Home > மலையகம் > நாட்டையும் மக்களையும் ஆசீர்வதிக்கும் புதுவருட ஆராதனை நோர்டன் பிரிஜ் துதித்தோட்ட ஆலயத்தில்!

நாட்டையும் மக்களையும் ஆசீர்வதிக்கும் புதுவருட ஆராதனை நோர்டன் பிரிஜ் துதித்தோட்ட ஆலயத்தில்!

இவ்வருடத்தில் நாட்டில் நடைபெற்ற அனைத்து நன்மைகளுக்காகவும் நன்றி செலுத்தும் ஆராதனையும் புதிய ஆண்டில் நாட்டையும், மக்களையும் ஆசீர்வதிக்கும் புதுவருட ஆராதனையும் இம்மாதம் 31ம் திகதி இரவு 6 மணி முதல் ஜனவரி மாதம் முதலாம் திகதி அதிகாலை 4 மணிவரை நோர்டன் பிரிஜ் துதித்தோட்ட ஆலயத்தில் நடைபெற உள்ளது.

ஆராதனையின் முதல் பகுதியில் நாட்டுக்காகவும், நாட்டுத் தலைவர்களுக்காகவும் பிராத்தனைசெய்து அவர்களை ஆசீர்வதிக்கும் பிராத்தனையாக அமையும், நாட்டில் சமதானம் நிகழ்வும், மக்கள் மனங்களில் நல்ல எண்ணங்களும், நாட்டையும் சகமக்களையும் அன்பு செய்யும் உணர்வை கட்டியெழுப்பவும், நாட்டின் தலைவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக தீட்டும் திட்டங்களும், முயற்சிகளும் வெற்றிபெற வேண்டும்.

தற்போது நாட்டில் வாட்டிவரும் பாதகமான வரட்சி கால நிலை சாதகமானதாக மாறவேண்டும் என்பதற்காக வழிப்படும் ஆராதனையாக இது அமையும்.

இதேவேளை ஆராதனையின் இரண்டாவது பகுதியில் கடந்து செல்லும் இவ்வருடத்தில் நடைபெற்ற பாதகமான அம்சங்களை நினைவு கூர்ந்து அவற்றில் இருந்து மக்கள் கற்றுக் கொண்டு அவற்றை திருத்திக்கொள்ள அவர்களை தூண்டும் நிகழ்வாகவும், மக்கள் மத்தியில் உள்ள மனவேதனைகள், சோர்வுகள், நோய்கள், கடன் தொல்லை என்பவற்றில் இருந்து விடுதலை பெறவும், மனிதர்கள் தங்கள் பிரச்சினைகளை அணுகும் முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். என்று அறிவூட்டும் ஆராதனைபகுதியாக அமையும்.

துதித்தோட்ட பிரதம போதகர் அருட் தந்தை மைக்கல் ஞானராஜ் தலைமையில் நடைபெறவுள்ள இந்த புதுவருட ஆராதனையின் தொனிப்பொருள் மனமகிழ்ச்சியும், தேவனின் வார்த்தையும் உங்கள் வாழ்க்கையை மாற்றும் என்பதாகும்.

இந்த ஆசிர்வாத ஆராதனையில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு ஆலய நிர்வாகம் கோரியுள்ளது.

அக்கரப்பத்தனை நிருபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!