Home > பிரதான செய்திகள் > விபத்தில் பலியான மாணவி உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியில் முதலாமிடம்!

விபத்தில் பலியான மாணவி உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியில் முதலாமிடம்!

2016 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் கணித பிரிவில் அண்மையில் விபத்தில் பலியான சத்தியநாதன் சிவதுர்க்கா என்ற மாணவியே மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவியான சத்தியநாதன் சிவதுர்க்கா வைத்தியரான தனது சிறிய தாயாருடன் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த போது குருணாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்திருந்தார்.

மிகச்சிறந்த பெறுபேற்றை பெறக்கூடிய மாணவி என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட குறித்த மாணவி கணித பிரிவில் 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலாமிடத்தினை பெற்றுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

error: Content is protected !!