Home > மலையகம் > லிந்துலையில் தேயிலைக் கடையில் தீ; பொருட்கள் சேதம்!

லிந்துலையில் தேயிலைக் கடையில் தீ; பொருட்கள் சேதம்!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை பிரதான நகரத்தில் உள்ள தேயிலை விற்பனை கடையொன்றில் ஏற்ப்பட்ட தீயினால் கடையில் இருந்த தேயிலை தூள் மற்றும் பெருமதிமிக்க பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியது. இச்சம்பவம் இன்று 11 ம் திகதி பகல் 12.30 மணியளில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

unnamed-9unnamed-8

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது கடையின் உரிமையாளர் சாமி படத்துக்கு முன்னால் விளக்கினை எரிய வைத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார்.
விளக்கினால் தீ பரவியிருக்க கூடும் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது தீயினைஏனைய கடைகளுக்கு பரவவிடாமல் பொதுமக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது .
இது தொடர்பான விசாரனையை
லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.

அக்கரப்பத்தனை நிருபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!