Home > மலையகம் > பெருந்தோட்டங்களில் உள்ள அறநெறி பாடசாலைகளை பாதுகாப்போம்! (Photos)

பெருந்தோட்டங்களில் உள்ள அறநெறி பாடசாலைகளை பாதுகாப்போம்! (Photos)

புஸ்ஸல்லாவ ஸ்ரீ விவேகானந்தா அறநெறி பாடசாலையில் நடைபெற்ற பஜனை நிகழ்வில் புசல்லாவை ஸ்ரீ கல்வி மாணவ சேவா சமித்தியின் அங்கத்தினர் கலந்து கொண்டார்கள்.

அதன் போது அறநெறி பாடசாலையின் சிறார்களினால் பஜனை பாடல்கள் மிகவும் பக்தி பூர்வமாக இசைக்கபட்டது. தொடர்து குரு பூஜையும் நடைபெற்றது.

3

புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் இயங்கி வரும் அறநெறி பாடசாலைகளில் மேற்படி அறநெறி பாடசாலையானது தனது தொண்டினை மிகவும் சிறப்புறச் செய்து வருகின்றது.

இதனை மேலும் அபிவிருத்தி செய்வதிலும் அதற்கு உதவுவதிலும் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட்டு வருகின்றனர்.

4

உண்மையாகவே பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளின் அறநெறி வாழ்விற்கு இவ்வாறான அமைப்புகளின் செயற்பாடுகள் பாராட்டதக்க ஒன்றாகும்.

இதன் போது புசல்லாவை ஸ்ரீ கல்வி மாணவ சேவா சமித்தி அமைப்பின் காரியவான் திரு. ஐ.வி.எஸ். விஜயன் ஜே.பி அவர்களின் உரையும் இடம் பெற்றது.

5

இந்த அறநெறி பாடசாலையின் தெய்வீக செயற்பாடுகளுக்கு நல்லுல்லங்களையும், தனவந்தகர்களும் சமய பெரியார்களும் சமயம்சார்ந்த அமைப்புக்கள் இணைந்து செயற்பட வேண்டிய கட்டாயம் தோன்றியுள்ளது. அனைவரும் இணைவோம் மலையகத்தின் அறநெறியை வளர்ப்போம். இந்து வானவன் என்று சொல்வதில் பெருமை அடைவோம்.

பா.திருஞானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!