Day

December 29, 2016

பாதிக்கப்பட்ட டேசன் தோட்ட மக்களுக்கு கண்டி தமிழ் வர்த்தகர்கள் உதவி!

புஸ்ஸல்லாவ டேசன் தோட்டத்தில் தீயினால் பாதிக்கபட்டு அகதி முகாமில் இருக்கும் 05 குடும்பங்களை சேர்ந்த 28 பேருக்கு கண்டி தமிழ் வார்த்தைகளின் ஏற்பாட்டில் சங்கத்தின் தலைவர் என். லோகநாதன்¸ பொருளாலர் எம்.சுந்திரமூர்த்தி ஆகியோர் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும் எனைய பொருட்களையும் வழங்கி வைத்தனர். தற்போது இந்த பாதிக்கபட்ட மக்களுக்கு தேவையான முதற்கட்ட நிவாரணங்கள் சம்பந்தபட்டவர்களினால் வழங்கபட்டு வருகின்றது. இரண்டாம் கட்டமாக தற்காலிக வீடுகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து இவர்களுக்கு நிரந்தரமான வீடுகள்...
Read More

சட்ட உதவி ஆணைக்குழு மலையகத்தில் செயலாற்ற முன்வந்துள்ளது அதை பயன்படுத்துங்கள்; திலகர் எம்பி!

உரிமைசார், அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகள் சார்ந்து மாத்திரமல்ல சட்டம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் மலையக சமூகத்துக்கு இருக்கிறது. எனது பாராளுமன்ற உரையினை செவிமடுத்த இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு இன்று மலையகத்தில் ஆலோசனைச் செயலமர்வுகளை நடாத்த முன்வந்துள்ளது. எனினும் அவர்களது குறைந்த அளவான நிதியினைக் கொண்டு முழுமையான நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுக்க முடியாது. ஆனால் இவர்களுடன் கைகோர்த்து மலையக சட்டத்தரணிகள் மக்களுக்கான ஆலோசனை சேவையை மலையகமெங்கும் தன்னார்வ தொண்டாக முன்னெடுக்க முடியும். அதற்கான களம் இன்று திறந்துவிடப்பட்டுள்ளது...
Read More

‘சசிகலா தலைமைத்துவத்தை ஏற்கிறோம்’ – அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்!

சென்னை – அதிமுக பொதுக்குழு-செயற்குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்றது. அதில் சசிகலா தலைமைத்துவத்தின் கீழ் பணியாற்ற செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் சம்மதம் தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரிடோ முன்பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம்! (photos)

நானுஓயா பிரதேசத்தில் இயங்கும் பிரிடோ முன்பள்ளிகளில் கல்விக்கற்று 2017 ம் ஆண்டு அரசபாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இணைப்பாளர்களான எஸ்.சிவக்குமார், திருமதி.சந்தோசம் தலைமையில் நானுஓயா நாவலர் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றுது. இதில் பிரதம அதிதிகளாக நுவரெலியா பொலிஸ் உதவி அத்தியட்சகர் தசநாயக்க, நானுஓயா பொலிஸ் நிலைய அதிகாரி பியந்த அபேசிங்க பிரிடோ நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட இயக்குணர் எஸ்.கே.சந்திரசேகரன் உள்ளிட்ட பலரும் கொண்டனர். இதன் போது இடம்பெற்ற நிகழ்வுகளை படங்களில் காணலாம். அக்கரப்பத்தனை...
Read More

வீதிகளில் கடுமையான பனிமூட்டம்! சாரதிகளுக்கு எச்சரிக்கை! (Photos)

மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலையினால் பதுளை – கொழும்பு பிரதான வீதியில் அப்புத்தளை மற்றும் பெரகல பகுதிகளில் பனிமூட்டங்கள் நிரம்பி காணப்படுகின்றது. இந்நிலையில் இன்று(29) அன்று காலை வேளையில் நிரம்பியுள்ள பனிமூட்டத்தினால் வாகன சாரதிகள் தங்களின் வாகனங்களை மிக அவதானத்துடன் செயற்படுத்த வேண்டும் என்பதோடு, சாரதிகள் வாகனங்களில் மின்விளக்குகளை (ஹெட்லைட்) எறியவிட்டு வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர். (க.கிஷாந்தன்)

நாட்டையும் மக்களையும் ஆசீர்வதிக்கும் புதுவருட ஆராதனை நோர்டன் பிரிஜ் துதித்தோட்ட ஆலயத்தில்!

இவ்வருடத்தில் நாட்டில் நடைபெற்ற அனைத்து நன்மைகளுக்காகவும் நன்றி செலுத்தும் ஆராதனையும் புதிய ஆண்டில் நாட்டையும், மக்களையும் ஆசீர்வதிக்கும் புதுவருட ஆராதனையும் இம்மாதம் 31ம் திகதி இரவு 6 மணி முதல் ஜனவரி மாதம் முதலாம் திகதி அதிகாலை 4 மணிவரை நோர்டன் பிரிஜ் துதித்தோட்ட ஆலயத்தில் நடைபெற உள்ளது. ஆராதனையின் முதல் பகுதியில் நாட்டுக்காகவும், நாட்டுத் தலைவர்களுக்காகவும் பிராத்தனைசெய்து அவர்களை ஆசீர்வதிக்கும் பிராத்தனையாக அமையும், நாட்டில் சமதானம் நிகழ்வும், மக்கள் மனங்களில் நல்ல எண்ணங்களும், நாட்டையும் சகமக்களையும்...
Read More

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 12ம் திகதிக்கு முன் வெளிவரும்!

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஜனவரி மாதம் 12ம் திகதிக்கு முன்னதாக, வௌியிடப்படவுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை பரீட்சைப் பெறுபேறுகள் தாமதமடைவதாக சில தரப்பினர் பல்வேறு விமர்சனங்களை எழுப்பினர். எதுஎவ்வாறு இருப்பினும், அவ்வாறு குறிப்பிடத்தக்களவு தாமதம் ஏற்படவில்லை எனக் கூறிய பரீட்சைகள் ஆணையாளர், இம்முறை தொழிநுட்ப விஞ்ஞானப் பிரிவில் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை 30,000க்கும் அதிகம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கமைய இவர்களது நடைமுறைப் பரீட்சை...
Read More

UPDATE : எதிர்வரும் 30ம் திகதி தேசிய துக்க தினம் இல்லை! ; உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் இறுதிச் சடங்கு இடம்பெறவுள்ள டிசெம்பர் 30ஆம் திகதி, அவரது உறவினர்களின் கோரிக்கைகளுக்கு அமைய தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்கப்படமாட்டது என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபயகுணவர்த்தன தெரிவித்துள்ளார். இலங்கையின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் இறுதிச் சடங்கு இடம்பெறவுள்ள டிசெம்பர் 30ஆம் திகதியை, தேசிய துக்க தினமாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அமுல்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. UPDATE – எதிர்வரும் 30ம் திகதி தேசிய துக்க தினமாக பிரகடனம்
error: Content is protected !!