Home > மலையகம் > பாதிக்கப்பட்ட டேசன் தோட்ட மக்களுக்கு கண்டி தமிழ் வர்த்தகர்கள் உதவி!

பாதிக்கப்பட்ட டேசன் தோட்ட மக்களுக்கு கண்டி தமிழ் வர்த்தகர்கள் உதவி!

புஸ்ஸல்லாவ டேசன் தோட்டத்தில் தீயினால் பாதிக்கபட்டு அகதி முகாமில் இருக்கும் 05 குடும்பங்களை சேர்ந்த 28 பேருக்கு கண்டி தமிழ் வார்த்தைகளின் ஏற்பாட்டில் சங்கத்தின் தலைவர் என். லோகநாதன்¸ பொருளாலர் எம்.சுந்திரமூர்த்தி ஆகியோர் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும் எனைய பொருட்களையும் வழங்கி வைத்தனர்.

0img_8873img_8859

தற்போது இந்த பாதிக்கபட்ட மக்களுக்கு தேவையான முதற்கட்ட நிவாரணங்கள் சம்பந்தபட்டவர்களினால் வழங்கபட்டு வருகின்றது. இரண்டாம் கட்டமாக தற்காலிக வீடுகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து இவர்களுக்கு நிரந்தரமான வீடுகள் அமைப்பதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கபட்டு வருகின்றன. வீடு கட்டுவதற்கான இடம் தெரிவு செய்யபட்டுள்ளது.

குறித்த இடத்தில் அனர்த்த முகாமைத்துவ பறிசோதனையின் பின் வீடுகள் கட்டபடும் என எதிர்பார்க்கபடுகின்றது. வீடுகளை அமைப்பதற்கு மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்டகட்டைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கைகளை பெருந்தோட்ட மனிதவள பொருப்பு நிதியத்தின் ஊடாக மேற்க கொண்டு வருகின்றது. இதன் அமைச்சர் பழனி திகாம்பரம் இதனை உடனடியாக நடைமுறைபடுத்துமாறு பணித்துள்ளார் . தற்போது இத்திட்டம் தொடர்பான அதிகாரிகள் மேலதிக நடவடிக்கைகளை மேற்க் கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!