Home > Slider > மக்கள் வாழ்வில் இன்பமும் எழுச்சியும் என்றும் பொங்க இதயம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்! : அமைச்சர் பி. திகாம்பரம் பொங்கல் வாழ்த்துச் செய்தி

மக்கள் வாழ்வில் இன்பமும் எழுச்சியும் என்றும் பொங்க இதயம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்! : அமைச்சர் பி. திகாம்பரம் பொங்கல் வாழ்த்துச் செய்தி

மக்கள் நன்றி மறவாதவர்களாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டவே தமிழர்கள் தைப்பொங்கல் பண்டிகையை காலம் காலமாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

இந்த நன்னாளில் எனக்கு வளர்ச்சிக்கு பக்க பலமாக இருக்கும் மலையக மக்களுக்கும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் நெஞ்சங்கள் உட்பட நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிதான தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தமது செய்தியில்,

உலகுக்கு ஒளியைத் தருகின்ற சூரிய பகவானுக்கும், உலக மக்களின் பசிப் பிணியைப் போக்க உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கவே தமிழர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் பாரமபரியத்தை தொன்று தொட்டு பின்பற்றி வருகின்றார்கள். அதற்கு தை மாதத்து முதல்நாளை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

தை மாதத்தில் நெற்பயிர்கள் தழைத்து வளர்ந்து உழவர்களின் உள்ளங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதால் மிகவும் உற்சாகத்துடன் பொங்கல் பண்டிகை வரவேற்கப்படுகின்றது.

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது போல, மலர்ந்துள்ள புதிய ஆண்டில் இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் வாழ்வில் வசந்தம் வீச வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்சிக்கு உந்து சக்தியாக இருக்கும் மலையக மக்களின் வாழ்வில் அமைதியும் இன்பமும் பெருகவும், மறுமலர்ச்சி பொங்கவும் மகத்தான எதிர்காலம் அமையவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!