Home > Slider > தேயிலை மலையில் தவறி விழுந்த பெண் பரிதாப மரணம்; ஹெல்போட தோட்டத்தில் சம்பவம் !

தேயிலை மலையில் தவறி விழுந்த பெண் பரிதாப மரணம்; ஹெல்போட தோட்டத்தில் சம்பவம் !

கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட கட்டுகிதுல ஹெல்பொட தோட்டம் கீழ் பிரிவில் இன்று (10) பகல் 11.30 மணியவில் 30 ஆம் இலக்க தேயிலை மலையில் பெண்கள் கொழுந்து எடுப்பதை கண்கானித்து கொண்டிருந்த பெண் கங்கானி ஒருவர் தவறுதலாக வழுக்கி 50 அடி உயரத்தில் இருந்து வீழ்ந்ததில் மரணமானார்.

010206

இவர் ஹெல்பொட தோட்டத்தை சேர்ந்த விஸ்வநாதன் விமலாவதி (வயது 47) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.

சம்பவத்தை தொடரந்து விஸ்வநாதன் விமலாவதி புஸ்ஸல்லாவ வகுகவ்பிட்டி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு தற்போது பிரேத அறையில் வைக்கபட்டடுள்ளது.

சம்பவத்தை கேள்வியுற்ற மக்கள் தற்போது வைத்தியசாலையை முற்றுகையிட்டள்ளனர். இதனால் வைத்தியசாலையின் அனைத்து இடங்களிலும் அழுகை சத்தம் கேட்டு வருகின்றது.

தோட்டத்திலும் இயல்பு நிலை பாதித்து உள்ளது. இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்க் கொண்டு வருகின்றனர்.

பா. திருஞானம்.

Leave a Reply

error: Content is protected !!