Home > மலையகம் > அமைச்சர் திகாவின் அகவை ஐம்பதை முன்னிட்டு புற்றுநோய் வைத்தியசாலை சிறுவர்களுக்கு அன்பளிப்பு !

அமைச்சர் திகாவின் அகவை ஐம்பதை முன்னிட்டு புற்றுநோய் வைத்தியசாலை சிறுவர்களுக்கு அன்பளிப்பு !

மலைநாட்டு புதிய கிராமங்கள். உட்கட்டமைப்பு வதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் 50 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற சிறுவர்களுக்கு பரிசுபொருட்களை வழங்கும் நிகழ்வு இன்று (2017-01-10) இடம்பெற்றது.

340a2458340a2466340a2477
அத்தோடு கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள அமைச்சின் காரியாலயத்தில செயலாளர் உட்பட அலுவலர்கள் இணைந்து வரவேற்பு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சரின் பிறந்ததினத்தை முன்னிட்டு தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 1000 மாணவர்களுக்கு பாடசாலை அப்பியாச புத்தகங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளது. இதன் ஆரம்ப கட்டமாக எதிர்வரும் 15 திகதி அன்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நுவரெவியாவில் இடம்பெறவுள்ள தேசிய பொங்கல் விழாவின் போது வழங்கப்படவுள்ளது.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!