Home > மலையகம் > அட்டனில் நடைபெற்ற இயற்கை அனர்த்தங்கள் தொடர்பிலான விழிப்புணர்வு செயலமர்வு!

அட்டனில் நடைபெற்ற இயற்கை அனர்த்தங்கள் தொடர்பிலான விழிப்புணர்வு செயலமர்வு!

இயற்கை அனர்த்தப்பிரதேசம் என அடையாளம் காணப்பட்ட அட்டன் சமனலகம பிரதேச மக்களுக்கு அனர்த்தம் தொடர்பிலான விழிப்புணர்வு செயலமர்வு 10 ம் திகதி அட்டன் சமனலகம கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

2

நுவரெலியா தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட இவ் செயலமர்வில் இயற்கை அனர்த்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் தவிர்ப்பதற்கான வழிகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.

3

கால நிலை மாற்றங்களும் இயற்கைக்கு எதிரான மனிதனின் அபிவிருத்தி செயற்பாடுகளுமே இவ்வாறான அனர்த்தங்களுக்கு வழிவகுக்கின்றன. அதே போல பொருத்தமற்ற இடங்களில் கட்டிடங்களை அமைப்பதுவும் பிரதான காரணம் என சுட்டிக்காட்டப்பட்டது. மண்ணரீப்பு ஏற்படாதவகையில் மழை காலங்களில் நீர் ஓடுவதற்கான வழிகளை மறைப்பது போன்ற விடங்கள் தெளிவுபடுத்தப்பட்டது.

5 6

நிகழ்வில் அட்டன் தெற்கு பிரதேச கிராம உத்தியோகஸ்தர் உட்பட நுவரெலியா மற்றும் கொழும்பு தேசிய கட்டிட ஆராய்சி அதிகாரிகளும் பிரதேச மக்களும் கலந்து கொண்டனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

Leave a Reply

error: Content is protected !!