Day

January 10, 2017

மீண்டும் தேசிய ஆணழகர் போட்டியில் சாதனை படைத்த மலையக மாணவன்!

இலங்கை உடற்கட்டு சம்மேளத்தினால் நடாத்தபட்ட 2016 ஆம் ஆண்டு மிஸ்டர் ஸ்ரீலங்கா ஆணழகர் போட்;டியில் பங்குபற்றிய புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியின் மாணவன் மாதவன் இராஜகுமாரன் 2016 ஆம் ஆண்டிற்கான ஜூனியர் மிஸ்டர் ஸ்ரீலங்காவாக தெரிவாகியுள்ளார். இந்த போட்டியில் சுமார் 35 போட்டியாளர்கள் பங்குபற்றினர். மலைய மாணவர்கள் சாதிக்க பிறந்தவர்கள் என்பது யாருக்கும் தெரியும். தற்போதும் அண்மைக்காலமாகவும் இவர்கள் அனைத்து துறைகளிலும் சாதனைகளை மேற்க் கொண்டு வருகின்றனர். இருந்தும் இவர்களுக்கான சந்தர்பங்களும். உதவிகளும்¸ வாய்ப்புக்களும் கிடைக்காததினால் பல...
Read More

தேயிலை மலையில் தவறி விழுந்த பெண் பரிதாப மரணம்; ஹெல்போட தோட்டத்தில் சம்பவம் !

கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட கட்டுகிதுல ஹெல்பொட தோட்டம் கீழ் பிரிவில் இன்று (10) பகல் 11.30 மணியவில் 30 ஆம் இலக்க தேயிலை மலையில் பெண்கள் கொழுந்து எடுப்பதை கண்கானித்து கொண்டிருந்த பெண் கங்கானி ஒருவர் தவறுதலாக வழுக்கி 50 அடி உயரத்தில் இருந்து வீழ்ந்ததில் மரணமானார். இவர் ஹெல்பொட தோட்டத்தை சேர்ந்த விஸ்வநாதன் விமலாவதி (வயது 47) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாவார். சம்பவத்தை தொடரந்து விஸ்வநாதன் விமலாவதி புஸ்ஸல்லாவ வகுகவ்பிட்டி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு...
Read More

அமைச்சர் திகாவுக்கு ஆசி வேண்டி வணராஜா பிள்ளையார் ஆலயத்தில் பூஜை!

தொழிலாளா் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும சமுதாய அபிவிருத்தி அமைச்சா் பழனி திகாம்பரம் அவா்களின் 50வது பிறந்த தினத்தை முன்னிட்டு இளைஞா் அணியின் தலைவா் பா. சிவநேசன் தலைமையில் விசேட பூஜைகளும் வழிபாடுகளும் 10.01.2017.செவ்வாய் கிழமை டிக்கோயா வனராஐா பிள்ளையாா் ஆலயத்தில் இடம்பெற்றதை படங்களில் காணலாம். பொகவந்தலாவ நிருபா் எஸ். சதீஸ்

பெரிய நாகவத்தைக்கு செல்லும் செப்பனிடப்பட்ட புதிய பாதை திறப்பு!

அக்கரப்பத்தனை பெரிய நாகவத்தை தோட்ட குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பிரதான பாதை மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி சத்திவேல் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக 09.01.2017 அன்று திறந்ததுவைக்கப்பட்டது . இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை மத்தியமாகாண சபை முன்னால் தமிழ் கல்வி அமைச்சர் அனுசியா சிவராஜா மற்றும் மத்தியமாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சத்திவேல் ஆகியோர் கலந்துகொண்டு பாதையினை திறந்துவைத்தனர். அக்கரப்பத்தனை நிருபர்

அமைச்சர் திகாவின் அகவை ஐம்பதை முன்னிட்டு புற்றுநோய் வைத்தியசாலை சிறுவர்களுக்கு அன்பளிப்பு !

மலைநாட்டு புதிய கிராமங்கள். உட்கட்டமைப்பு வதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் 50 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற சிறுவர்களுக்கு பரிசுபொருட்களை வழங்கும் நிகழ்வு இன்று (2017-01-10) இடம்பெற்றது. அத்தோடு கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள அமைச்சின் காரியாலயத்தில செயலாளர் உட்பட அலுவலர்கள் இணைந்து வரவேற்பு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அமைச்சரின் பிறந்ததினத்தை முன்னிட்டு தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 1000...
Read More

நோய்த்தொற்றால் மயக்கம்.. அவசர சிகிச்சைப்பிரிவில் மாவை!

மாவை சேனாதிராஜா நேற்று திடீரென மயக்கமடைய காலில் இருந்த காயம் ஒன்றில் ஏற்பட்ட நோய்த்தொற்றே காரணம் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த நோய்த்தொற்று காரணமாக அவருக்கு கொழும்பு தேசிய மருத்துவ மனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மேலும் கூறப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் மயங்கி விழுந்துள்ளார். பாராளுமன்ற அமர்வின் பின்னர் இடம்பெற்ற வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடனான...
Read More

ஆசிய பசுபிக்கின் சிறந்த நிதியமைச்சர் ரவி! : லண்டன் சஞ்சிகை கௌரவம்

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இந்த ஆண்டின் சிறந்த நிதியமைச்சராக இலங்கை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, லண்டனில் இருந்து வெளியாகும் த பேங்கர் என்ற சஞ்சிகை அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 1.5பில்லியன் நிதியைப்பெற்றமை, நிலுவைக்கொடுப்பனவு பிரச்சினைக்கு தீர்வுக்கண்டமை மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த தெரிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தலைத் தீர்மானிக்கும் அதிகாரம் இல்லை! ; கைவிரித்தார் மஹிந்த

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தேர்தல் ஆணையகம் இருந்தபோதும் அதனை நடைமுறைப்படுத்தக்கூடிய அதிகாரம் ஆணையத்திடம் இல்லையென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். ஸ்ரீலங்கா மக்கள் முன்னணி தலைவர் ஜீ.எல் பீரிஸ் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை விரைவில் நடத்தக் கோரி தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தை நேற்று காலை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளிக்கும்போதே ஆணையாளர் நாயகம் மேற்கண்டவாறு கூறி கைவிரித்தார். மக்களின் ஜனநாயக உரிமை மற்றும் சர்வசன வாக்கெடுப்பு...
Read More

விமல் வீரவன்ச பொலிஸ் நிதிமோசடி பிரிவினால் கைது!

முன்னாள் வீடமைப்புத்துறை அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச பொலிஸ் நிதிமோசடிப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் நிதிமோசடிப் பிரிவில் இன்றைய தினம் காலை முன்னிலையாகி சாட்சியமளித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இன்று பகல் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் வீடமைப்புத்துறை அமைச்சராக பதவிவகித்தபோது அரசாங்க வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு அவர் மீது காணப்படுகின்றது.

சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் மூலம் இலங்கை மாணவர்களுக்கு கல்வி உதவி!

இந்தியா உட்பட உலகலாவிய ரிதியில் கல்வி சார்பாக இயங்கி வரும் நடிகர் சூர்யாவின் தொண்டு நிறுவனமான அகரம் பவுண்டேஷனின் வருடாந்த ஒன்று கூடல் இந்தியா தமிழ் நாட்டில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு அமைப்பின் வேண்டுக்கோளுக்கு அமைய இலங்கை நாட்டின் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் கலந்துக் கொண்டார். இதன் போது இந்த அமைப்பின் செயற்பாடுகள் இலங்கையில் கல்வி இராஜாங்க அமைச்சருடன் இணைந்து செயற்படுவது தொடர்பாக ஆராயபட்டது. இதன் பயனாக எதிர்வரும் காலங்களில் அகரம் பவுண்டேஷனின் கல்விசார்பான...
Read More
error: Content is protected !!