Home > பிரதான செய்திகள் > ஆந்திரா மாநில முதலமைச்சருக்கு ஜனாதிபதி வரவேற்பு!

ஆந்திரா மாநில முதலமைச்சருக்கு ஜனாதிபதி வரவேற்பு!

நிலைபேறான யுகத்தின் மூன்றாவது ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டத்தின் தேசிய வைபவம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்த பைவத்தில் பிரதம அதிதியாக ஆந்திரா மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு; கலந்து கொள்ளவுள்ளார். நேற்று மாலை இலங்கை வந்த இவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவேற்றார். இந்த நிகழ்வு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

நிலைபேறான யுகத்தின் மூன்றாவது ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டத்தின் தேசிய வைபவ நிகழ்வில் வெளிநாட்டு நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!