Day

January 1, 2017

அத்தியாவசிய பொருட்களின் விலை இன்று அமுலுக்கு வரும் வகையில் குறைப்பு!

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள நிலையில் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இவ்வருடத்துக்கான வரவு செலவு திட்டம் கடந்த நவம்பர் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இவ்வருடத்துக்கான வரவு செலவு திட்டம் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மாவிற்கான நிர்ணய விலை 295 ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சமையல்...
Read More

குளவிகளுக்கு கூட தனி கூடு ஆனால் மலையக மக்களுக்கு அது கிட்டவில்லை என ஆதங்கப்பட்டார் சந்திரசேகரன்; அமைச்சர் ராதா!

குருவிகளுக்கு கூட தனி கூடுகள் இருக்கின்றது. ஆனால் மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு தனி வீடுகள் இல்லையே என ஆதங்கம் கொண்டவர் அமரர்.பெ.சந்திரசேகரன். மலையக மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்க பாடுபட்டவரை இழந்தமை ஒரு ஏமாற்றம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும், முன்னால் அமைச்சருமான அமரர் பெ.சந்திரசேகரனின் 7ஆவது சிரார்த்த தினம், 01.01.2017 அன்று காலை 12 மணிக்கு, தலவாக்கலை...
Read More

புப்புரஸ்ஸ கந்தலா தோட்ட வீடமைப்பு முறைகேடு; ஸ்தலத்துக்கு சென்று வேலுகுமார் மற்றும் புத்திரசிகாமணி விசாரணை!

கண்டி மாவட்டம் தொழுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புப்புரஸ்ஸ ஸ்டெலன்பேர்க் தோட்டத்தில் (கந்தலா தோட்டம்) கடந்த 2007 ஆம் ஆண்டு மண்சரிவினால் சுமால் 40 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி தோட்ட பாடசாலையில் அகதிகளாக இடம் பெயர்ந்தனர். அதைனை தொடர்ந்து அடிக்கடி ஏற்பட்ட மண்சரிவினால் மேற்படி நிலமை பல முறை ஏற்பட்டது. இதற்கு தீர்வாக இந்த மக்களுக்கு புதிய தனி வீடுகளை அமைக்கும் திட்டத்தில் 40 வீடுகள் அமைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கபட்டது. தற்போது இந்த வேலைத்திட்டம் முறையாக...
Read More

சந்திரசேகரன் என்ற சகாப்தத்தின் நினைவுதினம்! (சிறப்பு கட்டுரை)

சந்திரசேகரன் என்ற சகாப்தத்தின் நினைவுதினம் – 01.01.2017 விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்காது என்ற கூற்றை உண்மையாக்கிய மலையக படைப்பாளி அமரர் பெ.சந்திரசேகரனின் 7 வது சிரார்த்த தினம் புத்தாண்டு தினத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது. அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திப்பவன் அரசியல்வாதியாகிறான். அடுத்த சந்ததியைப் பற்றி சிந்திப்பவன் தலைவனாகிறான்.என்று எழுத்தாளர் சோ குறிப்பிட்டது போல சந்திரசேகரன் தன் அடுத்த சந்ததிக்கான விடிவுக்கான அடித்தளத்தை அர்த்தத்தோடு இட்டு சென்றுள்ளார். தன்னிடம் இருப்பதை தன்னலம் கருதாது பகிர்ந்துகொள்பவன் தான் வள்ளலாகின்றான். தனது...
Read More

மலையக அரசியல் பிரமுகர்களின் புத்தாண்டு வாழ்த்து செய்திகள்!

கணபதி கனகராஜ் பிறக்கும் புத்தாண்டு இலங்கை மக்களுக்கு சம உரிமையையும் சம அந்தஸ்தையும் வழங்கி நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறந்த வாழ்க்கை சூழலை ஏற்படுத்தும் ஆண்டாக அமைய வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் விடுத்துள்ள புது வருட வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். புதிய ஆண்டில் நாட்டில்  அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ள அரசியல் யாப்பில் மலையக மக்களின் தனித்துவம்,அரசியல் பிரதிநிதித்ததுவம், கலாசார விடயங்கள் விசேட கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட...
Read More

அமரர். சந்திரசேகரனின் உருவ சிலையை வைப்பதற்கு பூரண ஒத்துழைப்பு தருவேன்! ; அமைச்சர் திகாம்பரம்

  மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர்.பெ.சந்திரசேகரனுக்கு தலவாக்கலையில் உருவ சிலை அமைக்கப்படும். இதற்காக அமரரின் குடும்பத்தாரருடனும், கட்சி முக்கியஸ்தர்களிடமும் கலந்தாலோசித்து முன்னெடுக்கப்படும் செயலுக்கு தான் ஆதரவு தருவதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும், முன்னால் அமைச்சருமான அமரர் பெ.சந்திரசேகரனின் 7ஆவது சிரார்த்த தினம், 01.01.2017 அன்று காலை 12 மணிக்கு, தலவாக்கலை கதிரேசன் மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் கலந்து...
Read More

பிறந்திருக்கின்ற புது வருடத்தில் இன்பம் சூழட்டும்! : சோ.ஸ்ரீதரன்

பிறந்திருக்கின்ற புதிய வருடத்தில் சகல மக்களும் இன்பகரமான வாழ்வுக்குச் சொந்தக்காரர்களாக வேண்டுமென மத்திய மாகாண சபை உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளருமான சோ.ஸ்ரீதரன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, நல்லாட்சி  அரசாங்கத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு கிடைக்கப்போகின்ற பல்வேறு நன்மைகளுக்கு இவ்வருடம் ஆசி நிறைந்ததாக அமையும். நல்லாட்சி அரசாங்கத்தின் பங்குதாரர்களாகிய சகலருக்கும் இப்புதுவருடம் மென்மேலும் வலுசேர்ப்பதாக அமையும். மலையக தமிழ் மக்களுக்கு தங்கள் வாழ்வினை சுபீட்சமாக்குவதற்கு...
Read More

சபரிமலை ஐயப்பன் யாத்திரைகளின் பஜனை!

தலவாக்கலை பிரதேசத்திலிருந்து சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு செல்லவுள்ள யாத்திரைகளின் பஜனை இன்று(01.01.2017) தலவாக்கலை வழிப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நகரத்தில் யாத்திரைகளின் பஜனை இடம்பெற்றது. அக்கரப்பத்தனை நிருபர்

இறம்பொடை ஸ்ரீ பக்த ஆஞ்சனேயர் ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு பூஜை! (Photos)

பிறந்திருக்கும் புதுவருடத்தை முன்னிட்டு இறம்பொடை ஸ்ரீ பக்த ஆஞ்சனேயர் ஆலயத்தில் இன்று காலை (01) விஷேட பூஜை நடைபெற்றது. இந் நிகழவில் பெரும் திறலான பக்த்தர்கள் கலந்துக் கொண்டதுடன், மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிருத்தி அமைச்சர்¸ பழனி திகாம்பரம்¸ மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சரமான வே.இராதாகிருஸ்ணன்¸ மத்திய மாகாண சபை உறுப்பினர். இராதாகிருஸ்ணன் ராஜாராம் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். பா.திருஞானம் 

அதிஸ்ட லாப சீட்டு விற்பனையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பு! (Photos)

அதிஸ்ட லாபச்சீட்டு விலை அதிகரிக்கப்படுள்ளதால் அட்டன் பிரதேச அதிஸ்ட லாப சீட்டு விற்பனையாளகள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரைகாலமும் 20 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்த அதிஸ்டலாப சீட்டு இன்று(01.01.2017) முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்ய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட நிலையிலே நாடளாவிய ரீதியில் அதிஸ்டலாப சீட்டு விற்பனையாளர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 10 ரூபாவினால் விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளமையினால் எதிர்காலத்தில் அதிஸ்ட லாப சீட்டு தொழில்துறையை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்...
Read More
error: Content is protected !!