Home > மலையகம் > பூண்டுலோயாவில் திருத்த பணிகள் கைவிடபட்ட பொது சந்தையை மீளமைக்குமாறு கோரிக்கை!

பூண்டுலோயாவில் திருத்த பணிகள் கைவிடபட்ட பொது சந்தையை மீளமைக்குமாறு கோரிக்கை!

கொத்மலை பிரதேச செயலகத்திற்கும் பிரதேச சபைக்கும் உட்பட்ட பூண்டுலோயா நகரத்திற்கான பொது சந்தை முன்னைய அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் அமைப்பதற்கான நடிவடிக்கைகள் மேற்க்கொள்ளபட்டு வேலைதிட்டங்கள் முன்னெடுக்கபட்டன.

பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் மின்னர் இந்த வேலைத்திட்டம் தற்போது கை விடப்பட்டுள்ளது. பெரும் தொகையான நிதி ஒதுக்கிட்டின் மூலம் அமைக்கபட்ட கொங்ரீட் தூண்கள் மாத்தரமே தற்போது காட்சி அளிக்கின்றது. இந்த இடத்தில் பஸ் நிலையம் அடங்களாக சந்தை தொகுதி அமைப்பதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கபட்டது.

unnamed-601

அதுவும் நடைபெறவில்லை. அருகில் பொது மயானமும் காணப்படுகின்றது. இந்த நகரத்திற்கு தேவையான பொது மலசல கூடமும் இப்பிரதேசத்திலேயே காணப்படுகின்றது.

தற்போது பொது சந்தையும் நடைபெருகின்றது. ஒரு குறிபிட்ட சிறிய இடத்தில் பல்வேறு தேவைகளை நிறைவேற்ற கூடிய வகையில் இந்த இடத்தை அபிவிருத்தி செய்ய பலர் எத்தனிப்பதால் இது வரைக்கும் ஒன்றமே நடைபெறவில்லை. ஆகவே சரியான திட்டம் ஒன்றை வகுத்து இந்த பிரச்சனைக்கு திர்வு காணுமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பொது மக்கள் எதிர்பார்கின்றனர். குறிப்பாக பூண்டுலோயா பிரதேசத்தில் காணப்படும் பெருந்தோட்ட மக்களே இந்த நகரத்திற்கு வந்து செல்கின்றனர்.

இவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள கூடிய வகையில் இந்த நகரம் காணப்படாமை வருத்தத்திற்குறிய விடயமாகும்.
பா.திருஞானம்.

Leave a Reply

error: Content is protected !!