Home > மலையகம் > மலைகத்தின் தனி வீட்டு தந்தை அமரர் சந்திரசேகரன்! ; இராதாகிருஸ்ணன்

மலைகத்தின் தனி வீட்டு தந்தை அமரர் சந்திரசேகரன்! ; இராதாகிருஸ்ணன்

“மலைகத்தின் தனி வீட்டு தந்தை” என்று கூரக் கூடிய மலையக மக்கள் முன்னனியின் ஸ்தாபக தலைவர் அமரர் பெ. சந்திரசேகரன் அவர்களின் 07 வது நினைவு தினம் 01.01.2017 அன்று தலவாகெல்ல ஸ்ரீ கதிரேசன் ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெற உள்ளது.

1

இந் நிகழ்வு மலைய மக்கள் முன்னனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சரருமான வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.

இந் நிகழ்விற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் அவர்கள் கலந்துக் கொண்டு நினைவு பேர் உரையாற்ற உள்ளார்.

சிறப்பு உரைகளை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்தகுமார் அவர்களும் மலையக மக்கள் முன்னனியின் செயலாளர். ஏ.லோரன்ஸ் அவர்களும் நிகழ்த்த உள்ளனர்.

இந் நிகழ்வு தொடர்பில் மலைய மக்கள் முன்னனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சரருமான வே.இராதாகிருஸ்ணன் கருத்து தெரிவிக்கையில்,

மலையகத்தில் இருந்த தவைர்களில் மலையக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் அமரர் பெ.சந்திரசேகரன் அவர்கள். இவரது 7 வது நினைவு தினம் அனுஷ்டிக்கபடும் இச் சச்தர்பத்தில். இவரது பிரிவால் இன்று கவலையுற்று இருக்கும் மனைவி¸ பிள்ளைகள்¸ உரவினர்கள் உட்பட ஆதவாளர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தற்போது நான் அவர் விட்ட இடத்தில் இருந்து இந்த கட்சியை முன்னெடுத்துச் செல்கின்றேன். அவர் எதை மலையத்தில் செய்ய வேண்டும் என நினைத்து இந்த கட்சியை ஆரம்பித்தாரோ அதை நிறைவேற்றுவதற்கு இங்கு அனைவரும் ஒன்றினைய வேண்டும்.

தற்போது மலையத்தில் தனி வீடு கட்டப்பட்டு வருகின்றது. இதற்கு காரணகர்தாவாக இருந்தவர் அமரர் பெ.சந்திரசேகரன் அவர்கள். அதனால் இவரை “மலைகத்தின் தனி வீட்டு தந்தை” என்று அழைக்காம். என்று கூறினார்.

அமரர் பெரியசாமி சந்திரசேகரன் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. அவரது எதிர் பாராத மறைவிற்கு பின் வருகின்ற இந்த 7வது நினைவு தினத்தில் இவரை புரிந்து கொண்டு நேசித் அனைவர் மனதிலும் இன்றும் முள்ளாக நெருடிக்கொண்டிருப்பதை மறக்க முடியாது.

அவரின் இறப்பின் இழப்பையும்¸ பிறப்பின் பெருமையையும் புரிந்து கொள்ள வேண்டுமாயின் இவரின் அரசியல் பிரவேசத்திற்கு முன்புள்ள எமது சமூகத்தின் நிலையையும் உள சுத்தியோடு எடை போட வேண்டும். சமூக நலனுக்கான போராலியாக¸ தியாகங்களுக்கு உதாரணமானவராக¸ நட்பிற்கு இலக்கனமாக¸ உதவி செய்வதில் மனித நேயமிக்கவராக¸ அரவணைப்பதில் முன்னுதாரணமானவராக¸ கொள்கையில் உறுதியானவராக¸ எதிரிகளையும் மதிப்பவராக¸ ஒரு ஆளுமையான மனிதராக தன்னை நிலை நிறுத்திவிட்டு இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார். சர்சைக்குறிய அரசியல் கருத்துக்களினாலும்¸ செயற்பாடுகளினாலும் இவரை பலரும் வியப்பாகவே கணிப்பிட்டார்கள்.

தனது இனத்தைப்பற்றி குரல் எழுப்பிய போது¸ இனவாதியாகவும்¸ தனது சமூகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த போது தீவிரவாதியாகவும்¸ வடக்கு கிழக்கு மக்களுக்காக குரல் கொடுத்தப் போது பயங்கரவாதியாகவும் சித்தரிக்கப்பட்டார். அதே வேலை பொருப்புள்ள அமைச்சராக இருந்து சகல சமூகங்களுக்கும் சேவையாற்றிய போது முன்னுதாரணமிக்க அரசியல்வாதியாகவும் சகலராலும் மதிக்கப்பட்டார்.

தனது உயிரை இழப்பதற்கு முன்னரே பல்வேறு இழப்புகளை சந்தித்துவிட்ட இந்த தலைவனைப்பற்றிய நாடாளுமன்ற அனுதாப உரைகள் இவரது அத்தனை செயற்பாடுகளுக்கும் விடைகள் கூறுவதாக அமைந்துள்ளது. 50 வருடங்களுக்கு மேலாக தொழிற்சங்க கட்டமைப்புக்குள் நிர்வகிக்கப்பட்ட மலையக மக்களை அரசியல் நீரோட்டத்திற்கு கொண்டு வந்து இலங்கையின் ஏனைய சமூகங்களுக்கு நிகராக இந்த சமூகத்தையும் அடையாளம் காட்டி இலங்கை எமது தாய் நாடு¸ மலையகம் எமது வாழ்விடம் என்ற நாட்டுப்பற்றினை ஊட்டி வாழும் நம்பிக்கையை ஊட்டியவர் அமரர் சந்திரசேகரன் அவர்களே! இவர் கூறும் சரியான கருத்துக்களை எதிர் அமைப்புகளால் கூட நிராகரிக்க முடியாமல் இருந்தன.

இவரின் கருத்துகளை கண்டு ஏனைய அமைப்புகள் கலக்கம் கொண்டனவே தவிர அதற்கு நிகரான கருத்துக்களையோ அல்லது எதிரான கருத்துக்களையோ முன் வைக்கமுடியாமலேயே இருந்தன.

இலங்கையின் மலைநாட்டில் இந்திய வம்சாவழியாக அடையாளம் இடப்பட்ட 17 இலட்சம் அளவில் ஒரு சமூகம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றது என்ற தகவலை அண்டை நாட்டிற்கு கூட அர்த்தமுடன் எடுத்துக்காட்டியவர் இவரே.

இலங்கையில் தமிழர்கள் என்றால் அது வடகிழக்கில் வாழும் தமிழர்கள் என்ற நிலையை மாற்றி “இந்திய வம்சாவழி” என அடையாளம் காட்டப்பட்ட சமூகத்திற்கு ‘மலையக தமிழர்கள்’ என்ற சமூக அந்தஸ்தை பெற்றுக்கொடுத்த சந்திரசேகரன் இதற்காக சர்வதேச மட்டத்திலும் தூதுவராலயங்கள் மட்டத்திலும் பாடுபட்டார்.

1994 ஆம் ஆண்டில் தனது ஒரு ஆசனத்தின் மூலம் பொதுஜன ஜக்கிய முன்னனி அரசாங்கத்தை அமைப்பதற்கு உதவினார். ஆனால் எமது சமூகத்தின் அவலங்களுக்கெல்லாம் ஒட்டுமொத்தமான அடையாளமாக இருந்த லயன் முறையை ஒழித்து அம்மக்களை தனித்தனி வீடுகளில் வாழவைக்க வேண்டும் என்பதற்காக தோட்ட வீடமைப்பு என்ற அமைச்சினை உருவாக்கி அதனூடாக மலையக வரலாற்றில் தொழிலாளர்களை தனித்தனி வீடுகளில் வாழ வைத்த சரித்திரத்தை உருவாக்கினார் பொது ஜன ஐக்கிய முன்னனி அரசாங்கத்திடம் இவர் எதிர் பார்த்த பிரதி உபகாரம் இது தான்.

காற்றும் ஒளியும் உட்புக முடியாத வீடு என்று சொல்லப்படுகின்ற நான்கு சுவர்களுக்குல் தனது கந்தல் துணிகளை கூட மடித்து வைக்க இடம் இல்லாத நிலையில் குடும்ப அபிவிருத்தியைப் பற்றி ஒருவனால் யோசிக்க கூட முடியாதென்றும் மனிதனின் மனவளர்ச்சி வன் வாழும் சூழலில் இருந்துதான் வடிவம் பெறுகிறது என்றும் அடிக்கடி மேடைகளில் உரையாற்றுவார்.

மலையக மக்களின் நலன்களைவிடவும் வடக்கு கிழக்கு மக்களின் விடயத்தில் தான் இவர் அதிக அக்கறை எடுக்கிறார் என்றும்¸ அதோடு ஒட்டிய போராட்டங்கினால்தான் இவர் சிறைசெல்கிறார் என்றும்¸பல்வேறு விமர்சனங்களும் கருத்துக்களும் எழுந்தன. ஆனால் சகலவிதமான இவரது நடவடிக்கைகளுமே ஏற்றுக்கொள்ளப்பட்டதை அவருக்கான அனுதாப பிரேரனை வெளிக்காட்டிவிட்டது.

அரசியல் செயற்பாடுகளுக்கு நிகராக இலக்கிய துரையில் தேசிய சர்வதேச மட்டத்தில் இவர் கொண்டிருந்த தொடர்புகளும்¸ செயற்பாடுகளும் இவரை அனைத்து துரைகளிலும் முழுமையான மனிதனாக அடையாளம் காட்டி நிற்கின்றன.

மொத்த்தில் அமரர் சந்திரசேகரன் மலையக அரசியல் வரலாற்றில் திருப்பு முனைக்கான முழுமையான ஆரம்ப பள்ளியாகவே இருந்தார் என்பதே உண்மை. இவரைப் போன்றே நாட்டு நலனுக்காகவும்¸ எமது சமூக அடையாளங்களுக்காகவும்¸ கலை கலாச்சார இலக்கிய வளர்ச்சிக்காகவும் தம்மை அர்ப்பணித்தவர்களை நாம் நித்தமும் நினைவுக்கொள்வது தான் அவர்களுக்கு நாம் செய்யும் நன்றி கடனாகும். மலையக மக்கள் முன்னனி என்ற அரசியல் கட்சியை மாத்திரம் அல்லது மலையகத்திற்கான ஒரு புதிய அரசியல் பாதையை ஸ்தாபித்த பெருமையை கொண்வர்.

Leave a Reply

error: Content is protected !!