Home > பிரதான செய்திகள் > ஹம்பாந்தோட்டையில் பதற்றம்!

ஹம்பாந்தோட்டையில் பதற்றம்!

ஹம்பாந்தோட்டையில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கான ஆரம்ப நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலய ஆரம்ப நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று இடம்பெறுகிறது.

இதனையடுத்து ஹம்பாந்தோட்டையின் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் அல்லது கூட்டங்களை நடத்த நேற்று நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

எனினும் இன்று முதலீட்டு வலய ஆரம்ப நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன் எதிர்ப்பாளர்களினால் கல்வீச்சுத் தாக்குதலும் நடத்தப்பட்டது.

இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!