Day

January 12, 2017

ம.ம.முவின் தேசிய மாநாட்டை பிரமாண்டமாக நடத்த முடிவு; அனுஷாவுக்கும் உயர்பீடத்தில் இடம்!

மலையக மக்கள் முன்னணியின் தேசிய மாநாட்டை எதிர்வரும் 25,26 ஆம் திகதிகளில் நுவரெலியாவில் நடத்துவதற்கு கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. கட்சியின் தலைவரான கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்ற மத்தியசெயற்குழு கூட்டத்தில் சமகால அரசியல் விடயங்கள் சம்பந் தமாகவும் ஆராயப்பட்டுள்ளன. அத்துடன்,மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபத் தலைவரானஅமரர். பெ. சந்திர சேகரனின் மகளை கட்சியின் உயர்பீடத்துக்கு உள்வாங்குவதற்கும் தீர்மானிக் கப்பட்டுள்ளது. 5 வருடங்களுக்கு பிறகே தனது தேசிய மாநாட்டை மலையக மக்கள் முன்னணி...
Read More

வறட்சியால் மலையகத்தின் நீரேந்துகள் வற்றி வருகின்றன; மின்சார தடை ஏற்படும்!

நாட்டில் நிலவி வரும் வறட்சி காலநிலையினால் நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துக்காணப்படுகின்றது. மலையகப்பகுதிகளிலும் நீர் தட்டுப்பாடு நிலவி வருவதுடன் நீர்மின்சாரத்தின் பிரதான. நீர்தேக்கங்களான. காசல்ரி மவுஸ்ஸாகலை விலசுரேந்திர மற்றும் மேல்கொத்மலை நீர்ததேக்கங்களிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. காசல்ரீ யில் 30 அடியும் மவுஸ்ஸாகலையில் 35 அடியும் நீர்மட்டம் குறைந்துள்ளதாக லக்சபான மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர் மேலும் பத்தனை டெவன் நீர்வீழ்ச்சியிலும் நீர் குறைந்துள்ளமையினால் அதன் இயற்கை அழகு குன்றியுள்ளது மேலும்  வறட்சி நிலை தொடரும் பட்சத்தில் மின்...
Read More

தலவாக்கலை தைப்பொங்கல் விழாவில் மாணவர்களை பங்குபற்ற வைக்கும் முயற்சிக்கு ஸ்ரீதரன் எதிர்ப்பு!

தலவாக்கலையில் இடம்பெறவுள்ள மத்திய மாகாண தைப்பொங்கல் விழாவில் நுவரெலியா கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களை ஊர்வலத்தில் பயன்படுத்தி அரசியல் செய்ய முயற்சிப்பதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாதென்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார். தலவாக்கலையில் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம் பெறவுள்ள பொங்கல் விழாவுக்கு நுவரெலியா கல்வி வலயத்தைச் சேர்ந்த 12 பாடசாலைகளின் மாணவர் குழுக்களை பங்கு பற்ற நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாகாண மேலதிகக் கல்விப்பணிப்பாளர்...
Read More

இடமாற்றம் பெற்றுசெல்லும் பொலிஸ் அதிகாரிகளுக்கு பொது மக்கள் கௌரவித்து பிரியாவிடை நிகழ்வு!

இடமாற்றம் பெற்றுச்செல்லும் பொலிஸ் உதியோகஸ்தர்களுக்கு கௌரவமளித்து பிரியாவிடை நிகழ்வு மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் இன்று(12) நடைபெற்றது. 4 வருடங்களுக்கு மேல் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் கடைமையாற்றிய 16 பொலிஸ் உதியோகஸ்தர்கள் யாழ்பாணம் மற்றும் மட்டகளப்பு பிரதேசங்களுக்கு இடமாற்றம் பெற்று செல்கின்றனர். இவர்கள் மூவின மக்களுக்கு பாகுபாடின்றி சிறப்பாக சேவையாற்றியமைக்காக மஸ்கெலியா பிரதேச மக்களினால் இன்று கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அட்டன் பொலிஸ்...
Read More

2017ம் ஆண்டில் இடம்பெறவுள்ள பரீட்சைகளின் திகதிகள் வெளியீடு!

2017ம் ஆண்டில் நடைபெறவுள்ள தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியன நடைபெறும் காலம் பரீட்சை திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் திகதியும், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 12ம் திகதி முதல் 21ம் திகதி வரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்...
Read More

தீ… தீ…

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்க பகுதியில் 11.01.2017 அன்று இரவு 6.30 மணியளவில் இனந்தெரியாதோரால் நோர்வூட் – கோர்த்தி தோட்ட பாதுகாப்பு வனப்பகுதிக்கு வைக்கப்பட்ட தீயினால் சுமார் பல ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளன. நீரேந்தும் பிரதேச காட்டுப்பகுதியில் இத்தீ ஏற்பட்டதன் காரணமாக நீருற்றுக்கள் அற்றுப் போகும் அபாயம் உருவாகியுள்ளன தற்போது நீர்த்தேக்கங்களின் நீர் மற்றும் குறைந்து வரும் நிலையில் மின்சார உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும் நீர்தேக்களுக்கு அண்டிய பகுதியிலும் நீரேந்தும்...
Read More

தொடர்ந்து சேவையாற்றிய அதிபர்களுக்கு இடமாற்றம்!

நீண்டகாலம் ஒரே பாடசாலையில் அதிபர்களாக சேவையாற்றுபவர்களை சுழற்சிமுறையில் இடமாற்றம் செய்வதோடு அதிபர்கள் வெற்றிடம் காணப்படுகின்ற பாடசாலைகளுக்கு புதிய அதிபர்களை நியமிக்க வேண்டும் என மலையக ஆசிரியர் முன்னணியின் பொதுச்செயலாளர் இரவீந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட பீதுறுகாலதால மலை அடிவாரத்தின் கீழ் காணப்படுகின்ற நானுஓயா பிரதேசத்திற்குட்பட்ட கஸ்ட பிரதேச பாடசாலைகள் மற்றும் நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியை அண்மித்து காணப்படும் சில...
Read More

இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்! : சோ.ஸ்ரீதரன்

உலகெங்கும் வாழும் தமிழர்கள் கொண்டாடி மகிழும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலைக் கொண்டாடுகின்ற அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தில் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, புதுப்பானையில் பொங்கல் பொங்கும் வேளையில் பொங்கலோ பொங்கல் என்று அனைவரும் மகிழ்ந்து குரலெழுப்பி தத்தமது வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்துகின்ற பொங்கல் பண்டிகையானது தமிழர்களின் பாரம்பரிய...
Read More

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்துக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான சீமெந்துப் பைக்கற்றுகள் கையளிப்பு!

  அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்துக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான சீமெந்துப் பைக்கற்றுக்கள் வழங்கும் வைபவம் 12.01.2017 அன்று காலை மத்திய மாகாண விவசாய மீன்பிடி கால்நடை, தோட்ட உட்கட்டமைப்பு, இந்துக்கலாசார அமைச்சர் எம்.ரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான சீமெந்துப் பைக்கற்றுக்கள் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டன. தற்போது புனர்நிர்மானம் செய்யப்பட்டு வரும் ஆலயத்துக்கு சீமெந்து தேவைப்படுவதாக ஆலய பரிபாலனசபையினர் விடுத்த வேண்டுகோளினை அடுத்தே இந்த சீமெந்துப் பைக்கற்றுக்கள்...
Read More

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

மத்திய மாகாண கல்வித் திணைக்களத்திற்குட்பட்ட அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு 13.01.2017 வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படும் என மத்திய மாகாண விவசாய மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் மருதப்பாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். மத்திய மாகாண தமிழ் பாடசாலைகள் அனைத்துக்கும் 13.01.2017 வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படுவதுடன் இத்தினத்திற்கு பதிலாக இம்மாதம் 21.1.2017 சனிக்கிழமையன்று அனைத்து பாடசாலைகளிலும் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சகல அதிபர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். கேதீஸ்
error: Content is protected !!