Home > Slider > பொகவந்தலாவ கிவ் தோட்டத்தில் இளைஞன் சுருக்கிட்டு தற்கொலை!

பொகவந்தலாவ கிவ் தோட்டத்தில் இளைஞன் சுருக்கிட்டு தற்கொலை!

பொகவந்தலாவ கிவ் மேற்பிரிவு தோட்டத்தில் 24வயது இளைஞன் ஒருவர் கயிற்றினால் சுருக்கிட்ட தற்கொலை செய்த நிலையில் சடலம் ஒன்று மீட்கபட்டுள்ளது இந்த சம்பவம் 11.01.2017.புதன் கிழமை மாலை 06.30 மணி அளவில் இடம் பெற்றதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

unnamed (6)

குறித்த இளைஞனின் குடும்பத்தினர் வெளியில் சென்றிருந்த வேளையிலேயே தனியாக இருந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சென்மேரிஸ் கல்லூரியின் பழைய மாணவரான ஆறுமுகம் சத்தியராஜ் என்ற இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

unnamed (8)
இவரின் மரணத்தில் போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர், இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இளைஞனின் சடலம் மேலதிக வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி இளைஞனின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

பொகவந்தலாவ நிருபர்

எஸ்.சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!