Day

December 22, 2016

அட்டன் சிங்கமலை வன பகுதியில் காட்டுத் தீ!

அட்டன் சிங்கமலை வனப்பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளதால் சுமார் 10 ஏக்கர் வரை தீயினால் சம்பலாகியுள்ளது திம்புள் பத்தனை பகுதியிலேயே 22.12.2016 மாலை 5.50 மணியளவில் தீ பரவியுள்ளது தீயை கட்டுப்படுத்த யாரும் முன்வராத நிலையில் தீ பரவல் அதிகரித்துள்ளதுடன் சிங்கமலை வனப்பகுதியை நோக்கி படர்ந்து செல்கின்றது. கடும் வெயில் காலநிலையில் இனம் தெரியாதோரால் மானா புல் காடுப்பகுதிக்கு தீ வைத்துள்ள நிலையிலே தீ பரவல் ஏற்பட்டுள்ளது அட்டன் நகரப்பகுதிக்கு நீர் வழங்கும் பிரதான வனப்பகுதியில் தீ வைத்துள்ளமையினால்...
Read More

பெரட்டாசி பாதையின் அவலம் பத்து வருடமாக பஸ் போக்குவரத்து இல்லை; மாணவர்களும் நோயாளிகளும் திண்டாட்டம்!

நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட பெரட்டாசி தோட்டம்¸ ரஸ்புருக் பிரிவு பெரட்டாசி பிரிவு பூச்சிகொட பிரிவு பெரட்டாசி  தொழிற்சாலை பிரிவு மேரியல் பிரிவு அயரி பிரிவு எல்பொட வடக்கு மேமலை    பிரிவு காச்சாமலை பிரிவு கட்டகித்துல தோட்டம் வெதமுள்ள கெமினிதன் பிரிவு கந்தலா தோட்டம் போன்ற தோட்டங்களில் சுமார் 8000 க்கு மேற்பட்ட தோட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இத்தோட்டங்களில் பெரும்பாலானோர் தோட்ட தோட்டத்தொழிலார்கள் இவர்கள் வேலை தவிர்ந்த மற்றைய நேரங்களில் விவசாயம்...
Read More

கந்தப்பளை பாக் தோட்ட தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது!

நுவரெலியா கந்தப்பளையைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், கடந்த 13 நாட்களாக முன்னெடுத்து வந்த பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம், நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து முடிவுக்கு வந்தது. நுவரெலியா, கந்தப்பளை – உடபுஸ்ஸல்லாவ பெருந்தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான கந்தப்பளை பாக்குத் தோட்டம், தேயிலை மலைப் பிரிவு, சந்திரகாந்திப் பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், சம்பளம் குறைக்கப்பட்டமை மற்றும் தோட்ட அதிகாரியின் மிலேச்சத்தனமான போக்கை கண்டித்து, கடந்த 13 நாட்களாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் பணிப்பகிஷ்கரிப்பை...
Read More

மலை­ய­கத்தில் சட்ட உதவி ஆணைக்­கு­ழுவின் செயற்­பா­டு­களை விஸ்தரிக்க நட­வ­டிக்கை; திலகர் எம்.பி தகவல்! .

மலை­ய­கத்தில் தீர்க்­கப்­ப­ட ­வேண்­டிய பிரச்­சி­னைகள் பல காலா­கா­ல­மாக இருக்­கின்­ற­போதும் அவ்­வப்­போது நடை­மு­றையில் தீர்வு கண்­டு­கொண்டே முன்­செல்­ல­வேண்­டிய பல பிரச்­சி­னை­க­ளு­க்கும் தீர்வு காண்­பதும் அவ­சி­ய­­மாகும். அண்­மைய காலங்­களில் சட்டம் பற்­றிய புரிதல் இன்மை மற்றும் பிழை­யான வழி­ந­டாத்தல் பல்­வேறு சமூக சிக்­கல்­களை உரு­வாக்­­கி­யுள்­ளது. இதற்கு தீர்வுதேடும் வகை­யில் இலங்கை சட்ட உத­வி ஆணைக்­கு­ழுவின் ஆலோ­சனை, அணு­ச­ர­ணை­யுடன் செற்­ப­டுத்த முனை­வ­தா­கவும் அதன் ஆரம்ப கட்ட­மாக நாளை 24ஆம் திகதி சனிக்­கி­ழமை பொக­வந்­த­லாவை தோட்­டத்தில் யெல­மர்­வொன்றை நடத்­த­வுள்­ள­தா­கவும் தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணியின்...
Read More

புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா!

கம்பளை கல்வி வலையத்திற்கு உட்பட்ட புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா அன்மையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அதிபர் எஸ்.சிவயோகன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கம்பளை கல்வி வலைய கோட்ட கல்வி பனிப்பாளர் திருமதி பி.துஸ்யந்தி அவர்கள் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகாளாக பிரபல வர்த்தகர் ஞானசேகரன்¸ புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள்¸ கம்பளை கல்வி வலைய ஆசிரிய ஆலோசகர்கள் உட்பட பெற்றோரகள்¸ ஆசிரியர்கள்¸ மாணவர்கள்...
Read More

மஸ்கெலியா நகர முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தினால் நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் போட்டியின் பரிசளிப்பு விழா!

மஸ்கெலியா நகர முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த மென்பந்து கிரிக்கெட் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன், தொ.தே.சங்கத்தின் உபதலைவர் நகுலேஸ்வரன், சிரேஸ்ட உபதலைவர் ரட்ணசாமி ஆகியோர் அழைத்து வரப்படுவதையும் வெற்றிப் பெற்றவர்களுக்கு கிண்ணங்கள் வழங்கப்படுவதையும் இங்கு காணலாம். நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

மென்பந்து கிரிகட் சுற்றுபோட்டியில் வெலிமடை யூனைடட் அணி வெற்றி! (Photos)

ஹப்புதளை தங்கமலை தோட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த வார இறுதியில் இடம்பெற்ற அணிக்கு அறுவர் கொண்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் வெலிமடை யூனைடட் அணி வெற்றியீட்டியுள்ளது. தங்கமலை கிரிக்கட் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த இவ் கிரிக்கட் தொடரில் 45 அணிகள் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் இறுதி போட்டியில் பண்டாரவளை எச்.என்.ஏ அணியை வெற்றிக்கொண்ட யூனைடட் அணி வெற்றி கேடயத்தை தன்வசப்படுத்தியது. தொடரின் சிறந்த துடுப்பாட்டகாரருக்கான விருதினை சுபாஸ் பெற்றுக் கொள்வதையும் வெற்றிக்கேடயத்தை தலைவர் சுரேஸ்குமார் பெற்றுக்கொள்வதையும் அணியினரையும்...
Read More

20 இனங்கள், 4 மதங்கள், 3 மொழிகள் என்பதுதான் இலங்கை! ; மனோ கணேசன்

இருபது இனங்களையும், நான்கு மதங்களையும், மூன்று மொழிகளையும் கொண்டதுதான் இலங்கை.  இதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இதை மறந்தால் ஒரே இலங்கை என்பதை மறந்துவிட வேண்டி வரும். தெற்கிலே ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம் என்று சொன்னால், அதற்கு பதிலடியாக வடக்கிலும் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம் என்ற கோஷம் எழும். அதேபோல் வடக்கில் இந்த கோஷம் எழுந்தால், தெற்கிலும் இந்த கோஷம் எழும். எனவே இந்த நாட்டில் நிலவுகின்ற...
Read More

நாவலபிட்டி தோட்டலயன் குடியிருப்பில் தீ! தீயை அணைக்க முற்பட்டவர் காயமுற்று வைத்தியசாலையில்! (Photos)

நாவலபிட்டி கலபட மேல்பிரிவு தோட்டத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் இரண்டு வீடுகள் சேதமாகியுள்ளதுடன் தீயை அணைப்பதற்கு முற்பட்ட இளைஞன் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் (21)நேற்றிரவு 9 மணியவிலே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் கலபட மேற்பிரிவு லயன் குடியிருப்பொன்றில் மூடியிருந்த குறித்த வீட்டில் திடிரென தீரவியுள்ளது. அயலவர்களின் உதவியுடன் சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ள போதும் ஒருவீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன், மற்றைய வீடு பகுதியளவில் கூறைப்பகுதி சேதமாகியுள்ளது....
Read More

ஹப்புதளையில் மின்சாரம் தாக்கி 4 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு! (Photos)

ஹப்புதளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஹிய உடவேரியா தோட்டத்தை சேர்ந்த தோட்ட தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே 21.12.2016 அன்று மாலை உயிரிழந்துள்ளார். உடவேரியா தோட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் சுப்ரமணியம் எனும் 32 வயது மதிக்கத்தக்க 04 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விறகு சேகரிப்பதற்கென சென்றவர் அங்கு மரத்தின் கிளையொன்றினை வெட்டி இழுக்க முயற்சித்த போது அவ் மரக்கிளையானது மின்சாரக்கம்பியில் பட்டதால் உடலில் அதி சக்தி வாய்ந்த மின்சாரம் தாக்கியதால் குறித்த நபர்...
Read More
error: Content is protected !!