Home > மலையகம் > பெருந்தோட்ட மாணவர்களின் கல்விக்கு கரம் கொடுப்போம்! ; ஸ்ரீ கல்கி மாணவ சேவா சமித்தி

பெருந்தோட்ட மாணவர்களின் கல்விக்கு கரம் கொடுப்போம்! ; ஸ்ரீ கல்கி மாணவ சேவா சமித்தி

புசல்லாவை ஸ்ரீ கல்வி மாணவ சேவா சமித்தியானது கடந்த ஜனவரி மாதம் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் நோக்கம் மலையகத்தில் கல்வி எழுச்சியினை ஏற்படுத்துவதாகும். அத்தோடு மாணவர்களுடைய கல்வி நடவடிக்கைகளுக்கான உதவிகளை வழங்குவதன் மூலம் அவர்களுடைய கல்விச் செயற்பாட்டிற்கு அடித்தளம் இடுவதாகும்.

இந்த அமைப்பின் காரியவான் திரு. ஐ.வி.எஸ். விஜயன் ஜே.பி அவர்களிடம் இந்த செயற்திட்டம் தொடர்பில் வினவிய போது. நாங்கள் எமது அமைப்பை புசல்லாவை பிரதேசத்திலேயே ஸ்தாபித்திருக்கின்றோம்.

இதன் ஊடாக புசல்லாவை பிரதேசத்தையும் அதனை சுற்றியுள்ள சுமார் 28 பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கு எம்மால் இயன்ற உதவியினை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம்.

மேலும் மலையகத்தைப் பிரதிநித்துவப்படுத்துகின்ற பல்வேறு துறைசார்ந்த தொழிலதிபர்கள் காணப்படுகின்றார்கள். அவர்களும் முன் வந்து தத்தமது பிரதேசங்களுக்குரிய பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கு இவ்வாறு துணைபுரிவதற்கு முன் வரவேண்டும் என்பதும் எமது அளப்பரிய நோக்காக காணப்படுகின்றது. இவர்களை அனைவரையும் இணைக்கும் ஒரு பாலமாக செயற்பட விரும்புகின்றோம்.

நாம் கடந்த 06.11.2016 அன்று புசல்லாவை பிரதேசத்தையும் அதனைச் சூழவுள்ள 28 பாடசாலைகளின் 2016 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வினை வெகு சிறப்பாக நடாத்தியிருந்தோம்.

இவ்விழாவில் இப்பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல்பெற்றுக்கொண்ட மாணவர்கள் சுமார் 210 பேருக்கும்¸ சித்திபெற்ற 39 மாணவர்களுக்கும் அவர்களது ஆசிரியர்களுக்கும்¸ அப் பாடசாலை அதிபர்களுக்கும்¸ சித்திபெற்ற மாணவர்களின் பெற்றோருக்கும் விசேட கௌரவிப்பும்¸ பரிசில்களும் வழங்கப்பட்டது.

எதிர்வரும் காலங்களில் க.பொ.த. (சாஃதர) மாணவர்களுக்கான கணிதம்¸ ஆங்கிலம்¸ விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்களையும்¸ உயர்தர மாணவர்களுக்கான வினாத்தாள்களையும்¸ தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான விணாத்தாள்களையும் இலவசமாக அச்சிட்டு பங்கிடவுள்ளோம்.

எமது அமைப்பின காரியவான்களாக புசல்லாவை பிரதேசத்தைச் சேர்ந்த 8 ஆசிரியர்கள் திறம்பட தமது பங்களிப்பை வழங்கிவருகின்றார்கள். இடையிடையே சழுகத்தின் ஏனைய அவசர தேவைகளுக்கும் சமூக அபிவிருத்திக்கும் எங்களால் ஆன உதவிகளும் மேற்க் கொய்யபட்டும் வருகின்றன.

எதிர்காலத்தில் இந்த கல்வி சேவையால். எமது புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் கல்வியில் அபிவிருத்தி மேலும் அபிவிருத்தி அடையும் என நம்புகின்றேன். அதன் ஊடாக மலையக கல்வி மலையகத்தில் கல்வி மறுமலர்ச்சிக்கு நாங்களும் பங்குதாரர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகின்றேன் என்று கூறினார். “மாற்றம் ஒன்றே நிரந்தரமானது”

பா.திருஞானம்

Leave a Reply

error: Content is protected !!