Home > Slider > கினிகத்தேனையில் ஆர்பாட்டம்: அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தை சீன முதலீட்டாளருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு!

கினிகத்தேனையில் ஆர்பாட்டம்: அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தை சீன முதலீட்டாளருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு!

அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தை சீனா நாட்டு கம்பனிக்கு வழங்குவதை எதிர்த்து கினிகதேனையில் ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

1

கினிகத்தேன பஸ்தரிப்பு நிலையத்தில் கருப்பு கொடியுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி அம்பகமுவ பிரதேச சபையின் முன்னால் பிரதேசசபையின் உறுப்பினர் எலப்பிரிய நந்தராஜ் உள்ளிட்ட குழுவினரே 07.01.2017 காலை 11 மணியளவில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்.

2 4

நாட்டில் நிலத்தை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய அனுமதிக்க முடியாது எனவும், இலங்கை வாழ் மக்கள் அனைவரும் ஒன்றினைந்து அம்பாந்தோட்டையில் 15 ஏக்கர் நிலத்தை அரசாங்கம் சீன நாட்டுக்கு விற்பனை செய்யவதை தடுக்க முன்வர வேண்டும் என்றார். சுமார் 1 மணித்தியாளங்கள் வரை இடம்பெற்ற இவ் ஆர்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் ஆதரவாளர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

5
.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!