம் திகதி வரை தென்னிந்தியாவில் நடைபெறவுள்ள ஆலய உற்சவமொன்றில் கலந்து கொள்வதற்காக செல்லும் பக்தர்களின் நலனுக்காக இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையிலிருந்து இந்தியா நோக்கி செல்லும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும்அந்த நாட்டு அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், இந்த பயணத்திற்காக பயண சீட்டு, விஸா மற்றும் கப்பலுக்கான கட்டணம் ஆகியவற்றைஇந்த உற்சவத்திற்கு...
Read More

வரட்சியினால் நீர் மின் உற்பத்தியில் வீழ்ச்சி!

தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நீர் மின் உற்பத்தி இந்த வருடம் 80 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மின் சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார். நீர்த்தேக்கங்களில் 40% நீர் மட்டம் காணப்படுவதாகவும், நீர் மின் உற்பத்தி நிலையங்கள் காணப்படும் பகுதிகளிலுள்ள நீரேந்துப் பகுதிகளில் நீர் வற்றிப் போயுள்ளமையே மின் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டமைக்கு பிரதான காரணம்...
Read More

பால் உற்பத்தி மூலம் அரசாங்கத்திற்கு இலாபத்தை ஈட்டித்தருகின்ற மாவட்டமாக நுவரெலியா திகழ்கின்றது! ; ரமேஸ்வரன்

இலங்கையில் நுவரெலியா மாவட்டத்திலே கால்நடைகள் மூலம் அதிகமான பால் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலும் பால் உற்பத்தி மூலம் அரசாங்கத்திற்கு இலாபத்தை ஈட்டித்தருகின்ற மாவட்டமாகவும் நுவரெலியா மாவட்டம் திகழ்கின்றது என மத்திய மாகாண கால்நடை மற்றும் விவசாய இந்து கலாச்சார அமைச்சர் ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். தலவாக்கலை பிரதேச பெருந்தோட்ட பகுதிகளில் கால்நடை பண்ணை வளர்ப்பை ஊக்குவிக்கவும் சுயத்தொழிலை விருத்திக்கவும் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டபோது இந்நிழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த வாரம் தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டபத்தில்...
Read More

ஆசிரியர்களின் இடமாற்றத்தினை தவறாக பயன்படுத்திக்கொள்ளும் சில ஆசிரியர் சங்கங்கள்! ; இரவீந்திரன்

ஆசிரியர்களின் இடமாற்றத்தினை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சில ஆசிரியர் சங்கங்களின் செயற்பாடுகள் தனக்கு வேதனையளிப்பதாக மலையக ஆசிரியர் முன்னணியின் பொதுச்செயலாளர் இரவீந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஒரே பாடசாலையில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் ஆசிரியர்களினதும், சேவை அவசியம் கருதிய ஆசிரியர்களினதும் மிகை ஆசிரியர்களினதும், இடமாற்றங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் வலயங்களுக்குள்ளும், வலயங்களுக்கிடையிலும், மாகாணங்களுக்கிடையிலும் இடமாற்றத்துக்காக விண்ணப்பித்த ஆசிரியர்கள் தொடர்பில் கடிதங்கள் அனுப்பப்பட்டு...
Read More
error: Content is protected !!