Home > மலையகம் > தலவாக்கலை குமாரகம பகுதியில் காட்டுத் தீ!

தலவாக்கலை குமாரகம பகுதியில் காட்டுத் தீ!

தலவாக்கலை நகருக்கு அருகாமையிலுள்ள குமாரகம இடத்திலுள்ள காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீ பிரதேச மக்களின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதி தீ பரவலானது இன்று (07) மாலை 6.15 மணியளவில் ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக சுமார் 1 ஏக்கர் தீயினால் அழிவுற்றிருக்குமென தெரிவிக்கப்படுகிறது .

தலவாக்கலையிலிருந்து குமாரகம ஊடக கிரேட் வெஸ்டன் பிதான பாதைக்கு செல்லும் வழியில் பயணித்த இளைஞர்கள் (விஷமிகள்) தீ வைத்திருக்கக் கூடுமென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

சுஜீவன்

Leave a Reply

error: Content is protected !!