Home > பிரதான செய்திகள் > முடிவை மாற்றிக் கொண்ட சனத் ஜயசூரிய!

முடிவை மாற்றிக் கொண்ட சனத் ஜயசூரிய!

தன் மீது மேற்கொள்ளப்படுகின்ற சில அழுத்தங்கள் மற்றும் சில தீர்க்கப்படாத பிரச்சினைகள் காரணமாக கிரிக்கட் தெரிவுக் குழு தலைவர் பதவியில் இருந்து சனத் ஜயசுரிய விலக தீர்மானித்திருந்த நிலையில் அவர் தனது முடிவை மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் இடம்பெற்ற கலந்துறையாடலின் பின்னரே அவரின் முடிவில் மாற்றம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சில பிரச்சினைகள் காரணமாக தனது பணிகளை உரிய முறையில் முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும் இதன் காரணமாகவே தான் இராஜினாமா செய்ய தீர்மானித்தாகவும் சனத் ஜயசூரிய அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடம் கூறியுள்ளார்.

குறித்த பிரச்சினைகள் தொடர்பில் விரைவில் தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர உறுதியளித்துள்ளார்.

நிரோஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!