Home > Slider > ஜனாதிபதியின் இரண்டாண்டு ஆட்சி பூர்த்தியை முன்னிட்டு கொட்டகலையில் 20 வீடுகள் கையளிப்பு!

ஜனாதிபதியின் இரண்டாண்டு ஆட்சி பூர்த்தியை முன்னிட்டு கொட்டகலையில் 20 வீடுகள் கையளிப்பு!

நல்லாட்சியின் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அவர்களின் இரண்டு ஆண்டு பதவி கால பூர்த்தியை முன்னிட்டு கொட்டகலை கிருஸ்லஸ்பாம் தோட்டத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட 20 வீடுகளை அமைச்சர் பழனி திகாம்பரம் 08.01.2017 திறந்துவைத்தார்.

unnamed-23

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் பசும்பொன் தனிவீட்டுத்திட்டத்தின் தீவிபத்தினால் பாதிக்கப்பட்ட லயன் குடியிருப்புகளுக்கு மாற்றீடாக இப் புதிய தனிவீடுகள் நிர்மானிக்கப்பட்டது.

unnamed-21

மின்சாரம் உட்பட சகல அடிப்படைவசதிகளையும் வசதிகளையும் கொண்ட புதிய தனிவீடுகளை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் மத்தியமாகாணசபை உறுப்பினர்களான சே.ஸ்ரீதரன் சரஸ்வதி சிவகுரு மனிதவள தாபனத்தின் தலைவர் வீ புதிரகாமணி உட்பட அமைச்சின் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

unnamed-20

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்.

Leave a Reply

error: Content is protected !!