Home > பிரதான செய்திகள் > விமல் வீரவன்ச பொலிஸ் நிதிமோசடி பிரிவினால் கைது!

விமல் வீரவன்ச பொலிஸ் நிதிமோசடி பிரிவினால் கைது!

முன்னாள் வீடமைப்புத்துறை அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச பொலிஸ் நிதிமோசடிப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிதிமோசடிப் பிரிவில் இன்றைய தினம் காலை முன்னிலையாகி சாட்சியமளித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று பகல் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் வீடமைப்புத்துறை அமைச்சராக பதவிவகித்தபோது அரசாங்க வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு அவர் மீது காணப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!