Day

January 7, 2017

அரசியலமைப்பு குறித்த நாடாளுமன்ற விவாதம் காலவரையின்றி ஒத்திவைப்பு!

புதிய அரசியலமைப்பு யோசனைகள் குறித்த விவாதம் எதிர்வரும் 9ஆம் திகதி நாடாளுமன்றில் ஆரம்பமாகவிருந்த மூன்று நாள் விவாதம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான வழிநடத்தல் குழுவின் கூட்டம் வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்றபோது இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் பிரதமரால் நியமிக்கப்பட்ட வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையையும் நாடாளுமன்றத்தில் முன்வைத்து அதையும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் பொருட்டே இவ்விவாதம் ஒத்திவைக்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எனினும் குறித்த...
Read More

க.பொ.த. உயர் தர பரீட்சை முடிவுகள் வெளியாகின!

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த. உயர் தர பரீட்சை முடிவுகள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன. பரீட்சை முடிவுகளை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk எனும் இணையத் தளங்களில் பார்வையிடலாம். 2016 ஓகஸ்ட் 02 ஆம் திகதி இடம்பெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சையில் 315,605 பேர் பரீட்சை எழுதும் வாய்ப்பை பெற்றிருந்தனர். நாடு முழுவதிலுமுள்ள 2,204 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்ற இப்பரீட்சைக்கு, 240,991 பேர் பாடசாலை ஊடாகவும் 74,614 பேர் தனிப்பட்ட ரீதியிலும் விண்ணப்பத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டியும் மழை வேண்டியும் அட்டனில் பிரித் பிராயணம்! (Photos)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் இரண்டு பதவி பூர்தியினை முன்னிட்டு அவருக்கும் நாட்டு மக்களுக்கும்  நல்லாசி வேண்டியும் மழை வேண்டியும் பிரித் பிராயணம் ஒன்று 06.01.2017 அன்று இரவு அட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. நுவரெலியா மாவட்ட அமைப்பாளர்களான ட்பளியூ.ஜேரணசிங்க மற்றும் தர்மபிரிய அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பிரித் பாராயணத்திற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும். இதன் மத்திய மாகாணத்தில் நிலவும் வறட்சியன காலநிலையினையடுத்து ஆறுகள் ஓடைகள் நீருற்றுக்ள நீர்த்தேக்கங்கள்...
Read More

கால் நூற்றாண்டில் கால் பதிக்க காத்திருக்கும் கெர்கஸ்வோல்ட் பாடசாலை!

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கெர்கஸ்வோல்ட் இல 2 தமிழ் மகா வித்தியாலயம் தனது கால் நூற்றாண்டை காண காத்திருக்கிறது. இது குறித்து எமது செய்திசேவைக்கு கருத்து தெரிவித்த அப் பாடசலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் பா.விஜயகாந் 1941 ஆம் ஆண்டின் ஆரம்ப பகுதியில் இப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும் காலப்போக்கில் கை விடப்பட்ட கெர்கஸ்வோல்ட் தமிழ் மகா வித்தியாலயம் உத்தியோகபூர்வமாக 1992 ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் திகதி தனது பணிகளை ஆரம்பித்தது. ஆரம்பத்தில்...
Read More

பெப்ரவரி 10க்கு முன் நிலைப்பாடுகளை அறிவியுங்கள்! அல்லது அரசியலமைப்பு பேரவையை கலைத்து விடுங்கள்! ; மனோ

பெப்ரவரி 10க்கு முன் நிலைப்பாடுகளை அறிவியுங்கள்; அல்லது அரசியலமைப்பு பேரவையை கலைத்து விடுங்கள். மைத்திரி, ரணில், அனுர, மகிந்தவுக்கு மனோ கணேசன் கடிதம் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை கொண்டுவரும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் புதிய அரசியலைமைப்பு கலந்துரையாடல் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டுக்கொண்டே போகிறது. அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய வழிகாட்டல் குழுவில், தயாரிக்கப்பட்ட இடைக்கால வரைபு பற்றிய தத்தமது நிலைப்பாடுகளை முன் வைப்பதில் கட்சிகள் இடையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இனிமேலும் இதை தள்ளி வைக்க...
Read More

கினிகத்தேனையில் தளபாட விற்பனை நிலையத்தில் தீ விபத்து! கடை முற்றாக சேதம்!

கினிக்தேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகமுவ பகுதியில் கடையொன்று தீயினால் முற்றாக எரிந்துள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர். அம்பகமுவ பிரதேசத்தின் தளபாட விற்பனை நிலையைமொன்றே அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து சம்பவித்துள்ளது. வீடொன்றிலே விற்பனை நிலையம் நடத்திவந்துள்ள நிலையில் அதிகாலை திடீரென தீ பரவிய நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தளபாடங்கள் மற்றும் மெத்தைகள் என்பன எரிந்து சாம்பளாகியுள்ளது. பொலிஸரும் பொது மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன் தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்ட றியப்பட்டவிலை....
Read More
error: Content is protected !!