Day

January 7, 2017

தலவாக்கலை குமாரகம பகுதியில் காட்டுத் தீ!

தலவாக்கலை நகருக்கு அருகாமையிலுள்ள குமாரகம இடத்திலுள்ள காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீ பிரதேச மக்களின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதி தீ பரவலானது இன்று (07) மாலை 6.15 மணியளவில் ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக சுமார் 1 ஏக்கர் தீயினால் அழிவுற்றிருக்குமென தெரிவிக்கப்படுகிறது . தலவாக்கலையிலிருந்து குமாரகம ஊடக கிரேட் வெஸ்டன் பிதான பாதைக்கு செல்லும் வழியில் பயணித்த இளைஞர்கள் (விஷமிகள்) தீ வைத்திருக்கக் கூடுமென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். சுஜீவன்

தோட்டப்பகுதிகளை அபிவிருத்தி செய்ய புதிய திட்டம் – ஆறுமுகன் எம்பி தெரிவிப்பு!

  பெருந்தோட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்வதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புதிய நடைமுறை ஒன்றை முன்னெடுக்கவுள்ளது. இந்தவகையில் முதல் முறையாக டயகம பிரதேசத்தை இலக்காக கொண்டு டயகம பிரதேசத்தில் உள்ள தோட்டங்களை ஒரு வருட காலத்தில் முழுமையான அபிவிருத்தியை செய்வதற்கான திட்டத்தை வகுத்துள்ளதாக காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தில் தோட்ட பகுதிகளில் 49 பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கான மூன்று அரை இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள்...
Read More

கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகப்பகுதியில் தீ; 20 ஏக்கர் நாசம்!

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ஹரிங்டன் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 20 காடு எரிந்து  நாசமாகியுள்ளது. 07.01.2017 பிற்பகல் 2. மணியளவில் கொட்டகலை( C.l. f) தொண்டமான் தொழில்பயிற்சி நிலைய வளாகப்பகுதியிலே இத் தீபரவியுள்ளது இனம் தெரியாத விசமிகளினால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதுடன் அட்டன் நகரசபையின் தீயனைப்பு பிரிவினரும் பொதுமக்களும் தீயை கட்டுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் . நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

புளோரிடா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் மரணம் – 8 பேர் காயம்

போர்ட் லாடர்டேல் (அமெரிக்கா) – விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டு பயணிகள் பயணப் பெட்டியாக விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்ட பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து அமெரிக்காவின் போர்ட் லாடர்டேல்-ஹாலிவுட் என்ற விமான நிலையத்தில் பயணி ஒருவன் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்தியவன் பெயர் எஸ்டபன் சாண்டியகோ என அடையாளம் காணப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ளது இந்த விமான நிலையம். விமானத்திலிருந்து பரிசோதிக்கப்பட்ட பயணப் பெட்டிகள்...
Read More

கினிகத்தேனையில் ஆர்பாட்டம்: அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தை சீன முதலீட்டாளருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு!

அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தை சீனா நாட்டு கம்பனிக்கு வழங்குவதை எதிர்த்து கினிகதேனையில் ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கினிகத்தேன பஸ்தரிப்பு நிலையத்தில் கருப்பு கொடியுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி அம்பகமுவ பிரதேச சபையின் முன்னால் பிரதேசசபையின் உறுப்பினர் எலப்பிரிய நந்தராஜ் உள்ளிட்ட குழுவினரே 07.01.2017 காலை 11 மணியளவில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார். நாட்டில் நிலத்தை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய அனுமதிக்க முடியாது எனவும், இலங்கை வாழ் மக்கள் அனைவரும் ஒன்றினைந்து அம்பாந்தோட்டையில் 15 ஏக்கர் நிலத்தை...
Read More

பாதையை புனரமைக்ககோரி ஆர்பாட்டம்! (படங்கள்)

டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம – சந்திரிகாமம் தோட்டத்திற்கு செல்லும் மூன்று கிலோ மீற்றர் பிரதான வீதி கடந்த 15 வருடங்களுக்கு மேலாக மக்கள் பாவனைக்குதவாமல் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. சந்திரிகாமம் தோட்டத்தில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த பிரதான வீதியினூடாகவே டயகம நகரிற்கு தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ள வந்துச் செல்ல வேண்டும். இவ்வீதி தொடர்பில் காலங்காலமாக இப்பகுதி மக்கள் அரசியல்வாதிகள் மற்றும் தோட்ட நிர்வாகங்கள் உள்ளிட்ட பல அதிகாரிகளின் கவனத்திற்கு...
Read More

விபத்தில் பலியான மாணவி உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியில் முதலாமிடம்!

2016 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் கணித பிரிவில் அண்மையில் விபத்தில் பலியான சத்தியநாதன் சிவதுர்க்கா என்ற மாணவியே மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார். வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவியான சத்தியநாதன் சிவதுர்க்கா வைத்தியரான தனது சிறிய தாயாருடன் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த போது குருணாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்திருந்தார். மிகச்சிறந்த பெறுபேற்றை பெறக்கூடிய மாணவி என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட குறித்த மாணவி கணித பிரிவில்...
Read More

ஹம்பாந்தோட்டையில் பதற்றம்!

ஹம்பாந்தோட்டையில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கான ஆரம்ப நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலய ஆரம்ப நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று இடம்பெறுகிறது. இதனையடுத்து ஹம்பாந்தோட்டையின் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் அல்லது கூட்டங்களை நடத்த நேற்று நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. எனினும் இன்று முதலீட்டு வலய ஆரம்ப நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன் எதிர்ப்பாளர்களினால் கல்வீச்சுத் தாக்குதலும் நடத்தப்பட்டது....
Read More

நீதிமன்றின் தடை உத்தரவு! சமலுடன் ஹம்பாந்தோட்டை செல்லும் ரணில்!

நீதிமன்றத்தினால் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ள போதிலும், ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்குவதற்கு எதிராக முன்னர் திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டம் திட்டமிட்டப்படி மேற்கொள்ளப்படும் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. நேற்றில் இருந்து 14 நாட்களுக்கு ஆரப்பாட்டம் நடத்துவதற்கு நீதிமன்றினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ள 26 நபர்களின் பெயர்களும் இந்த தடை உத்தரவில் உள்ளடக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ச மற்றும்...
Read More

க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை மீள் திருத்துவதற்கான இறுதி திகதி!

2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள் திருத்துவதற்கு ஜனவரி 23ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கான மீள் திருத்தும் விண்ணப்ப பத்திரம், பெறுபேறுகளுடன் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட பரீட்சாத்திகளுக்கு எதிர்வரும் நாட்களில் தேசிய பத்திரிகைகள் ஊடாக வெளியிடப்படும் விளம்பரத்தின் படி விண்ணப்ப பத்திரத்தை பூர்த்தி செய்து அனுப்புமாறு பரீட்சைகள்...
Read More
error: Content is protected !!